What's new
  • If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

நண்பர்கள் தமிழ் அரட்டை தளம்

ThePopeye

நான் நானே..நிகர் ஏதுமில்லை..
Beta Squad
Top Poster Of Month
Joined
Apr 8, 2022
Messages
3,392
Points
153
Location
தமிழ்நாடு
நட்பெனும் உறவும் நம்மிடம் வரவே

நல்துனையாக இத்தளம் கண்டேன்

கற்பனை சிறகை நீட்டியும் பறக்க

வானுமுமிதுவே என்று நான் பறந்தேன்

நண்பர்கள் கோடி நயமுடன் கூடி

சிந்தனை வளர்க்கும் சங்கதி பேசி

இங்கிதம் யாவும் நமக்குள் விதைத்து

சங்கீதம் கூட நமக்காய் இசைத்து

பொங்கிடும் இன்பம் என்றும் அளித்து

சங்கடம் சற்றே மெல்லமாய் அழித்து

கல் மனம் இன்று மெல்ல கரைத்து

கனிவுடன் என்னை பேச பணித்து

சொற்களின் சுவையை அள்ளி தெளித்து

பேசிடும் மாந்தர் தண்ணில் நுழைத்து

என்னையும் ஆளாய் ஆக்கி மகிழ்ந்த

நண்பர்களுடன் அரட்டை தளத்தை

இன்றுநான் தமிழில் வாழ்த்திட வந்தேன்

என்றுமே நீயும் வாழியவே


(எனக்கு நிறைய காயம் தந்தாலும் நிறைய கற்று தந்த நண்பர்கள் அரட்டை தளத்திற்கு ஒரு சிறு கிறுக்கல்)
 
Top