What's new

பரிதவிக்கும் மனசு......

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
கண்டாங்கி சேலையில
இடை அசைச்சு போறவளே
உன் கெண்டை காலு அழகுல
கெறங்குதடி என் மனசு.....

உன் பின் அழகு ஜாடையில
சிலிர்த்துகிட்டு போறவளே
உன் கருங்கூந்தல் அழகுல
சிக்கி தவிக்குதடி என் மனசு......

உன் ஓரவிழி பார்வையில
போதையாக்கி போறவளே
உன் குரோத பார்வை அழகுல
பதறுதடி என் மனசு.....

உன் கொலுசு மணி ஓசையில
வசியம் செய்து போறவளே
உன் பாத நடை அழகுல
சினுங்குதடி என் மனசு....

உன் மூக்குத்தி ஒளியில
மெருகு ஏத்தி போறவளே
உன் மூக்கின் மிளிர் அழகுல
மயங்குதடி என் மனசு

உன் செவ்விதழ் அசைவில
பித்தனாக்கி போறவளே
உன் புன் சிரிப்பு அழகுல
சில்லறையா சிதறுதடி என் மனசு.....
 

QHera

Active member
Joined
Sep 26, 2022
Messages
24
Points
33
கண்டாங்கி சேலையில
இடை அசைச்சு போறவளே
உன் கெண்டை காலு அழகுல
கெறங்குதடி என் மனசு.....

உன் பின் அழகு ஜாடையில
சிலிர்த்துகிட்டு போறவளே
உன் கருங்கூந்தல் அழகுல
சிக்கி தவிக்குதடி என் மனசு......

உன் ஓரவிழி பார்வையில
போதையாக்கி போறவளே
உன் குரோத பார்வை அழகுல
பதறுதடி என் மனசு.....

உன் கொலுசு மணி ஓசையில
வசியம் செய்து போறவளே
உன் பாத நடை அழகுல
சினுங்குதடி என் மனசு....

உன் மூக்குத்தி ஒளியில
மெருகு ஏத்தி போறவளே
உன் மூக்கின் மிளிர் அழகுல
மயங்குதடி என் மனசு

உன் செவ்விதழ் அசைவில
பித்தனாக்கி போறவளே
உன் புன் சிரிப்பு அழகுல
சில்லறையா சிதறுதடி என் மனசு.....
My koonthal is coloured not black , sikki thavikumma manasu?🤭
 
M

Mathangi

Guest
My koonthal is coloured not black , sikki thavikumma manasu?🤭
அதனால என்னங்க Qhera மனச நம்ம சிக்க வைச்சுடுவோம்:ROFLMAO::ROFLMAO:

"உன் பின் அழகு ஜாடையில
சிலிர்த்துகிட்டு போறவளே
உன் கலர் கூந்தல் அழகுல
சிக்கி தவிக்குதடி என் மனசு" - இப்ப சிக்கிடுச்சு பாருங்க...:ROFLMAO: :ROFLMAO:
 
Last edited by a moderator:
O

Ohmylove

Guest
அதனால என்னங்க மனச நம்ம சிக்க வைச்சுடுவோம்:ROFLMAO::ROFLMAO:

"உன் பின் அழகு ஜாடையில
சிலிர்த்துகிட்டு போறவளே
உன் கலர் கூந்தல் அழகுல
சிக்கி தவிக்குதடி என் மனசு" - இப்ப சிக்கிடுச்சு பாருங்க...:ROFLMAO: :ROFLMAO:
Ha ha en machan kita poi kavitha solunga nu keta soluvaruu


உன் இடியாப்ப
பின்னலால என்ன
இடுச்சுப்புட்டு போனியே ...

உன் வெளக்கமாறு கூந்தலுக்கு பட்டு குஞ்சம் வாங்கி வரேன் டீ
பட்டு குட்டி னு..
சொல்லிட்டு ஓடிட்டாரு 🤣🤣🤣
 
M

Mathangi

Guest
Ha ha en machan kita poi kavitha solunga nu keta soluvaruu


உன் இடியாப்ப
பின்னலால என்ன
இடுச்சுப்புட்டு போனியே ...

உன் வெளக்கமாறு கூந்தலுக்கு பட்டு குஞ்சம் வாங்கி வரேன் டீ
பட்டு குட்டி னு..
சொல்லிட்டு ஓடிட்டாரு 🤣🤣🤣
adipaavi ithey kette avaru odirupaaru 🤣🤣
 
Top