What's new

காடுகள்..

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
ஓ தேசமே..

எனை யாரென்று நீ கேட்டால் ..
உன் எதிர்காலம் நான் என்பேன்..
எந்த ஊர் என்று நீ கேட்டால்..
உன் உயிர் மூச்சே என் ஊர் என்பேன்!!

மண்ணோடு பேச என் வேரை விட்டு..
வானோடு பேச ஓங்கியும் வளர்ந்து..
நீர் தேவை என்று அதையே குடித்து..
காற்றோடு கொஞ்சம் சரசங்கள் கொண்டு..
நெருப்புக்கு என் மீதோ கோபங்கள்
உண்டு..

ஐம்பூதங்களும் எனது தேவை !
ஐம்பூதததிற்கும் நான் தேவை !
எனும் ஒப்பற்ற நிலையில்..
உன்னிடம் செத்து மடியும் ஜீவன் நான்.

நீ வாழ உன் வீட்டை அலங்கரிக்க..
என் கூட்டம் எல்லாம் நீ களை எடுப்பாய்..
இருந்தாலும் உன் நாவை நீ நனைக்க..
மழை நீரை மண் மீது இறக்கிடுவேன்..

என்னை நீ கொன்று விட்டு குடியேறும்..
இடம்தனிலே கரியமில காற்றிருக்கும்..
உன் சுவாசம் அதை தாங்காதென்றே..
உனக்காக ஆக்சிஜனை நான் தருவேன்!!

கதிரவனின் கோபக்கணல் தாங்காமல்..
என்னோட மடி மீது நீ அமர்வாய்..
அப்போதும் உன் மீது பாசம் கொண்டே..
உனக்காக என் கனிகள் நான் தருவேன்!!

மழை பெய்து மண் அறித்து போகாமல்.
என் கரங்கள் நான் விரித்து தான் காப்பேன்..
என் உயிரை சில நேரம் நான் விடுத்தே..
உன் துன்பம் கொஞ்சம் தான் நான்
தீர்ப்பேன்..

பொல்லாராய் நீ மாறி சில் நேரம்..
பெரும் தீங்கு எனக்கிங்கு செய்தாலும்..
அகழ்வாரை தாங்கும் நிலம் போல!
எந்நாளும் உன்னை நான் காப்பேன்!!

இப்போது சொல் நான் யாரென்று?
இம்மண்ணிலே எனக்கொரு பேர் உண்டு..
எல்லா விலங்கு பறவையின் வீடு!

என்றும் என் பெயர்தான் காடு!!

(
தோழி
@shy அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதியது. நன்றாக இருந்தால் வழக்கம் போல் உங்கள் விருப்பங்களை அளிக்கவும். ஏதேனுமm பிழைகள் இல்லை கருத்துக்களை தெரிய படுத்தவும்.)

அன்புடன்
The Popeye


images (34).jpeg
 
Top