What's new

பக்தியின் பரிணாமம்

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
கோவில் நுழைகையில் நீட்டப்படும் தட்டில்
புண்ணியத்தின் கணக்கெழுதி சில நாணயம்.
அர்ச்சர்கற்கு தட்சணையாம் ஆரத்தி தட்டில்
விண்ணப்பம் செலுத்தியாக வெகு நாணயம்.
உண்டியலில் உடன்படிக்கையாம்
கடவுளுடன்
பக்தியின் பெயரெழுதி பல நாணயம்.

கொடுப்பவன் யார்?
கொண்டவன் யார்?
அடியவன் யார்?
ஆண்டான் யார்?
அஞ்ஞானமா? அகந்தையா?
உண்டியல்கள் சுமைதாங்கியா?
கோவில்கள் பாவிகளின் பாசறையா?
கடவுள் என்ன வியாபாரியா?

கல்விக்கென்று ஒரு தாள் நீட்டுங்களேன்
கலைமகள் தான் கடைக்கண் திறக்கட்டுமே.
மருத்துவ உதவி முந்தி செய்திருங்களேன்
மகேசனும் மந்தகாசமாய் மகிழ்ந்திருக்கட்டுமே.
இரத்ததானம் ஈந்திடுங்களேன்
இலட்சுமியும் கடாட்சம் காணட்டுமே.
பசித்தவனுக்குப் பாசத்துடன் படையலிடுங்களேன்
பரந்தாமனும் பேரொளியுடன் பிரகாசிக்கட்டுமே.
ஏழை குழந்தைகளின் ஏக்கங்கள் துடைத்திடுங்களேன்
அநாதியும் ஆனந்தித்து அமரட்டுமே.
இயற்கையை மீட்டு எடுத்திடுங்களேன்
இறைவனும் எங்கும் மிளிரட்டுமே.

மனம் தான்(மனிதன்) ஈவதில்
சாதியம் கடந்து
எதிலி கடந்து
உற்றம் கடந்து
உள் கடந்து உள் கடந்து உள் கடந்து கடவுளும் சிரிக்கட்டுமே❤🤗
 

Attachments

  • images - 2023-12-28T145141.131.jpeg
    images - 2023-12-28T145141.131.jpeg
    8.2 KB · Views: 0
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
எல்லோரையும் லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கியே பழக்கப்பட்டவன் இறைவனையும் தன்னைப்போல தானே நினைப்பான்?

புறத்தார்க்குச் சேயோன் என்று புகழ்ச்சி பாடியும் புரியலன்னா என்ன தான் பண்றது?
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
எல்லோரையும் லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கியே பழக்கப்பட்டவன் இறைவனையும் தன்னைப்போல தானே நினைப்பான்?

புறத்தார்க்குச் சேயோன் என்று புகழ்ச்சி பாடியும் புரியலன்னா என்ன தான் பண்றது?
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க
🙏🏻🙏🏻🙏🏻 இதன் அர்த்தம் இன்னைக்கு இன்னும் தெளிவோடு விளங்குது
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
பாலும், தேனும், பாகும், பருப்பும்,
நாலும் கலந்து நான் தருவேன்,
உன் கோயில் வருவேன்,
பாடல் புனைவேன்,
குறைகளை தீர்ப்பாய்!
கணபதியே குறைகளை தீர்ப்பாய்!!
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
பாலும், தேனும், பாகும், பருப்பும்,
நாலும் கலந்து நான் தருவேன்,
உன் கோயில் வருவேன்,
பாடல் புனைவேன்,
குறைகளை தீர்ப்பாய்!
கணபதியே குறைகளை தீர்ப்பாய்!!
ஓ ம் ஓ ம் ஓ ம் பாடல் புனைசீங்களோ?
புத்தி யும் சித்தியும் யும் கிடைச்சிருச்சோ? 😀
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
ஓ ம் ஓ ம் ஓ ம் பாடல் புனைசீங்களோ?
புத்தி யும் சித்தியும் யும் கிடைச்சிருச்சோ? 😀
கிடைக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை கிடைத்தால் தெரியபடுத்துகிறேன்.
 
Top