What's new

சிக்கல்களுக்கு தீர்வு...Ctrl + alt + del

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
சிக்கல் வரும் போது..

சிக்கல் வரும் போது, ஒட்டுமொத்தச் சிக்கலையும் எண்ணி மலைக்கவோ, மருளவோ, தயங்கவோ கூடாது.

சிக்கலைப் பகுதிகளாகப் பிரித்துப் பகுத்து, காரணம் அறிந்து, ஒவ்வொன்றாகத் தீர்வு கண்டால் ஒட்டு மொத்த சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும்.

சிக்கலுக்கான காரணம் கண்டறியப்பட்டு அதன் வழி தீர்வுக்கு வர வேண்டும்.

நூற்கண்டு சிக்கலாகி விட்டால் ஒட்டு மொத்தமாகப் பிடித்து இழுத்தால் இன்னும் சிக்கலாகி விடும்.

நூலின் தலைப்பைக் கண்டறிந்து அதன் வழி சிக்கலைத் தீர்த்தால் சிக்கல் தீர்ந்து விடும்

ஒரு நிர்வாகியின் அறையில் ஒரு கணினியின் படமும், அதன் கீழே.,

"சிக்கல்களுக்கு தீர்வு...Ctrl + alt + del +" என்றிருந்தது.

அவரிடம் விளக்கம் கேட்ட போது சொன்னார்,

Ctrl என்பது ( Control ),(கட்டுப்படுத்தல்)

alt என்பது ( alternate) ,( மாற்று..)

del என்பது (delete ),( நீக்குதல்..

சிக்கல் வரும் போது நம்மை நாமே
கட்டுப்படுத்தி, மாற்று வழியை யோசித்தால் வந்த சிக்கலை நீக்கி விடலாம்"..

வாழ்க்கைக்கு உதவும் கணினியின் குறியீட்டு சொற்கள் இவை என்றார்.,

*ஆம்.,தோழர்களே.,*

*மாற்றத்தை ஏற்படுத்தினால் தான் முன்னேற முடியும் என்பதைப் புரிந்து கொண்டு புதிய சிந்தனைகளை புகுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.*

*வழக்கமாக செய்கின்ற வேலைகளை மாற்றி செய்வதற்கு முயற்சித்தாலே போதும். மாற்று சிந்தனைகள் மலரத் தொடங்கி விடும்.*

*வாழ்வில் சிக்கல்கள் ஏற்படும் போது அவற்றைத் தீர்க்க முனையும் போது அதற்காக பல மாற்று வழிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் எந்த சிக்கல்களில் இருந்தும் வெளிப்படலாம்..✍🏼🌹*
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
Good message 👌
Nanum ini follow panna try panren " Ctrl + alt + del "
 
Top