What's new

கால வழு

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
முன்னொரு காலத்தில்..
பனித்துளிகள் மேல் புரண்டேன்
மழைதுளியுடன் விளையாடினேன்
பூக்களின் மொழி மொழிந்தேன்
எறும்புகளுடன் ரயில் பிடித்தேன்
விண்மீன்களை கண்ணடித்தேன்
மலர் காம்பில் தேன் உறிந்தேன்
.
.
.
.
.
முன்னோரு காலத்தில்...
பட்டாம்பூச்சியுடன் மகரந்த சிறகடித்தேன்
தவளையின் கேள்விக்கு விடையளித்தேன்
பாவாடை பறவையாய் சுழல பறந்தாடினேன்
சுவர்க்கோழியின் இரகசியம் ஆமோதித்தேன்
அணில்பிள்ளையுடன் உடன்படிக்கை இட்டுவிட்டேன்
தொட்டாசிணுங்கியுடன் செல்ல சண்டையிட்டேன்
.
.
.
.
.
.
முன்னொரு காலத்தில்.....
வானவில்லுக்கு வண்ணம் தீட்டும் போட்டி வைத்தேன்
நிலவுக்கும் பொட்டு வைத்தேன்
சிப்பிகளை பொக்கிஷமாய் பதுக்கி வைத்தேன்
பொன்வண்டை தீப்பெட்டியில் சிறையடைத்தேன்
சூரியனை கைவிரல்களில் கைதாக்கினேன்
கல் எடுத்து கடவுளாக்கி விளையாடினேன்
.
.
.
.
.
முன்னொரு காலத்தில்....
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
சூரியனை கைவிரல்களில் கைதாக்கினேன்
கல் எடுத்து கடவுளாக்கி விளையாடினேன்
Prof Bruce Lipton calls this as the period of Heaven. What all the child thinks, It actually IS.
 
Top