What's new

ஒருதலை காதல்

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
அறியாத வயசில் நான்
புரியாத விதமாக
பல பேரு எனை கவர
ஆச தான் கொண்டேனே

மூணாம் வகுப்புல
புதுசா சேந்த புள்ள
மேல ஒரு ஆச வர
சொல்ல கூட தெரியவில்லை

ஒன்னாக ஓடி ஆடி
கண்ணா மூச்சி விளையாடி
களைப்பாகி போனாக்க
கை சோறு ஊட்டி விட்டு

அம்மா அடிச்சாக்க
கண்ண தொடச்சி விட்டு
ஆறுதலா இருந்த அவ
என் காதலினு சொல்லிக்கிட்டு

ஒருதலையா காதலிச்ச
தருதல நான் தானே

அப்புறம் நான் எத்தனையோ
பொண்ணுங்கள பாத்துப்புட்டு
எம்மனசு காதலிக்க
ஆசப்பட்ட என் கதைய
இப்போதான் சொல்லனும்னு
ஏனோ தோணுதுங்க

பள்ளி கூட இறுதியில
என் கூட படிச்ச புள்ள
மேல ஒரு காதல் வர
சொல்லத் தான் தோணவில்லை

அப்புறமா கல்லூரி
பேருந்தில் என்னோட
கூட வரும் ஒருத்தி
போனா மனம் கடத்தி

கல்லூரி காலம் வரை
என்னோட காதல் அதை
சொல்லாம நான் இருந்தேன்
இதயம் முரளி போல

மலராய் விழி மலர
பார்த்தே நா குழற
இதுவே என்னுடைய
இறுதி காதலென

சொல்ல முடிவெடுத்தே
சொன்னேன் அவளிடமும்
சொன்ன காதலையும்
அவ ஏனோ ஏற்கவில்லை

இப்படியே எந்நாளும்
என் காலம் போனாலும்
ஒருதலையா காதலிச்சு
போக வில்லை பேதலிச்சு

காதல் என்று சொல்ல
பெருசா ஒன்னும் இல்ல
மனசுல ஆசை வந்தா
மறைப்பது குற்றமில்ல

சொல்லி அடுத்தவர
காய படுத்தாம
மனசில் காதலிச்சா
அது ஒன்னும் தப்பே இல்ல

பழைய கத எல்லாம்
நினைச்சு பாக்குறப்போ
நினைத்தால் அது இனிக்கும்
லேசா மனம் வலிக்கும்

உண்மை காதலது
இன்றே புரிகிறது
ஒருதலை காதல் கொள்ள
மனமும் இனிக்கிறது ..


தோழி @shy அவர்கள் என்னுடைய காதல் வாழ்க்கை பற்றி கேட்டதால் எழுதியது . ஏதும் பிழை இருந்தால் தெரிய படுத்தவும் .
முழுக்க முழுக்க ரசிப்பதற்கு மட்டுமே எழுதினேன இவை யாரும் உண்மை இல்லை)
 
Last edited:
  • Like
Reactions: shy
Top