What's new

தமிழ் இலக்கியத்தில் மணி கன்வர்ஷன்

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
நம்மூர்லருந்து நெறையா பேர் பணம் சம்பாதிக்க ஊர் தேசம்லாம் போய் கஷ்ட்டப்பட்டு பணம் சேர்க்குறாங்கல்ல. அவங்களுக்கு உபயோகமா இருக்கட்டும் னு ஓரு போஸ்ட் தான் இது. மக்கா….. படாத பாடு பட்டு ஓடி ஓடி உழைச்சு ஓடா தேஞ்சு கடைசியா சம்பாதிச்ச காச கொண்டுவராம அங்ஙனயே வுட்டுட்டு பிளைட் எர்றான்னா அவனை என்னன்னு சொல்றது? கொடுமையிலும் கொடுமை அது. பாவம். கன்றாவி.

அதென்னான்னாங்க.. அவனவன் ஊரு காசு அவனவனுக ஊருல மட்டும் தான் செல்லுமாம். வேற ஊர்ல அந்த காசு செல்லாதாம். இத போய் எங்ஙன சொல்லி அழுவுறது? அப்டி தான் ஏற்பாடு ஆக்கி வச்சுட்டானுங்க. அத நம்மளால மாத்த கீத்தல்லாம் முடியாதுங்க. பெரும்பாலும் நம்மாளுங்கக்ளுக்கு இந்த விஷயம் தெரியும். இருந்தாலும் இன்னொருக்க சொல்லிடலாம்னு. ஒண்ணுமில்லங்க. புறப்படுறதுக்கு முன்னால அந்தூர்ல சம்பாரிச்ச காசையெல்லாம் போய் மணி சேஞ்சசர்ட்ட அந்த காச குடுத்து நம்ம போய் சேர்ற இடத்துல செல்லுற காசா மாத்திக்கிட்டு வண்டி ஏறனும். அவ்ளோவே தாங்க.

இத்துணுண்டு விஷயம் எங்களுக்கு தெரியாதாக்கும்? இத போய் பெருஸ்ஸ்ஸா சொல்ல வண்ட்ட னு கூட நீங்க நினைக்கலாம். நிறைய பேர் காச மாத்தாம வண்டியேறிடறாங்களாம். என்ன கண்றாவிடா இதுன்னு ஒரு ஆதங்கத்துல தான் சொல்றது. சரி எந்த ஊரு எந்த காசுன்னு விஷயத்துக்கு வருவோம்.

அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

இந்த பாட்டுக்கு நான் கூட எப்படி அர்த்தம் பண்ணிக்கிட்டேன்னா அந்த உலகத்துக்கு அருள் வேணும். இந்த உலகத்துக்கு பொருள் வேணும். அம்புட்டு தான். ஓடிப்போன்னு நெனச்சுட்டு இருந்தேன், ஆனா அர்த்தம் அப்டி இல்லையாம். ஐயன் என்னத்த எச்சரிக்கை செய்கிறார் ஏலே காசு இல்லாத பஞ்ச பராரில்லாம் இங்ஙன எப்படி பிச்சையெடுத்துட்டு சிக்கி சீரழியுரான் பாரு. இந்த மாதிரி தான். அருள் இல்லாதவனெல்லாம் அந்த உலகத்துல சிக்கி சீரழியூரானுங்க அங்க அருள் இல்லாம போய் சேர்ந்தோம்ன்னா. மவனே பாத்துக்கோ அப்டின்னு சொல்ட்டார். இல்லாகி யாங்கு அப்டினா இங்ஙன இல்லாதவனை போல அங்கேயும் னு அர்த்தம் வரும். அதாவது நாம செம்மம் பூரா ஓடி ஓடி இங்க சேத்த காசுருக்கில்லா? இந்த காசு அங்ஙன செல்லாதாம். அங்கே அந்த ஊருல "அருள்" அப்டின்ற காசு தான் செல்லுமாம். அதான் வண்டி ஏர்றதுக்கு முன்னால மாத்தித் தொலைச்சுக்கோன்னு கதர்றது.

சாதாரணமா நம்ம வெளியூர் போறோம்னா எப்போ திரும்புவோம்னு ஓரளவு தெரியும். பிளான் பண்ணிக்கலாம். ஆனா இதுல வில்லங்கமே என்னான்னா நம்ம ரிட்டன் டிக்கெட்டை ஒரு ஏஜெண்ட்டுட்ட குடுத்து தொலைச்சுட்டார் ஓனர் ரிட்டன் தேதியோட. அந்த மொரட்டுப்பய எப்போ எவன துக்கி எந்த வண்டில அனுப்புவான்னு அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவனும் ஓனரோட ஆள். யார் என்ன சொன்னாலும் எடுபடாது. அதுனால பேசி கதறி பிரயோசனம் இல்லை. இப்டி டூர் போனா? எப்படி நிம்மதியா ஊர் சுத்திப் பாக்குறதாம்? ஒரு சிக்காகோ சிட்டியோ மியூனிக்கோ சூப்பரா இருக்கேன்னு சித்த நேரம் வாய பொளந்துட்டு அண்ணாந்து வேடிக்கை பாத்துட்டு இருந்த்தோம்னா டக்குன்னு வண்டில ஏத்தி அனுப்பிடுவான் இந்த ஏஜண்ட். அவன் வரதும் தெரிஞ்சு தொலையாது. காச மாத்திக்காம அந்த ஊருக்கு காலி பாக்கெட்டோட போய் இறங்கி சிக்கி சீரழியனும். அதுக்கு தான் சொன்னது

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

அப்போப்போ மாத்தி வச்சுக்கோடா அப்டின்னறார். அன்றறிவாம் - அப்புறமா பாத்த்துக்கலாம்ன்னு தள்ளிப்போடுறது. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க ன்னா அப்புறமா மாத்திக்கலாம். இப்போ முதல்ல நிறையா சேத்துக்குவோம் னு நெனைச்சு சேத்துக்கிட்டே அலஞ்சின்னா அப்புறமா காசை மாத்தவே முடியாது. இப்டி மாத்தணும் மாத்தணும் நா எப்படி மாத்துறது? பணத்தை குடுத்து அருளாலல்ல மாத்த சொல்றாரு? அப்டி அப்போப்போ சம்பாதிச்ச காசை அருளா மாத்தி வச்சுகிட்டின்னா? பொன்றுங்கால் பொன்றாத் துணைனு சொல்றார். பொன்றுதல் னா அழிஞ்சு போறது. பொன்றுங்கால் பொன்றாத்துணை அப்டின்னா நீயே அழிஞ்ச்சு போனாலும் உன்னோடே துணையா தொடர்ந்து வர்றது அழியாம இருக்கும். அப்டினு அர்த்தம். இங்கப்பார்றா நம்மளே இல்லாதப்ப நம்ம கூட ஒன்னு அழியாம வருமா? இத்தென்னா புதுக்கரடி? அப்டின்னு ஒரு சந்தேகம் கூட வரும். இன்னொரு பெரியவர் இத கன்பார்ம் பன்றார். நெறையா பெரியவங்க மாத்தி மாத்தி கன்பார்ம் பண்ணிருக்காங்க. அதுனால அவங்க சொல்றது க்ரெட்டா தான் இருக்கும் போல.

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியும்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே - விம்மிவிம்மியிரு
கைத்தலமேல் வைத்தழு மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித்தொடர்வது இருவினை புண்ணிய பாவமுமே

சொத்தும் சொகுசு வாழ்க்கையும் வீட்டொட முடிஞ்சுது. மேக்ஸ் மேக்ஸ் கட்டுன வீட்டம்மா தெருக்கோடி வரைக்கும் தான் வந்து அழுவ முடியும். பசங்க வேணா இன்னும் கொஞ்ச தூரம் சுடுகாடு வரைக்கும் வந்து அழுவலாம். ஆனால் உன்னை விடாம தொடர்ந்து வர்றது நீ செய்ற இருவினைகள் நல் வினை தீ வினை தான்.. இது ரெண்டும் உன்ன விட்டு போவவே போவாதுன்னு அடிச்சி சொல்லிட்டார். பங்கெல்லாம் கெடையாது. அவனவன் சம்பாரிச்சது அவனவனுக்கு.

இதையே தமிழன் ஈஸியா புரிஞ்சுக்கட்டும்ன்னு கவியரசு கண்ணதாசன் ஒரு சினிமா பாட்டா எழுதிட்டார். முதல் 3 வரியா அப்படிக்கப்படியே கொண்டு வந்துட்டார். கிட்டத்தட்ட. கடைசி வரியா சினிமா பாட்டு சந்தத்துக்காகவோ வேற என்னத்துக்காகன்னு தெரியல. கடைசி வரை தொடர்வது இருவினைன்னு சொல்லாம விட்டுட்டார். கடைசி வரை யாரோ? ன்னு ஒரு கேள்வியாவும் கேட்டுட்டார் தமிழன் அவனே மண்டைய ஒடச்சு யோசிச்சுக்கட்டும்னு. பெரும்பாலான தமிழன் என்ன புரிஞ்சுக்கிட்டான்னா கடைசி வர ஏதும் வராது. அதனால இருக்க வரைக்கும் இஷ்ட்டத்துக்கு மேயலாம். ஏதும் தான் கூட வரப்போறதில்லையேன்னு. அடிப்படையே தப்பா போயிடுச்சு. கடைசி வரை வந்தே தீரும். நாம அடுத்தவங்களுக்கு செஞ்ச நல்லதும் கெட்டதும்
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
மணி கன்வர்ஷன்... Cont...

அது போவட்டும். கடைசி வரை நம்மள விட்டு போவாம தொடருமாம்னு தெரிஞ்சுக்கிட்டோம்ல. . நல் வினை தீவினை ரெண்டும். அப்பாடி இந்த புத்திமதி போதும்ப்பான்னு தோணும். நல்ல வேளையா இத தெரிஞ்சுக்கிட்டோம் இல்லன்னா அருள் இல்லாம அங்கே போய் சீரழிஞ்சுல்ல போவணும்?அப்டில்லாம் இருக்காதுன்னு ஒத்துக்கிடவும் முடியாது. ஏன்னா இத சொன்னவர் அப்பசொப்ப இல்லை. ஒரு பெரிய பிஸ்னஸ் டைக்கூன் அந்த காலத்துல. இப்போ இருக்குற பில் கேட்ஸ் மாதிரி 6 மடங்கு சொத்து வச்சுருந்த இன்டர்நெஷனல் கஙக்ளோமரேட்டோட சி இ ஓ. அப்போ கால் வாசி உலகத்தை கைப்பற்றிய சோழ சக்கரவர்த்திக்கு அப்பப்ப கைமாத்து குடுத்து வாங்கிருக்காருன்னா யோசிச்சுக்க வேண்டியதுதான் இவரோட மணி பவரை. சிட்டில பெரிய கை. அதுனால பட்டினத்தார்ன்னு ஒரு டைட்டில். அதுவே பின்னால அவர் பேர் ஆயிடுச்சு. இவருக்கே இந்த மணி கன்வர்ஷன் மேட்டர் லேட்டா தான் தெரிஞ்சுதாம். அவர் பையன் தான் சொல்லிக்கொடுத்தது யோவ் கன்வெர்ட் பண்ணலேன்னா அத்தனையும் வேஸ்ட்டா போயிரும்யா. எதுக்கும் பிரயோஜனமில்லாத காது ஒடஞ்ச ஊசி கூட எடுத்துட்டு போவ முடியாது அங்க போவும்போதுன்னு சொன்ன உடனே பட்டுன்னு புரிஞ்சுடுச்சு அவருக்கு. அவ்ளோ பெரிய வியாபாரி விபரம் தெரிஞ்ச உடனே எங்கே அதிக லாபமோ டக்குன்னு அங்க யாவாரத்த மாத்திட்டார். அவர் ஸ்டோரி வேற லைன். ரொம்ப அட்வான்ஸ்ட். அல்பத்தனமா சாதாரண மனுஷனுங்க மாதிரி நரகத்துக்கு பயப்பட்டு சொர்கத்துக்கு ஆசைப்படல. அதுக்கும் மேல ஏறி தப்பிச்சுட்டார். இப்போவும் நிறையா பேர் சொர்க்கம் தான் மோட்ச வீடுன்னு நெனச்சுக்கிட்டு அலையுறாங்க பாவம். சரி சரி நம்மள மாதிரி சாதாரண ஆட்களுக்கு வருவோம்.

ஈதலிசை படவாழ்த லதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

அப்டின்னு இவரும் அதே விஷயத்தை கன்பார்ம் பண்ணுறார். நமக்கு புரியலைங்கிறதால உண்மை இல்லாம போயிருமா? எல்லாரும் வேற சொல்லுறாங்களே அதையே திருப்பி திருப்பி. அப்போ சரியா தான் இருக்கனும்.
இந்த பாட்டுக்கு அர்த்தம் என்னான்னா? ஒன்னு ஈதல் இன்னொன்னு இசைபட வாழ்தல் - இந்த ரெண்டை தவிர நம்ம உயிருக்கு ஊதியம் - அதான் சம்பாத்தியம் இல்லையாம். நம்ம என்ன நெனச்சுட்டு இருந்தோம்ன்னா நல்லா சோறு சாப்பிடணும். காய்கறிகள் சாப்பிடணும் உயிர் ஸ்ட்ராங்கா இருக்கும். சரி தான். சோறு உடம்புக்கு தான். உயிருக்கு சுவை அனுபவமா போவுமே தவிர அது செலவுதான், வருமானமா ஆவாதாம். அப்போ உயிருக்கு வருமானம் சேர்க்க ரெண்டே ரெண்டு வழி தான் இருக்கு. ஒன்னு ஈதல் - அதாவது தர்மம் பண்றது, இன்னொரு உயிரோட துன்பத்தை நீக்குறது. இல்லாட்டி இசை பட வாழ்தல் - இதென்னா இசைபட? ன்னா ம்யுசிக்கலாவா? இசைன்னா இயைந்து - எதிப்பு இல்லாமான்னு அர்த்தம். வேறேந்த உயிரின் தற்சுதந்திரத்துக்கும் இடையூறு இல்லாம இயைந்து - நீ உன்பாட்டுக்கு இருந்துக்கோ நான் என் பாட்டுக்கு இருந்துக்கிறேன் ன்னு தொந்தரவு பண்ணாம, ப்ராண்டாமா விடுறது. இது ரொம்ப ஈஸி தானே. ஈதல் னாச்சும் மெனக்கெட்டு இன்னொரு உயிரோட துன்பத்தை நீக்கணும். இது தொந்தரவு குடுக்காம செவனேன்னு இருந்தா போதும்ல. இதுக்கே சம்பளமாம். இதைக்கூட செய்யாம போனா எப்டி?

இதுல மத்தவங்களுக்கு தொந்தரவு குடுக்காம இருக்குறதுக்கு ஒரு பங்கு சம்பளமா மாறிச்சுன்னா மத்த உயிகளுடைய துன்பத்தை நீக்குறது இன்னொரு சம்பாத்தியம். இப்டி தான் இங்கே சேர்த்த காசையெல்லாம் அங்கே செல்லுபடி ஆகுற அருளா மாத்திக்கனும்மாம். இந்த கன்வர்ஷன் க்கு பயங்கர டிமாண்ட்.நம்மூர்ல புண்ணியம்னு பெரு வச்சு. அதுல செல்லாக் காசும் இருக்கு நிறையா. நம்ம பாட்டுக்கு கன்வெர்ட் பண்ணிட்டோம்னு நெனச்சுக்கிட்டு இருந்து அங்க போய் எறங்குன உடனே சிரிப்பா சிரிச்சானுவன்னு வை, இத தான் மாத்திட்டு கொண்டு வந்தியா? அடப்பாவமே இது டூப்ளிக்கேட் நோட்னு சொன்னா எப்படி இருக்கும்? யோவ். ஒரு ஜென்மம் பூரா சேத்ததுய்யா நீ பாட்டுக்கு பொசுக்குன்னு செல்லாத காசுன்னு சொல்லிட்டே ன்னு கதறி பிரயோசனம் இல்லை. கரெக்ட்டா மாத்திக்கணும். அறஞ்செய்து மாத்துறேன்ன்னுட்டு போட்டோக்கு போஸ் குடுத்தா பெரும்பாலும் செல்லாத காசா கன்வெர்ட் ஆயிடும். அதுவும் இல்லாம பாட்டு பாடி டான்ஸ் ஆடுறதையெல்லாம் அறமா சேக்குறதா இல்லையான்னு சந்தேகம் தான். ஆகையினாலே கவனமா செல்லுமா செல்லாதான்னு தெரிஞ்சுக்கிட்டு கன்வெர்ட் பண்ணனும். இதுல ஒரு கன்வர்ஷன் செல்லுமா செல்லாதான்னு தெரிஞ்சுக்க ஒரு நுட்பம் இருக்கு. அத நம்ம சரி பாத்துக்கணும். வேற ஒண்ணுமில்ல. நாம நல்வினை னு நெனச்சுட்டு செய்ய்யுற செய்கையால் எந்த உயிருக்காச்சும் துன்பம் போவுதான்னு பாத்தா போதும். அதில்லாம ஏதேதோ செலவு செஞ்சா காசும் நேரமும் தான் வீணாவும். பிரயோஜனம் இருக்காது.

வறியார்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர் ப்பைநீர துடைத்து

அதாவது. வறுமையில் இருக்குறவனோட துன்பத்தை போக்குனா அதுக்கு பேர் ஈகை. மத்ததெல்லாம் போட்டோ ஆப் ஜிகினா வேலைன்னு ஒரே அடியா அடிச்சுட்டார். மற்ற உயிருக்கு துன்பத்தை குடுக்காம இருந்து, மற்ற உயிர்களோடு துன்பத்தை போக்குனா சம்பாத்தியம்ங்க. இல்லாட்டி இல்ல. இந்த கோயிலுக்கு லைட் போடுறது. நோட் வாங்கி கொடுக்குறது, கும்பாபிஷேகம் செய்றது மணி அடிக்கிறது பாட்டு பாடுறதுன்னு டிசைன் டிஸைனா அருளா மாத்திக்கலாம்ன்னு மார்க்கெட்டிங் பண்ணிட்டானுங்க. யாரு போய் பாத்தா அந்த பக்கம். அதுனால புருடா மன்னர்களெல்லாம் இந்த கன்வர்ஷனுக்கு டிமாண்ட் இருக்குறத வச்சு நிறையா நிறையா வியாபாரங்களை நிறுவி நடத்திக்கிட்டு வர்றானுங்க. நிறைய பேர் ஏமார்ந்தும் விழுறாங்க. இந்த புண்ணிய கன்வர்ஷன் பிஸினஸ்ல எப்படி எப்படிலாம் ஏமாறுவாங்கன்னு ஒரு லிஸ்ட்ட வள்ளல் தாரார் பாருங்க.

கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெலாஞ் செய்து
பங்கமிலா வேதியற்கை பணமள்ளித் தந்து
பசுவதனை பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முக்தியதை அடையார்

தயவுன்னா இரக்க குணம். இதுக்கு காசு கூட வேணாம். கஷ்ட்டப்படுறவங்கள பாத்து இரக்கப்பட்டாலே போதும். அத விட்டுட்டு வித விதமா என்னா செஞ்சாலும். அருளா மாறாது. இங்கே பட்டினத்து செட்டியார் சொன்ன இதே விஷயத்தை இஸ்ரேல்ல இருந்த இன்னொரு பெரியவரும் இப்டி தான் நடக்க போவுது பாரேன்னு சொல்லி எச்சரிக்கை செஞ்சுருக்கார். ரொம்ப பெரியவர், கிட்டத்திட்ட கடவுள் நிலைய அடைஞ்சவர் இதே போலி புண்ணியத்தை பத்தி சொல்லிட்டு போயிருக்கார். அவர் என்ன சொன்னார்ன்னா தீர்ப்பு குடுக்கிறப்ப இந்த போங்கு பார்ட்டில்லாம் அங்க வருவானுங்க. அப்போ நான் முதலாளிக்கு வலது பக்கமா உக்காந்துட்டு இவனுக ஒவ்வொருத்தனும் வர வர என்னோட கருத்த சொல்லுவேன். பரிந்துரை செய்வேன், அப்போ இந்த பாட்டு பாடிப் பயலுக, டான்ஸ் ஆடிப்பயலுக அங்கே என்னைய பாத்த்துட்டு கூவுவானுக சாமீ உங்க பேரை நாங்க இத்தனை தடவ போற்றி பாடி ஆடுனோம்ன்னு. இவன்லாம் யாருன்னே எனக்கு தெரியாதுங்கன்னு சொல்லிடுவேன் அவர்டட. அப்டியே போட்டோ ஷுட்டுக்கு போஸ் குடுத்தவனையும் எனக்கு தெரியாதுன்னு சொல்லீடுவேன். முதலாளி இவனுகள நரகத்துல வீசிடுவார்.

அதேமாதிரி அங்க நல்லவன் பெரியவன்னெல்லாம் பயந்துகிட்டே வருவாங்க. நான் அவங்கள பாத்த உடனே என் முதலாளிகிட்ட சரியா அடையாளம் கண்டு சொல்லிடுவேன் - முதலாளி நான் சோறில்லாம பசியோட இருந்தேன் அப்போ இவங்க தான் சோறு போட்டாங்க. நான் குளிர்ல நடுங்கிட்டு இருக்கும் போது இவங்க தான் துணி குடுத்து போத்துனாங்க. நான் நோய்வாய்ப்பட்டு கிடந்தப்போ இவங்க தான் எனக்கு மருந்து குடுத்து குணப்படுத்துனாங்க அப்டின்னு. அவங்க ஏற்கனவே பாவம் பயந்து போய் இருக்கதால ஐயையோ இவரை நாங்க பாத்ததே இல்ல சாமீன்னு சொல்வாங்க. அதுக்கு நான் சமாதானம் சொல்வேன் இல்லப்பா நீ பசிச்சவனுக்கு சோறு போட்டது நோயாளிய குணப்படுத்தினது குளூர்ல இருக்கவனுக்கு துணிவாங்கி போத்துனது எல்லாம் கஷ்ட்டப்படுறவனுக்கு செஞ்ச்சது எனக்கே செஞ்சது போலன்னு. முதலாளி அவங்களை சுவனத்தில் இளைப்பாற வைப்பார்ன்னு சொல்லிருக்கார்.

இவ்ளோ குழப்பத்துல நம்ம தொடங்குன விஷயத்த விட்டுட்டோம் பாருங்க. சம்பாரிச்ச பணத்தை அருளா மாத்துற முறை. பாட்டோட பாட்டா இந்த ரகசியத்தையும் சொல்ட்டார். ரொம்ப பேருக்கு இந்த பாட்டு தெரிஞ்சுருக்கல.

அற்றார் அழிபசி தீர்த்தலஃ தொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

பணத்தை இன்பிலேஷன் திருட்டு போலி புண்ணியம் இப்டில்லாம் அரிக்காம பத்திரமா சேர்த்து வைக்கிற பொட்டி எதுன்னா? அழி பசி கொண்ட வறியவர்களோட பசிச்ச வயிறு தானுங்களாம். safe bet . சம்பாரிச்ச காச அங்க கொண்டுபோய் போட்றா . கவர்மெண்ட் பாண்ட் போல பத்திரமா இருக்கும் னு மணி கன்வர்ஷன் கம் இன்வெஸ்ட்மென்ட் டிப் கொடுத்துட்டார். நாம தான் கேர்புல்லா பசிச்சவனுக்கு சோறு குடுக்குறோமா இல்ல சாப்ட்டு சாப்ட்டு புளிச்ச வயித்துக்காரனுக்கு ஊட்டி விட்டு வாயில குச்சியை வச்சு குத்துறோமான்னு செக் பண்ணிக்கணும். ஏன்னா முன்னது இன்வெஸ்ட்மென்ட். பின்னது செல்லாத கள்ள நோட்டு.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
நம்மூர்லருந்து நெறையா பேர் பணம் சம்பாதிக்க ஊர் தேசம்லாம் போய் கஷ்ட்டப்பட்டு பணம் சேர்க்குறாங்கல்ல. அவங்களுக்கு உபயோகமா இருக்கட்டும் னு ஓரு போஸ்ட் தான் இது. மக்கா….. படாத பாடு பட்டு ஓடி ஓடி உழைச்சு ஓடா தேஞ்சு கடைசியா சம்பாதிச்ச காச கொண்டுவராம அங்ஙனயே வுட்டுட்டு பிளைட் எர்றான்னா அவனை என்னன்னு சொல்றது? கொடுமையிலும் கொடுமை அது. பாவம். கன்றாவி.

அதென்னான்னாங்க.. அவனவன் ஊரு காசு அவனவனுக ஊருல மட்டும் தான் செல்லுமாம். வேற ஊர்ல அந்த காசு செல்லாதாம். இத போய் எங்ஙன சொல்லி அழுவுறது? அப்டி தான் ஏற்பாடு ஆக்கி வச்சுட்டானுங்க. அத நம்மளால மாத்த கீத்தல்லாம் முடியாதுங்க. பெரும்பாலும் நம்மாளுங்கக்ளுக்கு இந்த விஷயம் தெரியும். இருந்தாலும் இன்னொருக்க சொல்லிடலாம்னு. ஒண்ணுமில்லங்க. புறப்படுறதுக்கு முன்னால அந்தூர்ல சம்பாரிச்ச காசையெல்லாம் போய் மணி சேஞ்சசர்ட்ட அந்த காச குடுத்து நம்ம போய் சேர்ற இடத்துல செல்லுற காசா மாத்திக்கிட்டு வண்டி ஏறனும். அவ்ளோவே தாங்க.

இத்துணுண்டு விஷயம் எங்களுக்கு தெரியாதாக்கும்? இத போய் பெருஸ்ஸ்ஸா சொல்ல வண்ட்ட னு கூட நீங்க நினைக்கலாம். நிறைய பேர் காச மாத்தாம வண்டியேறிடறாங்களாம். என்ன கண்றாவிடா இதுன்னு ஒரு ஆதங்கத்துல தான் சொல்றது. சரி எந்த ஊரு எந்த காசுன்னு விஷயத்துக்கு வருவோம்.

அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

இந்த பாட்டுக்கு நான் கூட எப்படி அர்த்தம் பண்ணிக்கிட்டேன்னா அந்த உலகத்துக்கு அருள் வேணும். இந்த உலகத்துக்கு பொருள் வேணும். அம்புட்டு தான். ஓடிப்போன்னு நெனச்சுட்டு இருந்தேன், ஆனா அர்த்தம் அப்டி இல்லையாம். ஐயன் என்னத்த எச்சரிக்கை செய்கிறார் ஏலே காசு இல்லாத பஞ்ச பராரில்லாம் இங்ஙன எப்படி பிச்சையெடுத்துட்டு சிக்கி சீரழியுரான் பாரு. இந்த மாதிரி தான். அருள் இல்லாதவனெல்லாம் அந்த உலகத்துல சிக்கி சீரழியூரானுங்க அங்க அருள் இல்லாம போய் சேர்ந்தோம்ன்னா. மவனே பாத்துக்கோ அப்டின்னு சொல்ட்டார். இல்லாகி யாங்கு அப்டினா இங்ஙன இல்லாதவனை போல அங்கேயும் னு அர்த்தம் வரும். அதாவது நாம செம்மம் பூரா ஓடி ஓடி இங்க சேத்த காசுருக்கில்லா? இந்த காசு அங்ஙன செல்லாதாம். அங்கே அந்த ஊருல "அருள்" அப்டின்ற காசு தான் செல்லுமாம். அதான் வண்டி ஏர்றதுக்கு முன்னால மாத்தித் தொலைச்சுக்கோன்னு கதர்றது.

சாதாரணமா நம்ம வெளியூர் போறோம்னா எப்போ திரும்புவோம்னு ஓரளவு தெரியும். பிளான் பண்ணிக்கலாம். ஆனா இதுல வில்லங்கமே என்னான்னா நம்ம ரிட்டன் டிக்கெட்டை ஒரு ஏஜெண்ட்டுட்ட குடுத்து தொலைச்சுட்டார் ஓனர் ரிட்டன் தேதியோட. அந்த மொரட்டுப்பய எப்போ எவன துக்கி எந்த வண்டில அனுப்புவான்னு அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவனும் ஓனரோட ஆள். யார் என்ன சொன்னாலும் எடுபடாது. அதுனால பேசி கதறி பிரயோசனம் இல்லை. இப்டி டூர் போனா? எப்படி நிம்மதியா ஊர் சுத்திப் பாக்குறதாம்? ஒரு சிக்காகோ சிட்டியோ மியூனிக்கோ சூப்பரா இருக்கேன்னு சித்த நேரம் வாய பொளந்துட்டு அண்ணாந்து வேடிக்கை பாத்துட்டு இருந்த்தோம்னா டக்குன்னு வண்டில ஏத்தி அனுப்பிடுவான் இந்த ஏஜண்ட். அவன் வரதும் தெரிஞ்சு தொலையாது. காச மாத்திக்காம அந்த ஊருக்கு காலி பாக்கெட்டோட போய் இறங்கி சிக்கி சீரழியனும். அதுக்கு தான் சொன்னது

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

அப்போப்போ மாத்தி வச்சுக்கோடா அப்டின்னறார். அன்றறிவாம் - அப்புறமா பாத்த்துக்கலாம்ன்னு தள்ளிப்போடுறது. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க ன்னா அப்புறமா மாத்திக்கலாம். இப்போ முதல்ல நிறையா சேத்துக்குவோம் னு நெனைச்சு சேத்துக்கிட்டே அலஞ்சின்னா அப்புறமா காசை மாத்தவே முடியாது. இப்டி மாத்தணும் மாத்தணும் நா எப்படி மாத்துறது? பணத்தை குடுத்து அருளாலல்ல மாத்த சொல்றாரு? அப்டி அப்போப்போ சம்பாதிச்ச காசை அருளா மாத்தி வச்சுகிட்டின்னா? பொன்றுங்கால் பொன்றாத் துணைனு சொல்றார். பொன்றுதல் னா அழிஞ்சு போறது. பொன்றுங்கால் பொன்றாத்துணை அப்டின்னா நீயே அழிஞ்ச்சு போனாலும் உன்னோடே துணையா தொடர்ந்து வர்றது அழியாம இருக்கும். அப்டினு அர்த்தம். இங்கப்பார்றா நம்மளே இல்லாதப்ப நம்ம கூட ஒன்னு அழியாம வருமா? இத்தென்னா புதுக்கரடி? அப்டின்னு ஒரு சந்தேகம் கூட வரும். இன்னொரு பெரியவர் இத கன்பார்ம் பன்றார். நெறையா பெரியவங்க மாத்தி மாத்தி கன்பார்ம் பண்ணிருக்காங்க. அதுனால அவங்க சொல்றது க்ரெட்டா தான் இருக்கும் போல.

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியும்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே - விம்மிவிம்மியிரு
கைத்தலமேல் வைத்தழு மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித்தொடர்வது இருவினை புண்ணிய பாவமுமே

சொத்தும் சொகுசு வாழ்க்கையும் வீட்டொட முடிஞ்சுது. மேக்ஸ் மேக்ஸ் கட்டுன வீட்டம்மா தெருக்கோடி வரைக்கும் தான் வந்து அழுவ முடியும். பசங்க வேணா இன்னும் கொஞ்ச தூரம் சுடுகாடு வரைக்கும் வந்து அழுவலாம். ஆனால் உன்னை விடாம தொடர்ந்து வர்றது நீ செய்ற இருவினைகள் நல் வினை தீ வினை தான்.. இது ரெண்டும் உன்ன விட்டு போவவே போவாதுன்னு அடிச்சி சொல்லிட்டார். பங்கெல்லாம் கெடையாது. அவனவன் சம்பாரிச்சது அவனவனுக்கு.

இதையே தமிழன் ஈஸியா புரிஞ்சுக்கட்டும்ன்னு கவியரசு கண்ணதாசன் ஒரு சினிமா பாட்டா எழுதிட்டார். முதல் 3 வரியா அப்படிக்கப்படியே கொண்டு வந்துட்டார். கிட்டத்தட்ட. கடைசி வரியா சினிமா பாட்டு சந்தத்துக்காகவோ வேற என்னத்துக்காகன்னு தெரியல. கடைசி வரை தொடர்வது இருவினைன்னு சொல்லாம விட்டுட்டார். கடைசி வரை யாரோ? ன்னு ஒரு கேள்வியாவும் கேட்டுட்டார் தமிழன் அவனே மண்டைய ஒடச்சு யோசிச்சுக்கட்டும்னு. பெரும்பாலான தமிழன் என்ன புரிஞ்சுக்கிட்டான்னா கடைசி வர ஏதும் வராது. அதனால இருக்க வரைக்கும் இஷ்ட்டத்துக்கு மேயலாம். ஏதும் தான் கூட வரப்போறதில்லையேன்னு. அடிப்படையே தப்பா போயிடுச்சு. கடைசி வரை வந்தே தீரும். நாம அடுத்தவங்களுக்கு செஞ்ச நல்லதும் கெட்டதும்
அய்யோ!!! (Hayyoo!!!!)

பண மாற்று னு தலைப்பு வைத்துவிட்டு வாழ்க்கையை இப்படி படம் பிடித்து சொல்லிட்டீங்களே!!!!!

இவ்வளவு சுவாரஸ்யமா இதைச் சொல்ல முடியுமா.. படிக்கப் படிக்க ஆச்சரியம். சாதாரண மனிதர் இல்லைங்க நீங்க.

பட்டினத்தாரும் வள்ளலாரும் திருவள்ளுவரும் ஏசுநாதரும் கூட இருக்காங்களோனு யோசித்துவிட்டேன்

இலக்கியம் இனிக்கிறது இம்மை மறுமை இடித்துரைத்து
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெலாஞ் செய்து
பங்கமிலா வேதியற்கை பணமள்ளித் தந்து
பசுவதனை பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முக்தியதை அடையார்
👌
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
ஏன்னா இத சொன்னவர் அப்பசொப்ப இல்லை. ஒரு பெரிய பிஸ்னஸ் டைக்கூன் அந்த காலத்துல. இப்போ இருக்குற பில் கேட்ஸ் மாதிரி 6 மடங்கு சொத்து வச்சுருந்த இன்டர்நெஷனல் கஙக்ளோமரேட்டோட சி இ ஓ. அப்போ கால் வாசி உலகத்தை கைப்பற்றிய சோழ சக்கரவர்த்திக்கு அப்பப்ப கைமாத்து குடுத்து வாங்கிருக்காருன்னா யோசிச்சுக்க வேண்டியதுதான் இவரோட மணி பவரை. சிட்டில பெரிய கை. அதுனால பட்டினத்தார்ன்னு ஒரு டைட்டில். அதுவே பின்னால அவர் பேர் ஆயிடுச்சு.
Informative !!!
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அதாவது. வறுமையில் இருக்குறவனோட துன்பத்தை போக்குனா அதுக்கு பேர் ஈகை. மத்ததெல்லாம் போட்டோ ஆப் ஜிகினா வேலைன்னு ஒரே அடியா அடிச்சுட்டார். மற்ற உயிருக்கு துன்பத்தை குடுக்காம இருந்து, மற்ற உயிர்களோடு துன்பத்தை போக்குனா சம்பாத்தியம்ங்க. இல்லாட்டி இல்ல. இந்த கோயிலுக்கு லைட் போடுறது. நோட் வாங்கி கொடுக்குறது, கும்பாபிஷேகம் செய்றது மணி அடிக்கிறது பாட்டு பாடுறதுன்னு டிசைன் டிஸைனா அருளா மாத்திக்கலாம்ன்னு மார்க்கெட்டிங் பண்ணிட்டானுங்க. யாரு போய் பாத்தா அந்த பக்கம். அதுனால புருடா மன்னர்களெல்லாம் இந்த கன்வர்ஷனுக்கு டிமாண்ட் இருக்குறத வச்சு நிறையா நிறையா வியாபாரங்களை நிறுவி நடத்திக்கிட்டு வர்றானுங்க. நிறைய பேர் ஏமார்ந்தும் விழுறாங்க.

Rememebering this song

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Oh my. Lovely poetry. didnt heard this at all. yaaru paadina paattunga idhu? I mean who scripted the words.
Tamil Movie Song. மூக்குத்தி அம்மன் movie name.
 
Top