What's new

கதை சொல்லவா..

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Sorry I deleted that thread...

மாலையிடும் சொந்தம்

முன் கதை சுருக்கம்

கும்பகோணத்தில் உணவகம் நடத்தி வருபவர்களின் குடும்ப கடைசிப்பெண் சஞ்சனாவிற்கும் கோயம்புத்தூரில் ஜவுளி வியாபாரம் செய்யும் குடும்பத்தின் வாரிசான பெங்களூரில் நிறுவனம் நடத்தி வரும் மாப்பிள்ளைக்கும் திருமணம் நிச்சயமாகிறது. சஞ்சனாவின் அம்மா மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர். அக்கா திருமணமானவர். தாத்தா பாட்டி என கூட்டுக்குடும்பம்.

பெண்ணும் மாப்பிள்ளையும் தினமும் பேசிக் கொண்டிருக்கின்றனர்...திருமண நாள் நெருங்கி விட்டிருந்தது.

மாலையிடும் சொந்தம்

அத்தியாயம் 5

கும்பகோணத்தில் சஞ்சனாவின் வீடு இருந்த தெருவே கோலாகலம் பூண்டிருந்தது...ஓட்டல் காரங்க வீட்டு கல்யாணம் என்று அதுவே பேச்சாக இருந்தது..

சஞ்சனாவின் அம்மா வழி தாத்தாவும் வந்துவிட்டிருந்தார். பேத்தியின் மருதாணி நிகழ்வு அன்று.. வீட்டில் பலவகை உணவு பதார்த்தங்களின் மணம்.

உணவக பிரதான சமையல்காரரின் கைப்பக்குவத்தில் மைசூர் பா, முந்திரி கேக், பூசணிக்கா அல்வா இன்னும் பல...கல்யாண மிக்ஸர் என கார வகைகள் ஒரு புறம்...அப்பா வழி பாட்டியம்மா தான் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் ...

மருதாணி இட்டுக் கொள்ள சஞ்சனா தயாராகி இருந்தாள்...

மணப்பெண்ணை விட மற்ற பெண்களுக்கு தான் ஆர்வம் அதிகமாக இருந்தது....

அக்கா, சித்தி , சஞ்சனாவின் தோழி, குழந்தைகளென எல்லாரும் அமர்ந்து விட்டனர்...

அம்மாவை வற்புறுத்தி பார்த்தும் மருதாணி வைத்துக் கொள்ள மறுத்துவிட்டார்..

அத்தையம்மாவிடம் கேட்க பயந்து விட்டுவிட்டனர்..

மருதாணி போடுவதற்கு வந்திருந்த பெண் கேட்டாள்...

'மாப்ள பேர்ல முதல் எழுத்து போட்டுக்கலாமா..'

உச்சரித்துப் பார்த்தாள் '..ம்ம்...'

ஆங்கிலத்தில் மட்டும் முதல் எழுத்து போட்டுக்கலாம்...ஆர் என உள்ளங்கையில் கலிகிராஃபி (எழுத்துக் கலை) எனும் கலை வடிவில் வரைந்தாள்...

முழங்கை வரையிலும் , கால்களிலும் அழகாக மருதாணியிடப்பட்டது...

'அம்மூ .....'

வந்து விட்டான் அத்தையின் ஒற்றைப் புதல்வன்....

சஞ்சனாவிற்கு அப்பாடா என்று நிம்மதி அம்மூ அழைப்பில்...அவனிடம்தான் பகிர்ந்து கொள்வாள் பெரும்பாலும்...

'அழகா இருக்க டா'

4 மணி நேரம் விடனும்...ஆளாளுக்கு கவனித்துக் கொண்டார்கள்... எலுமிச்சை சாரில் சீனி நனைத்து மருதாணியில் வைத்து விட்டான் ...

'நல்லா சிவக்கும் பாரு'

அம்மா வந்து எல்லாருக்கும் உணவு ஊட்டி விட்டார்கள்...அக்காவுக்கு அத்தான் ஊட்டிக் கொண்டிருந்தார்.

சொந்தங்கள் கூடியிருந்ததில் அத்தனை மகிழ்ச்சியும் ஆரவாரமும்...

அன்றிரவு அவன் அழைத்திருந்தான்...சிவந்திருந்த மருதாணியை சிலாகித்து முகத்தையும் சிவக்க வைத்தான்....

ஒரே நாள் இருந்தது ... அதிகாலையிலேயே அழகிய பந்தல் நட்டு, நிலைக் கதவில் மாவிலை தோரணம் கட்டி லங்கரிக்கப்பட்டிருந்தது..

மாலையில் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிடுவர் என அருகில் இருந்த அவர்களின் ஒரு வீட்டை ஏற்பாடு செய்திருந்தனர்..கல்யாண மண்டபத்திலும் அறைகள் இருந்தன...

விடிந்தால் கல்யாணம். சஞ்சனா திருமதி ஆகி விடுவாள்...தோழியும் சித்தி பெண்ணும் உடனிருந்தனர். அவனிடம் சரியாக பேச முடியவில்லை...செய்தி பரிமாற்றங்கள் மட்டும் புலனத்தில்.

'சஞ்சு..'

'ம்ம்..'

'சாப்ட்டியா...'

'சாப்டேன்.. . நீங்க ?'

'நம்ம சமையற்காரர் அருமையா செஞ்சு குடுத்தார்... ஆச்சுமா...'

'தூங்கலாமா...'

'இப்பவே தூங்கனுமா..'

'இனி எப்பவுமே ஒன்னாதான இருக்க போறோம். நிறைய பேசலாம். அதிகம் மொபைல் பாக்காம தூங்கு...'

'நேரத்தோட தூங்கு ..அப்பதான் முகம் நல்லா இருக்கும்....'

தோழியின் அறிவுரை வேறு..

தூங்கி விட்டாள்...

விடியலை நோக்கிய கனவுகளுடன்....

தொடரும்...

வெண்ணிலா
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133

மாலையிடும் சொந்தம்

அத்தியாயம் - 6

'மாங்கல்யம் தந்துனானே...
மம ஜீவன ஹேதுனா, கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்...'

கெட்டி மேளம்.. கெட்டி மேளம்...

அட்சதை தூவப்பட, உறவுகள் மகிழ, பெற்றோர் கண்கள் கலங்க....

சங்கல்பம் செய்து கொண்டு மங்கல நாணை சஞ்சனாவின் கழுத்தில் அணிவித்திருந்தான் ...

நெற்றி உச்சியிலும் மாங்கல்யத்திலும் குங்குமம் இட்டு தன்னில் சரிபாதி ஆக்கியிருந்தான்..

சஞ்சனாவிற்கு கண்ணீர் எட்டிப் பார்த்தது. ஆனந்தக் கண்ணீரா என்று தெரியவில்லை...

கண்களை மூடித் திறந்து, 'நானிருக்கிறேன்' என்று சைகையில் உணர்த்தினான்...

அக்னியை மூன்று முறை வலம் வந்து இல் வாழ்வில் அடியெடுத்து வைத்தனர்..

ஆசிர்வாதங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் , புகைப்படங்கள், உணவு எல்லாம் முடிந்து சஞ்சனா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் மணமக்கள்.

என்னதான் பேசிப் பழகியிருந்தாலும் அவனின் அருகாமையில் தடுமாறித்தான் போனாள் பெண்ணவள்..

'சஞ்சு... மாப்பிள்ளய அறைக்கு அழைச்சிட்டு போ நீனு.. ஓய்வெடுக்கட்டும் ...' - பாட்டியம்மா

'பரவால்லங்க பாட்டிமா.. நான் வீட்ட சுத்திப் பாக்கறேன்...'

கூடத்திற்கு மட்டுமே இதற்கு முன் வந்திருக்கிறான்

வீடு நிறைய உறவுகள்...
சஞ்சனாவுடன் சுற்றிப் பார்த்தான்..

இதுதான் முற்றம்...இது பூஜையறை, இது கொல்லை, கிணறு, இது நான் நட்ட ஜாதிமல்லி...

'அதென்ன சஞ்சு பூவில் ஜாதி... மனுஷங்களே ஜாதி பாக்கக் கூடாது..நாம வேற பேர் வச்சுக்கலாம்...'

பிடித்திருந்தது...

கடைசியாக வந்து ஊஞ்சலில் அமர்ந்தான்..

'நல்லா இருக்கு பழைய கால மர ஊஞ்சல்...'

'ம்ம்'

ஓய்வெடுக்கவே நேரமில்லை... இரவில் தான் தனிமை கிடைத்தது... மொட்டை மாடியின் நிலா வெளிச்சத்தில் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர்..

அத்தை மகன் அலைபேசியில் அழைத்திருந்தான்...

'அம்மூ...இந்த நேரத்தில் தொந்தரவு செய்யக்கூடாதுதான்....2 நாளில் வரேற்பு.. பனியா இருக்கு..ஜலதோஷம் பிடிக்கறக்குள்ள அறைக்கு போவீங்களாம். அங்க பேசலாம் காலைல வரை..'

'உன்ன...'

'சரி இறங்கி வரோம்...'

'அவன் சத்தமாக சிரித்தான் எதிரில் பேசுவது கேட்டதால்...'

'நல்லா தூங்கனும் சனா... காலைல பயணம் இருக்கு. நானும் வண்டி ஓட்டனும்.. நேரத்தில் எந்திரிச்சிருப்ப..வா தூங்கலாம். ..'

நேரத்தில எழுந்து பழக்கமிருக்கு எனக்கு

ஆஹான்...

சரி என்ன எழுப்பி விடுவயாம் வா...

'ஆமா அதென்ன சனா'

'அம்மு, சஞ்சு, சஞ்சனா எல்லாரும் கூப்டறது.. நான் சனா னு தனியா கூப்டுக்கறேன்...'

'அறை அழகா இருக்கே... உன்ன மாதிரியே...'

'தூங்கலாம் சொன்னீங்க. இப்படி புகழ்ந்தா எப்படி ??'

'சரிசரி இந்தா உனக்கு என் , நம் திருமண பரிசு...'

'பிரிச்சு பாக்கட்டா ..'

'பாரு..'

பாரதியின் கவிதைத் தொகுப்பு....

வாழ்வில் என்னோடு இணையும் நம் இல்லத்து அரசிக்கு ....முதல் பரிசு ..

பேரன்புடன்,

ரவி வர்மன்....

அழகாக கையெழுத்திட்டிருந்தான்

'ரொம்ப பிடிச்சிருக்கு...நன்றிகள் பல...'

நெகிழ்ந்தாள்...

'குட் நைட் சனா...'

'ம்ம் ..'

'இரவு வணக்கம்...'

'பார்ரா...தமிழ் கொஞ்சுது உன்கிட்ட.. '

நித்திரையில் ஆழ்ந்தனர் நிமிடங்களில்....

தொடரும்

வெண்ணிலா
 
AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
Sorry I deleted that thread...

மாலையிடும் சொந்தம்

முன் கதை சுருக்கம்

கும்பகோணத்தில் உணவகம் நடத்தி வருபவர்களின் குடும்ப கடைசிப்பெண் சஞ்சனாவிற்கும் கோயம்புத்தூரில் ஜவுளி வியாபாரம் செய்யும் குடும்பத்தின் வாரிசான பெங்களூரில் நிறுவனம் நடத்தி வரும் மாப்பிள்ளைக்கும் திருமணம் நிச்சயமாகிறது. சஞ்சனாவின் அம்மா மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர். அக்கா திருமணமானவர். தாத்தா பாட்டி என கூட்டுக்குடும்பம்.

பெண்ணும் மாப்பிள்ளையும் தினமும் பேசிக் கொண்டிருக்கின்றனர்...திருமண நாள் நெருங்கி விட்டிருந்தது.

மாலையிடும் சொந்தம்

அத்தியாயம் 5

கும்பகோணத்தில் சஞ்சனாவின் வீடு இருந்த தெருவே கோலாகலம் பூண்டிருந்தது...ஓட்டல் காரங்க வீட்டு கல்யாணம் என்று அதுவே பேச்சாக இருந்தது..

சஞ்சனாவின் அம்மா வழி தாத்தாவும் வந்துவிட்டிருந்தார். பேத்தியின் மருதாணி நிகழ்வு அன்று.. வீட்டில் பலவகை உணவு பதார்த்தங்களின் மணம்.

உணவக பிரதான சமையல்காரரின் கைப்பக்குவத்தில் மைசூர் பா, முந்திரி கேக், பூசணிக்கா அல்வா இன்னும் பல...கல்யாண மிக்ஸர் என கார வகைகள் ஒரு புறம்...அப்பா வழி பாட்டியம்மா தான் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் ...

மருதாணி இட்டுக் கொள்ள சஞ்சனா தயாராகி இருந்தாள்...

மணப்பெண்ணை விட மற்ற பெண்களுக்கு தான் ஆர்வம் அதிகமாக இருந்தது....

அக்கா, சித்தி , சஞ்சனாவின் தோழி, குழந்தைகளென எல்லாரும் அமர்ந்து விட்டனர்...

அம்மாவை வற்புறுத்தி பார்த்தும் மருதாணி வைத்துக் கொள்ள மறுத்துவிட்டார்..

அத்தையம்மாவிடம் கேட்க பயந்து விட்டுவிட்டனர்..

மருதாணி போடுவதற்கு வந்திருந்த பெண் கேட்டாள்...

'மாப்ள பேர்ல முதல் எழுத்து போட்டுக்கலாமா..'

உச்சரித்துப் பார்த்தாள் '..ம்ம்...'

ஆங்கிலத்தில் மட்டும் முதல் எழுத்து போட்டுக்கலாம்...ஆர் என உள்ளங்கையில் கலிகிராஃபி (எழுத்துக் கலை) எனும் கலை வடிவில் வரைந்தாள்...

முழங்கை வரையிலும் , கால்களிலும் அழகாக மருதாணியிடப்பட்டது...

'அம்மூ .....'

வந்து விட்டான் அத்தையின் ஒற்றைப் புதல்வன்....

சஞ்சனாவிற்கு அப்பாடா என்று நிம்மதி அம்மூ அழைப்பில்...அவனிடம்தான் பகிர்ந்து கொள்வாள் பெரும்பாலும்...

'அழகா இருக்க டா'

4 மணி நேரம் விடனும்...ஆளாளுக்கு கவனித்துக் கொண்டார்கள்... எலுமிச்சை சாரில் சீனி நனைத்து மருதாணியில் வைத்து விட்டான் ...

'நல்லா சிவக்கும் பாரு'

அம்மா வந்து எல்லாருக்கும் உணவு ஊட்டி விட்டார்கள்...அக்காவுக்கு அத்தான் ஊட்டிக் கொண்டிருந்தார்.

சொந்தங்கள் கூடியிருந்ததில் அத்தனை மகிழ்ச்சியும் ஆரவாரமும்...

அன்றிரவு அவன் அழைத்திருந்தான்...சிவந்திருந்த மருதாணியை சிலாகித்து முகத்தையும் சிவக்க வைத்தான்....

ஒரே நாள் இருந்தது ... அதிகாலையிலேயே அழகிய பந்தல் நட்டு, நிலைக் கதவில் மாவிலை தோரணம் கட்டி லங்கரிக்கப்பட்டிருந்தது..

மாலையில் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிடுவர் என அருகில் இருந்த அவர்களின் ஒரு வீட்டை ஏற்பாடு செய்திருந்தனர்..கல்யாண மண்டபத்திலும் அறைகள் இருந்தன...

விடிந்தால் கல்யாணம். சஞ்சனா திருமதி ஆகி விடுவாள்...தோழியும் சித்தி பெண்ணும் உடனிருந்தனர். அவனிடம் சரியாக பேச முடியவில்லை...செய்தி பரிமாற்றங்கள் மட்டும் புலனத்தில்.

'சஞ்சு..'

'ம்ம்..'

'சாப்ட்டியா...'

'சாப்டேன்.. . நீங்க ?'

'நம்ம சமையற்காரர் அருமையா செஞ்சு குடுத்தார்... ஆச்சுமா...'

'தூங்கலாமா...'

'இப்பவே தூங்கனுமா..'

'இனி எப்பவுமே ஒன்னாதான இருக்க போறோம். நிறைய பேசலாம். அதிகம் மொபைல் பாக்காம தூங்கு...'

'நேரத்தோட தூங்கு ..அப்பதான் முகம் நல்லா இருக்கும்....'

தோழியின் அறிவுரை வேறு..

தூங்கி விட்டாள்...

விடியலை நோக்கிய கனவுகளுடன்....

தொடரும்...

வெண்ணிலா
Anushka madhiri thaga thaganu mindringow
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
மாலையிடும் சொந்தம்

அத்தியாயம் - 7

அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது சஞ்சனாவிற்கு...

'என்ன சனா எந்திரிச்சிட்டியா.. வா அப்டியே ஒரு நடை நடந்துட்டு வருவோம் மகாமகம் குளம் வரை...'

'குளிச்சு தயாராகி கோயிலுக்கு போய்ட்டு வரலாமா..காலைலை சாப்ட்டதும் ஊருக்கு கிளம்பிடுவோமே...'

திருமண வைபவம் முடிந்திருந்த வீட்டில், களைப்பினால் ஒரு சிலரைத் தவிர எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
சொல்லிவிட்டு கிளம்பினர்.

காலையில் புத்துணர்வுடன், பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் நண்பனுக்கு
கணவனைக் காட்ட புறப்பட்டாள்.

தீப தூப ஆராதனை பார்த்து , பெருமாளிடம் மானசீக உரையாடல் நிகழ்த்தினாள்.

'இனி அடிக்கடி உன்ன பாக்க வரமுடியாது. புதுசா வாழ்க்கைல அடியெடுத்து வைக்கறேன். நல்லபடியா வழி நடத்தறக்கு வழிகாட்டு வழக்கம்போல'

'போலாமா சனா..'

பிரகாரம் சுற்றி வந்து, வடதிசையில் விழுந்து கும்பிட்டாள்...குலுங்கி குலுங்கி அழுதாள் அனிச்சை செயலாக. கண்ணில் தாரை தாரையாய் கண்ணீர்...

'என்னாச்சு சனா?'

தொட்டு தூக்கி நிறுத்தி, தோள்களில் ஆதரவாய் சாய்த்துக் கொண்டான் அவளவன்...

சாரங்கபாணி பெருமாள் அவளைப் பார்த்து புன்னகைத்தார்..

வெளிப்பிரகார படிகளில் சற்று நேரம் அமர்ந்து இருந்தனர். பேசவே இல்லை . மனம் ஒரு அமைதியில் நிலைத்தது.

வீட்டில் ஆளாளுக்கு கண்கலங்கினார்கள். சஞ்சனாவும் கலங்கித்தான் போனாள். முதல் முறை ஒரு தாவரத்தை பெயர்த்து எடுத்து வேறொரு இடத்தில் வைக்க போறாங்களே. உயிர் பிடிக்க நாளாகும்.

சஞ்சனாவின் மாமியார் சமாதானம் சொன்னார்.

'கவலைப்படாதீங்க. நல்லா பாத்துக்கறோம்'

விடைபெற்று கிளம்பினர்.

கோயம்புத்தூர்.

ரவியின் வீடு அழகாக இருந்தது.. சிறிய அழகிய தோட்டம், கொரியன் புல்தரை என பசுமையாய் வரவேற்றது..

விளக்கேற்றி வீட்டின் அங்கமானாள்...

அவனின் அறையில் புத்தகங்களே காட்சிப் பொருள்களாய் நிறைந்திருந்தன. சில ஓவியங்கள் ஆங்காங்கே. ரம்மியமாய் இருந்தது.

இரு நாள்கள் புதிய இடம் புதிய மனிதர்கள். சற்று சிரமமாகத் தான் உணர்ந்தாள். எல்லாரும் நன்றாகத் தான் பேசினர். கணவனும் உடன் படித்த நண்பன் போல இயல்பாக பேசினான்..

அவனின் அப்பாவிற்கு மட்டும் பயம் இருந்தது அந்த வீட்டில். மருமகளிடம் அன்பாகவே பேசினார்.

அவனுடன் சேர்ந்து மேல்மட்டத்தை மட்டும் பிரதிபலிக்கும், காகித பூ மரங்கள் இருபுறமும் அமைந்த அழகிய அமைதியான அகன்ற சாலையில் நடைப்பயிற்சி செய்தாள்.

வரவேற்பிற்கு முந்தைய நாள் சஞ்சனாவின் குடும்பம், உறவினர்கள் வந்து விட்டிருந்தனர். நீண்ட நாள் பிரிந்தது போல ஓடிச்சென்று கரம்பற்றிக் கொண்டாள். பெண் வீட்டார் தங்க ஒரு ஹோட்டலில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமண வரவேற்பு நாளும் வந்தது. மாலையில்தான் என்பதால் நிதானமாகவே தயாராகினர்.

தொடரும்....

வெண்ணிலா
 
Top