- Joined
- Apr 25, 2023
- Messages
- 1,771
- Points
- 153
நம்மூர்லருந்து நெறையா பேர் பணம் சம்பாதிக்க ஊர் தேசம்லாம் போய் கஷ்ட்டப்பட்டு பணம் சேர்க்குறாங்கல்ல. அவங்களுக்கு உபயோகமா இருக்கட்டும் னு ஓரு போஸ்ட் தான் இது. மக்கா….. படாத பாடு பட்டு ஓடி ஓடி உழைச்சு ஓடா தேஞ்சு கடைசியா சம்பாதிச்ச காச கொண்டுவராம அங்ஙனயே வுட்டுட்டு பிளைட் எர்றான்னா அவனை என்னன்னு சொல்றது? கொடுமையிலும் கொடுமை அது. பாவம். கன்றாவி.
அதென்னான்னாங்க.. அவனவன் ஊரு காசு அவனவனுக ஊருல மட்டும் தான் செல்லுமாம். வேற ஊர்ல அந்த காசு செல்லாதாம். இத போய் எங்ஙன சொல்லி அழுவுறது? அப்டி தான் ஏற்பாடு ஆக்கி வச்சுட்டானுங்க. அத நம்மளால மாத்த கீத்தல்லாம் முடியாதுங்க. பெரும்பாலும் நம்மாளுங்கக்ளுக்கு இந்த விஷயம் தெரியும். இருந்தாலும் இன்னொருக்க சொல்லிடலாம்னு. ஒண்ணுமில்லங்க. புறப்படுறதுக்கு முன்னால அந்தூர்ல சம்பாரிச்ச காசையெல்லாம் போய் மணி சேஞ்சசர்ட்ட அந்த காச குடுத்து நம்ம போய் சேர்ற இடத்துல செல்லுற காசா மாத்திக்கிட்டு வண்டி ஏறனும். அவ்ளோவே தாங்க.
இத்துணுண்டு விஷயம் எங்களுக்கு தெரியாதாக்கும்? இத போய் பெருஸ்ஸ்ஸா சொல்ல வண்ட்ட னு கூட நீங்க நினைக்கலாம். நிறைய பேர் காச மாத்தாம வண்டியேறிடறாங்களாம். என்ன கண்றாவிடா இதுன்னு ஒரு ஆதங்கத்துல தான் சொல்றது. சரி எந்த ஊரு எந்த காசுன்னு விஷயத்துக்கு வருவோம்.
அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
இந்த பாட்டுக்கு நான் கூட எப்படி அர்த்தம் பண்ணிக்கிட்டேன்னா அந்த உலகத்துக்கு அருள் வேணும். இந்த உலகத்துக்கு பொருள் வேணும். அம்புட்டு தான். ஓடிப்போன்னு நெனச்சுட்டு இருந்தேன், ஆனா அர்த்தம் அப்டி இல்லையாம். ஐயன் என்னத்த எச்சரிக்கை செய்கிறார் ஏலே காசு இல்லாத பஞ்ச பராரில்லாம் இங்ஙன எப்படி பிச்சையெடுத்துட்டு சிக்கி சீரழியுரான் பாரு. இந்த மாதிரி தான். அருள் இல்லாதவனெல்லாம் அந்த உலகத்துல சிக்கி சீரழியூரானுங்க அங்க அருள் இல்லாம போய் சேர்ந்தோம்ன்னா. மவனே பாத்துக்கோ அப்டின்னு சொல்ட்டார். இல்லாகி யாங்கு அப்டினா இங்ஙன இல்லாதவனை போல அங்கேயும் னு அர்த்தம் வரும். அதாவது நாம செம்மம் பூரா ஓடி ஓடி இங்க சேத்த காசுருக்கில்லா? இந்த காசு அங்ஙன செல்லாதாம். அங்கே அந்த ஊருல "அருள்" அப்டின்ற காசு தான் செல்லுமாம். அதான் வண்டி ஏர்றதுக்கு முன்னால மாத்தித் தொலைச்சுக்கோன்னு கதர்றது.
சாதாரணமா நம்ம வெளியூர் போறோம்னா எப்போ திரும்புவோம்னு ஓரளவு தெரியும். பிளான் பண்ணிக்கலாம். ஆனா இதுல வில்லங்கமே என்னான்னா நம்ம ரிட்டன் டிக்கெட்டை ஒரு ஏஜெண்ட்டுட்ட குடுத்து தொலைச்சுட்டார் ஓனர் ரிட்டன் தேதியோட. அந்த மொரட்டுப்பய எப்போ எவன துக்கி எந்த வண்டில அனுப்புவான்னு அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவனும் ஓனரோட ஆள். யார் என்ன சொன்னாலும் எடுபடாது. அதுனால பேசி கதறி பிரயோசனம் இல்லை. இப்டி டூர் போனா? எப்படி நிம்மதியா ஊர் சுத்திப் பாக்குறதாம்? ஒரு சிக்காகோ சிட்டியோ மியூனிக்கோ சூப்பரா இருக்கேன்னு சித்த நேரம் வாய பொளந்துட்டு அண்ணாந்து வேடிக்கை பாத்துட்டு இருந்த்தோம்னா டக்குன்னு வண்டில ஏத்தி அனுப்பிடுவான் இந்த ஏஜண்ட். அவன் வரதும் தெரிஞ்சு தொலையாது. காச மாத்திக்காம அந்த ஊருக்கு காலி பாக்கெட்டோட போய் இறங்கி சிக்கி சீரழியனும். அதுக்கு தான் சொன்னது
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
அப்போப்போ மாத்தி வச்சுக்கோடா அப்டின்னறார். அன்றறிவாம் - அப்புறமா பாத்த்துக்கலாம்ன்னு தள்ளிப்போடுறது. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க ன்னா அப்புறமா மாத்திக்கலாம். இப்போ முதல்ல நிறையா சேத்துக்குவோம் னு நெனைச்சு சேத்துக்கிட்டே அலஞ்சின்னா அப்புறமா காசை மாத்தவே முடியாது. இப்டி மாத்தணும் மாத்தணும் நா எப்படி மாத்துறது? பணத்தை குடுத்து அருளாலல்ல மாத்த சொல்றாரு? அப்டி அப்போப்போ சம்பாதிச்ச காசை அருளா மாத்தி வச்சுகிட்டின்னா? பொன்றுங்கால் பொன்றாத் துணைனு சொல்றார். பொன்றுதல் னா அழிஞ்சு போறது. பொன்றுங்கால் பொன்றாத்துணை அப்டின்னா நீயே அழிஞ்ச்சு போனாலும் உன்னோடே துணையா தொடர்ந்து வர்றது அழியாம இருக்கும். அப்டினு அர்த்தம். இங்கப்பார்றா நம்மளே இல்லாதப்ப நம்ம கூட ஒன்னு அழியாம வருமா? இத்தென்னா புதுக்கரடி? அப்டின்னு ஒரு சந்தேகம் கூட வரும். இன்னொரு பெரியவர் இத கன்பார்ம் பன்றார். நெறையா பெரியவங்க மாத்தி மாத்தி கன்பார்ம் பண்ணிருக்காங்க. அதுனால அவங்க சொல்றது க்ரெட்டா தான் இருக்கும் போல.
அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியும்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே - விம்மிவிம்மியிரு
கைத்தலமேல் வைத்தழு மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித்தொடர்வது இருவினை புண்ணிய பாவமுமே
சொத்தும் சொகுசு வாழ்க்கையும் வீட்டொட முடிஞ்சுது. மேக்ஸ் மேக்ஸ் கட்டுன வீட்டம்மா தெருக்கோடி வரைக்கும் தான் வந்து அழுவ முடியும். பசங்க வேணா இன்னும் கொஞ்ச தூரம் சுடுகாடு வரைக்கும் வந்து அழுவலாம். ஆனால் உன்னை விடாம தொடர்ந்து வர்றது நீ செய்ற இருவினைகள் நல் வினை தீ வினை தான்.. இது ரெண்டும் உன்ன விட்டு போவவே போவாதுன்னு அடிச்சி சொல்லிட்டார். பங்கெல்லாம் கெடையாது. அவனவன் சம்பாரிச்சது அவனவனுக்கு.
இதையே தமிழன் ஈஸியா புரிஞ்சுக்கட்டும்ன்னு கவியரசு கண்ணதாசன் ஒரு சினிமா பாட்டா எழுதிட்டார். முதல் 3 வரியா அப்படிக்கப்படியே கொண்டு வந்துட்டார். கிட்டத்தட்ட. கடைசி வரியா சினிமா பாட்டு சந்தத்துக்காகவோ வேற என்னத்துக்காகன்னு தெரியல. கடைசி வரை தொடர்வது இருவினைன்னு சொல்லாம விட்டுட்டார். கடைசி வரை யாரோ? ன்னு ஒரு கேள்வியாவும் கேட்டுட்டார் தமிழன் அவனே மண்டைய ஒடச்சு யோசிச்சுக்கட்டும்னு. பெரும்பாலான தமிழன் என்ன புரிஞ்சுக்கிட்டான்னா கடைசி வர ஏதும் வராது. அதனால இருக்க வரைக்கும் இஷ்ட்டத்துக்கு மேயலாம். ஏதும் தான் கூட வரப்போறதில்லையேன்னு. அடிப்படையே தப்பா போயிடுச்சு. கடைசி வரை வந்தே தீரும். நாம அடுத்தவங்களுக்கு செஞ்ச நல்லதும் கெட்டதும்