What's new

இவ்வளவு_தாங்க_வாழ்க்கை

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
_*இவ்வளவு_தாங்க_வாழ்க்கை*_

நீண்ட தொலைவில் இருந்து இரண்டுகுடம் தண்ணீர் எடுத்து வந்து, வீட்டின் கதவை லேசாகத் திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரைக் கொண்டு வர சென்று விட்டாள் மனைவி

"அந்தநேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசிவேறு அவனுக்கு.
"வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டிவிட்டு விழுந்து விடுகிறான். இரண்டு குடம் தண்ணீரும் கொட்டி விடுகிறது.
அவனுக்கு கடுமையான கோபம் வந்து விடுகிறது.

கொஞ்சமாவது அறிவு வேணாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி.
" தூக்கி வந்த குடத்தைக் கூட இறக்க விடாமல் அவளைத் திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்க வீட்டில எப்படித் தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்றபடி கண்டபடி திட்டுகிறான்.
இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. "

நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்தத் தண்ணிய கொண்டு வற்றேன் தெரியுமா?
கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்து விடுகிறான்.

"உடனே அவள் 'இனி ஒரு நிமிஷம் கூட உன் கூட வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளின் அம்மா வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள்......

இது கணவன், மனைவிக்குள் ஒருசின்ன பிரட்சனை எவ்வளவு பெரிய முடிவை எடுக்க வைத்து விட்டது என்பதைக் கூறும் கதை.
இந்தக்கதையின் முடிவு இப்படிஇருத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்.........

அவள் தண்ணீரோடு வருகிறாள்.
இவன் ஓடிப்போய் அந்தக் குடங்களை இறக்கியவாறு நடந்ததைச்சொல்லி,

"நான் கவனிக்காமல் குடத்தின் மேல் விழுந்து தண்ணீரைக் கொட்டி விட்டேன். நீ எவ்வளவு தூரத்தில்இருந்து இந்த தண்ணீரைக் கொண்டு வருகிறாய்.என்னை மன்னித்து விடு. கொடு நான் போய் தண்ணீர் கொண்டு வருகிறேன் என்கிறான்.

உடனே அவள் பதறுகிறாள். " ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர் போனா போகட்டுங்க. நீங்க என்ன வேனும்னா கொட்டிவிட்டீங்க! தெரியாமத்தானே! அங்க தண்ணியவச்சது என்தப்பு. நான் போய் எடுத்துக் கொள்கிறேன்.
நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள்.

(அவள் திட்டியிருந்தால் இந்த அன்பு கிடைத்திருக்காது அவனுக்கு).

அவன் அப்படியே நெகிழ்ந்து போகிறான். அவள் மேல் அவனுக்கு இன்னும் அளவுகடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.
இவ்வளவு தான் நம் வாழ்க்கையும்!

_*கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை. இருவரில் ஒருவர் ஒருபடிஇறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப்படி இறங்கி வருவார்.*_
_*நம்மைப் பார்த்துத் தான் நம் பிள்ளைகள் வளர வேண்டுமம்...*_
_*"புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை"*_
 
Top