What's new

காட்டு வாசம்

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
காத்தால காணாங்குருவி,
காதுல வந்து சொல்லும் அருவி,
காளை மாடு பூட்டிக்கு,
காலை வேலை போகுதடி..

உச்சந்தலை வெயில பார்த்து,
உடல் முழுசும் வியர்வை வாசம்,
ஊரோரம் ஊத்து தண்ணி,
உள்ளங்கையில் பருகினா மனம் நிரம்புதடி..

காட்டு முயலு வழிகாட்டும்,
வயலு நண்டு ஒளிஞ்சோடும்,
பூத்திருந்த பூண்டுச்செடி
கால ரெண்ட கிழிக்கிதடி..

உச்சி வெயில் கடிகாரம்,
உழவனுக்கு அது ரெண்டாம் தாரம்,
அடி வயித்துல பசிக்குதுனு,
அலறி அடிச்சு வயிறு கலங்குதடி..

தூக்குசட்டி தூக்கி பார்த்து,
துவையல் வாசம் என்ன தொலைச்சதடி,
நீ வச்ச மீன் குழம்பு வாசம்..
காடு முழுக்க வீசும்..

உன்னுடைய நெத்தி முடி,
உன் அழகை சொல்லும் ஒத்த முடி,
கை பிசஞ்ச சோத்துல தான்,
கையில் வந்ததடி‌..
உன்னை நினைச்சு பார்த்து நினைச்சு பார்த்து உறவு வளர்ந்தடி..

ஒய்யாரமா மூங்கில் மரம்,
ஓய்வ தேடி மனசு ஓடும்..
வண்டு சத்தம் தாலாட்டுபாடி,
வசியம் செய்ஞ்சு தூங்க வைச்சதடி..

கண் உறங்கி போனேனடி..
காளை மாடும் திரும்பி வந்தடி..
சாயங்காலம் நேரமாச்சு..
சந்திரனும் வந்தாச்சு..
உன்ன சந்திக்கவே சத்தியமா மனசு ஏங்குதடி,

உன் கண்ணுல இருக்க காதல பார்க்க மனசு நோகுதடி..
kisan.jpg
 
Top