What's new

கடையேழு வள்ளல்கள்!

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் ஈகை செயல்கள் பற்றியும் பாடியுள்ளார். இவர்களின் கொடைமடம் செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன.

கொடைமடம் - சற்றும் யோசித்து பாராமல் பகுத்தறியாது மடமையோடு கொடை செய்வது ஆகும்.

நம்மில் எவ்வளவு பேர்க்கு ஏழு வள்ளல்களின் பெயர்களும் தெரியும்?

நான் அறிந்தது நால்வர் மட்டுமே. மீதம் உள்ள மூவரை அறிந்துகொள்ளும் எண்ணத்தில் இன்று நம் Google idam சென்றேன். அதை சிறு தொகுப்பாக உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி! 😊🙂

பேகன் 🦚

மயிலுக்கு போர்வை போர்தியவன் பேகன்.

- இவர் பொதினி(பழனி) மலைக்குத் தலைவர்.

- மழை வளம் மிக்க அந்த மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று பேகன் நினைத்தார். மயில் குளிரில் இருந்து காத்துக்கொள்ள தான் அணிந்திருந்த போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார்.

பாரி

- முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி.

- பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர் வேள்பாரி.

- தேரை ஓர் இடத்தில் நிறுத்தி விட்டு தன் மனைவி ஆதினியுடன் காட்டில் ஓர் பகுதியில் காதல் புரிந்து விட்டு திரும்பிய பாரி தனது தேரில் முல்லை கொடி ஏறி இருப்பதை கண்டு, அது படர்வதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.

காரி

- திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர் இவர்.

- கொடை கேட்டு வருபவர்களிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பு உடையவன். ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும், ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் அணிந்து ஆடுகின்ற குதிரையையும் மற்றும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது வழங்கினான்.

ஆய்

- பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்.

- ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் (நஞ்சுடைய கொடிய பாம்பு) ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் அளித்த ஒளிமிக்க ஆடையை இவன், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தானாம்.

அதியமான்

- இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்.

- இவர் ஒரு நாள் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அந்த அருநெல்லியை உண்டால், உண்டவரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும் வலிமை உடையது. அக்கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலவர் ஒளவையார்க்கு தந்து அழியாத அறப்புகழ் பெற்றார்.

நள்ளி

- அதிக மலைகள் கொண்ட கண்டீர நாட்டினர் நள்ளி.

- நள்ளி, கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது அள்ளி வழங்கினார். மேலும் பின்னர் அவர் வேறு ஒருவரிடம் சென்று கொடை கேட்காத அளவிற்கு கொடை அளித்தார்.

ஓரி

- சிறிய மலைகள் உடைய நல்ல நாட்டிற்குத் தலைவராவார். ஓரி விற்போரில் வல்லவர். அதனால் இவரை “வல்வில் ஓரி” என்றும் அழைப்பர்.

- ஓரி, நெருங்கிய கிளைகளும், பூத்துக் குலுங்கியிருக்கின்ற நல்ல மலர்களையும் உடைய, இளமையும் முதிர்ச்சியும் கொண்ட சுரபுன்னை மரங்களும், சிறிய மலைகளும் அமைந்த நல்ல நாட்டைக் கூத்தாடுவோர்க்குப் பரிசிலாக் கொடுத்தவன்.

- ஓரியிடம் பெருவளத்தைக் கொடையாகப் பெற்றதால், புலவர் வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய தொழில்களைச் செய்யாது சோம்பியிருந்து, அவற்றை மறந்து போயினராம்Screenshot_20220124-181659_Chrome.jpg
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் ஈகை செயல்கள் பற்றியும் பாடியுள்ளார். இவர்களின் கொடைமடம் செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன.

கொடைமடம் - சற்றும் யோசித்து பாராமல் பகுத்தறியாது மடமையோடு கொடை செய்வது ஆகும்.

நம்மில் எவ்வளவு பேர்க்கு ஏழு வள்ளல்களின் பெயர்களும் தெரியும்?

நான் அறிந்தது நால்வர் மட்டுமே. மீதம் உள்ள மூவரை அறிந்துகொள்ளும் எண்ணத்தில் இன்று நம் Google idam சென்றேன். அதை சிறு தொகுப்பாக உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி! 😊🙂

பேகன் 🦚

மயிலுக்கு போர்வை போர்தியவன் பேகன்.

- இவர் பொதினி(பழனி) மலைக்குத் தலைவர்.

- மழை வளம் மிக்க அந்த மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று பேகன் நினைத்தார். மயில் குளிரில் இருந்து காத்துக்கொள்ள தான் அணிந்திருந்த போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார்.

பாரி

- முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி.

- பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர் வேள்பாரி.

- தேரை ஓர் இடத்தில் நிறுத்தி விட்டு தன் மனைவி ஆதினியுடன் காட்டில் ஓர் பகுதியில் காதல் புரிந்து விட்டு திரும்பிய பாரி தனது தேரில் முல்லை கொடி ஏறி இருப்பதை கண்டு, அது படர்வதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.

காரி

- திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர் இவர்.

- கொடை கேட்டு வருபவர்களிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பு உடையவன். ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும், ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் அணிந்து ஆடுகின்ற குதிரையையும் மற்றும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது வழங்கினான்.

ஆய்

- பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்.

- ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் (நஞ்சுடைய கொடிய பாம்பு) ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் அளித்த ஒளிமிக்க ஆடையை இவன், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தானாம்.

அதியமான்

- இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்.

- இவர் ஒரு நாள் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அந்த அருநெல்லியை உண்டால், உண்டவரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும் வலிமை உடையது. அக்கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலவர் ஒளவையார்க்கு தந்து அழியாத அறப்புகழ் பெற்றார்.

நள்ளி

- அதிக மலைகள் கொண்ட கண்டீர நாட்டினர் நள்ளி.

- நள்ளி, கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது அள்ளி வழங்கினார். மேலும் பின்னர் அவர் வேறு ஒருவரிடம் சென்று கொடை கேட்காத அளவிற்கு கொடை அளித்தார்.

ஓரி

- சிறிய மலைகள் உடைய நல்ல நாட்டிற்குத் தலைவராவார். ஓரி விற்போரில் வல்லவர். அதனால் இவரை “வல்வில் ஓரி” என்றும் அழைப்பர்.

- ஓரி, நெருங்கிய கிளைகளும், பூத்துக் குலுங்கியிருக்கின்ற நல்ல மலர்களையும் உடைய, இளமையும் முதிர்ச்சியும் கொண்ட சுரபுன்னை மரங்களும், சிறிய மலைகளும் அமைந்த நல்ல நாட்டைக் கூத்தாடுவோர்க்குப் பரிசிலாக் கொடுத்தவன்.

- ஓரியிடம் பெருவளத்தைக் கொடையாகப் பெற்றதால், புலவர் வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய தொழில்களைச் செய்யாது சோம்பியிருந்து, அவற்றை மறந்து போயினராம்View attachment 723
Wow, அற்புதம் 👌👌👌புதிய தகவல்கள் 🥰❤அருமை அருமை 🥰@Aadhini
 
Top