What's new

உன்னை காணாத தூரம் போகிறேன்.....

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 2
M

Mathangi

Guest
அன்பே !! உன்னை காணாத தூரம்
நான் காணாமல் போகிறேன்.....


அன்பே !! வெறுத்து போகாதே,
விலகி போகாதே,
உன் விழி எனை தேடும் தூரம்,
நான் காணாமல் போகிறேன்.....

வார்த்தைகள் வாட்டியதால்
வருத்தங்கள் தீ மூட்டியதால்
வாழ்க்கை ரணமாய் ஆனதால்
நான் காணாமல் போகிறேன்....

விருப்பங்கள் மறுக்கப்பட்டதால்
விதிகள் விதிக்கப்பட்டதால்
கனவுகள் கலையப்பட்டதால்
நான் காணாமல் போகிறேன்....

உணர்வுகள் உதாசீனமானதால்
உள்ளத்தில் விஷம் கலந்ததால்
உரிமைகள் மாறுபட்டதால்,
நான் காணாமல் போகிறேன்....

அன்பே !! நீ விரும்பி வாராதே,
விளக்கம் தாராதே,
திரும்பி ஒளிரூட்டாதே,
காதல் வாழ்க்கையை கலைத்தே
உன்னை காணாத தூரம்
நான் காணாமல் போகிறேன்......
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
காதல் தொலையாதே
காதல் தொலைக்காதே
காத தூரத்தில் கண்ணன் வருகிறான்
கண்ணின் மணியென தேடி வருகிறான்
காணாமல் போகாதே 🤗
 
M

Mathangi

Guest
காதல் தொலைந்து
காதலனும் தொலைந்து
காலம் கடந்து கண்ணீர் மட்டுமே
நிலைத்து நீடிக்கிறது....
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
காலம் கடக்கலாம்
காதலனும் கள்வனாகலாம்....
காதல் தொலைந்தால்
கசியும் கண்ணீர் இருக்காதே.....
கடந்தவைகள் கிடங்கில் கிடக்கட்டும்
கலக்கம் தொலைத்து
காதலாய் அகிலத்தையும் அணைத்து
வாழ்வோம் வா தோழியே 🤗
 
M

Mathangi

Guest
காலம் கடக்கலாம்
காதலனும் கள்வனாகலாம்....
காதல் தொலைந்தால்
கசியும் கண்ணீர் இருக்காதே.....
கடந்தவைகள் கிடங்கில் கிடக்கட்டும்
கலக்கம் தொலைத்து
காதலாய் அகிலத்தையும் அணைத்து
வாழ்வோம் வா தோழியே 🤗
tnq thozhi hug u 🤗🤗🤗
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
காலம் கடக்கலாம்
காதலனும் கள்வனாகலாம்....
காதல் தொலைந்தால்
கசியும் கண்ணீர் இருக்காதே.....
கடந்தவைகள் கிடங்கில் கிடக்கட்டும்
கலக்கம் தொலைத்து
காதலாய் அகிலத்தையும் அணைத்து
வாழ்வோம் வா தோழியே 🤗
71CBA74C-A4D3-4D49-92CB-73888588DEBD.jpeg
 
Top