- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
தேர்தல் வந்தாச்சு
தெருவெல்லாம் இனி முளைக்கும்
புது புதுசாய் கொடி மரமும்
ஊரெல்லாம் கலர் கலராய்
தொங்கும் கொடி தோரணமும்
பாலடைஞ்ச வீட்டு சுவர்
பள பளனு மாறி போகும்
பல்லு போன பெருசு கூட
பளிச்சுன்னு வெள்ளை ஆடை போடும்
திரும்பின பக்கம் எல்லாம்
கட்சிகளும் கூட்டம் போடும்
பிரியாணி பொட்டலத்தை
வாங்கித்தான் சோறு போடும்
ஆரத்தி கரச்சு வச்சு
ஆள் தேடும் தாய்மாரும்
அரசியல்வாதி தரும்
காச எல்லாம் கூறு போடும்
கூட்டணினு பேச்செடுத்து
கட்சிகளும் ஆள் பிடிக்கும்
அத்தனையும் பாத்து சனம்
மனசுல தான் கிலி பிடிக்கும்
இப்படித்தான் ஜோராக தேர்தலுமே
இங்க நடக்கும்
நாடு கொண்டாடும் திருவிழாவா
அது இருக்கும்
சின்ன பசங்க கையில்
கூட கட்சி கொடி பறக்கும்
அப்போ ஜனநாயகமும்
காத்துல தானே பறக்கும்
அரசியல் சாக்கடனு சில பேரு
சொல்ல கேட்டேன்
அதுல கொஞ்சம் கூட
உண்மை ஏதும் இல்லையே
அரசியல் இல்லையின்னா
எதுவும் இங்க இல்லயே
தெருவெல்லாம் இனி முளைக்கும்
புது புதுசாய் கொடி மரமும்
ஊரெல்லாம் கலர் கலராய்
தொங்கும் கொடி தோரணமும்
பாலடைஞ்ச வீட்டு சுவர்
பள பளனு மாறி போகும்
பல்லு போன பெருசு கூட
பளிச்சுன்னு வெள்ளை ஆடை போடும்
திரும்பின பக்கம் எல்லாம்
கட்சிகளும் கூட்டம் போடும்
பிரியாணி பொட்டலத்தை
வாங்கித்தான் சோறு போடும்
ஆரத்தி கரச்சு வச்சு
ஆள் தேடும் தாய்மாரும்
அரசியல்வாதி தரும்
காச எல்லாம் கூறு போடும்
கூட்டணினு பேச்செடுத்து
கட்சிகளும் ஆள் பிடிக்கும்
அத்தனையும் பாத்து சனம்
மனசுல தான் கிலி பிடிக்கும்
இப்படித்தான் ஜோராக தேர்தலுமே
இங்க நடக்கும்
நாடு கொண்டாடும் திருவிழாவா
அது இருக்கும்
சின்ன பசங்க கையில்
கூட கட்சி கொடி பறக்கும்
அப்போ ஜனநாயகமும்
காத்துல தானே பறக்கும்
அரசியல் சாக்கடனு சில பேரு
சொல்ல கேட்டேன்
அதுல கொஞ்சம் கூட
உண்மை ஏதும் இல்லையே
அரசியல் இல்லையின்னா
எதுவும் இங்க இல்லயே
Last edited: