நீர் காணா நிலமிங்கே
மழை தூறும் நேரத்தில்
மண்ணுருல மகிழ்ந்தே
மழையோடு விளையாடும்
மழை போல வந்தவளின்
மனம் நோக நானும்தான்
மண்ணாகி போய் கொஞ்சம்
விளையாடி நகைத்தேனே
என் ஆட்டம் புரியாமல்
குழம்பியே போனதவள்
மனது மட்டுமல்ல
மனதோடு செயலும்தான்
அந்த குழப்பத்தில்
அவள் கொஞ்சம் கலங்கியதால்
என்னை தேடி வந்து
மன்னிப்பு கோருகிறாள்
நேஹாவின் ரசனைக்கே
வாகாய் வரும் வார்த்தைகளை
கோர்த்தே எழுதுவதை
என்றும் ரசிக்கும் அவள்
எண்ணம் புரிந்தவனாய்
இக்கவிதை எழுதுகிறேன்
உன்னை நோகவைத்த
அந்த செயலுக்கும்
பெண்ணே உன்னிடத்தில்
உளமார கோருவது
உள்ளமதில் இருந்தே
உயர்வான மன்னிப்பே
மழை தூறும் நேரத்தில்
மண்ணுருல மகிழ்ந்தே
மழையோடு விளையாடும்
மழை போல வந்தவளின்
மனம் நோக நானும்தான்
மண்ணாகி போய் கொஞ்சம்
விளையாடி நகைத்தேனே
என் ஆட்டம் புரியாமல்
குழம்பியே போனதவள்
மனது மட்டுமல்ல
மனதோடு செயலும்தான்
அந்த குழப்பத்தில்
அவள் கொஞ்சம் கலங்கியதால்
என்னை தேடி வந்து
மன்னிப்பு கோருகிறாள்
நேஹாவின் ரசனைக்கே
வாகாய் வரும் வார்த்தைகளை
கோர்த்தே எழுதுவதை
என்றும் ரசிக்கும் அவள்
எண்ணம் புரிந்தவனாய்
இக்கவிதை எழுதுகிறேன்
உன்னை நோகவைத்த
அந்த செயலுக்கும்
பெண்ணே உன்னிடத்தில்
உளமார கோருவது
உள்ளமதில் இருந்தே
உயர்வான மன்னிப்பே