What's new

என்னை கவர்ந்தவை♥

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
702
Points
113
b35fbfd03b6813890b58f4c02745e853.jpg

எங்கே உடைந்தாலும்
தேடி வந்து தூக்கி விடுகிறாய்.
உன் தோள்கள் தான்
உடைந்த நேரங்களில் எல்லாம்
சாய்ந்துகொள்ள நினைவில் வருகிறது..

நான் சுருண்டு புரண்டழும்
பிரச்சனைகளை எல்லாம்
இது ஒன்றும் இல்லை,
நீ பார்க்காததா என
நட்சத்திரங்களுக்கு நடுவில் இருந்து
பூமியை சின்னதாய் பார்த்து
பிரச்சனைகளை ரசிக்க வைக்கும்
உனக்கு முன்,
எந்த காதலும் காமமும் நட்பும்
காலடியில் சிறு துரும்பாகிப்போகிறது.

உனக்கென எந்த
உறவு முறையும் சொல்லிவிட
என்னிடம் உயர்வாய் ஏதுமே இல்லை.
இல்லாமலே எல்லாமுமாய் இருக்கட்டும்
இந்த ஆகப்பெரும்
பேரிணைப்பு!!♥♥
 
Top