What's new

நரகாசுரன் செத்துட்டானா? எப்போ???

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
அகம் என்ற தமிழ்ச்சொல்லின் பொருள் இருப்பிடம். இன்னொன்று உள்ளம். இலக்கியத்தை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தது இந்த அடிப்படியில் தான். செந்தமிழை கைவிடாமல் புழங்கிடும் வேதியர்கள் இன்றும் தமது இல்லத்த "அகம்" என்று சொல்வதைப் பார்க்கிறோம். ஆத்துல எல்லாரும் சௌக்கியமா என்றால் அகத்தில் - வீட்டில் என்று பொருள். மனைவி தன் கணவரை அகமுடையான் (ஆம்படையான் திரிந்தது) என்றும் வீட்டுக்காரர் என்பதை அகத்துக்காரர் (ஆத்துக்கார் திரிந்தது) என்று சொல்வதும் கணவன் தன் மனைவியை என் அகமுடையாள் (ஆம்படையா - திரிந்தது) என்றும் வீட்டுக்காரி என்பதை அகத்துக்காரி - (ஆத்துக்காரி திரிந்தது) என்றும் சொல்வதை பார்க்கிறோம்.

நர என்றால் மனித உடல். நர சிம்மம் என்றால் மனித உடலும் சிங்கத்து உடலும் என்றும் என்ற பொருள்பட சொல் இருக்கிறது. நர பலி என்றால் மனிதரை பலியிடுதல். நரேந்திரன் என்பது நர + இந்திரன் - அதாவது மனிதர்களின் தலைவன்.

இப்போ இந்த இரண்டு வேர்ச்சொற்களை கூட்டி உண்டாக்கிய சொல் நர + அகம் - நரகம். அதாவது. இந்த மனித உடலை தனது இருப்பிடமாக கொண்டவன் - நரகன். அவன் இருக்குமிடம் நரகம்.

சுரர் என்றால் தேவர் நிலைக்கு உயர்ந்தவர்கள். அ சுரர் என்றால் இன்னும் சுரர் குலத்திற்கு உயராமல் சாராயம் தமிழ்ப்படம் பிரியாணி ஏசி ஐநாக்ஸ் போஸ் ஔடி ஜாகுவார் போன்றவைகளோடு உயிர் வீச்சை முடித்துக்கொள்ளும் அல்ப சீவர்களை குறிக்கும்.

ஸோ, நரகாசுரன் என்றால் நர + அகம் + அசுரன் - இந்நரகத்தில் உழலும் அசுரன். தன்னை தன் உடம்போடு மட்டுமே தொடர்புப்படுத்தி பார்க்கும் நிலையில் இருக்கும் மனிதச் சல்லி.

அப்படி தத்துவங்களால் கட்டுண்டு எல்லைகட்டி இருக்கும் உயிர் அத்தத்துவத் தடைகள் நீங்கினால் தமதுடலைக் கடந்த உணர்தல் உண்டாகுமாம். அப்படி உடலைக் கடந்த ஒருமை உணர்வை வள்ளல் தமது சீவகாருண்ய ஒழுக்கத்தில் "யாவுந் தாமாய் விளங்குவது" என்று குறித்திருக்கிறார். சமீபத்தில் இம்மண்ணில் தோன்றிய ஞானச்சுடர் மகாகவியும் தமது தத்துவ வெற்றியை ஒரு கவியில் அறிவித்தார்.

காக்கை குருவி எங்கள் சாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்


இது எந்தக் கவியிலே வருகிறது?
ஜய பேரிகை கொட்டடா கொட்டடா..

ஜய பேரிகை கொட்டடான்னு எப்போ சொல்வாங்க? போர் முடிந்ததும் படைத்தலைவன் அறிவிக்கச் சொல்வது. வென்று முடித்தாகி விட்டது. கூடாரத்துக்கு திரும்பி ஓய்வு கொள்ளுங்கள் என்று.

தான் இந்த உடல் என்று அறியாமையால், புலன் மயக்கத்தால் நரகில் கட்டுண்டு இருந்த அசுரனை கொன்று கட்டவிழ்த்து எல்லையற்ற வெளியிற் கலந்து யாவும் தாமாய் விளங்கிடும் தத்துவ வெற்றியை அறிவிப்பது ஒவ்வொரு நரக வாசிக்கும் கடமை / வாய்ப்பு.

முடிந்தால் முனிந்து வெல்லலாம். முடியாவிடில் இவசுரர்களிடம் ஆட்பட்டு இறுதிவரை அல்லற்ப்பட்டு காய்ந்த உளத்தோடே போகலாம். நரகனை கொல்வதும் போற்றிக் கொண்டாடி குடியிருப்பதும் நம் இஷ்ட்டம்.

வாழ்த்துக்கள். இல்லை இல்லை.
வாழ்த்துகள்.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
❤️ 💙 💜 அருமை அருமை....
 
Top