மென்பூக்களின் மதுவை சுகித்து
குடிக்கும் தேன்சிட்டுகள்
பாசியில் சுகமாய் சோம்பி
பாங்காய் துழாவும் கிளுவைகள்
சடசடக்கும் மழை அருந்தி
சிலிர்க்கும் சுடலைக் குயில்கள்
பழம் தேடி பறந்து
பழிக்கும் பஞ்சவர்ண புறாக்கள்
சிறு மீனுக்காக கரைந்து
நோகும் நீர்காகங்கள்
நத்தை விரும்பி துழாவி
தின்று உவக்கும் செந்நாரைகள்
ஆசையில் துளி காதல் தேடி
பாடும் வானம்பாடிகள்
சுரைக்காய்கூட்டில் துணை இழந்து
தவிக்கும் தூக்கணாங்குருவி
என்னை ஏகமாய் ஆராய்ந்து
அலறும் ஆந்தை கூட்டம்
நறுக்கென்று கொத்தும்
ஒரு செம்பருந்து
பாடிப்பாடி பறந்திடும்!!!!
கூடி கூடி நடமிடும்!!!!!
கூவி கூவி கூத்துக் கட்டும்!!!
ஆடி ஆடி அடங்கிடும்!!!!!
என் மன வானின் பறவைக் காடு
குடிக்கும் தேன்சிட்டுகள்
பாசியில் சுகமாய் சோம்பி
பாங்காய் துழாவும் கிளுவைகள்
சடசடக்கும் மழை அருந்தி
சிலிர்க்கும் சுடலைக் குயில்கள்
பழம் தேடி பறந்து
பழிக்கும் பஞ்சவர்ண புறாக்கள்
சிறு மீனுக்காக கரைந்து
நோகும் நீர்காகங்கள்
நத்தை விரும்பி துழாவி
தின்று உவக்கும் செந்நாரைகள்
ஆசையில் துளி காதல் தேடி
பாடும் வானம்பாடிகள்
சுரைக்காய்கூட்டில் துணை இழந்து
தவிக்கும் தூக்கணாங்குருவி
என்னை ஏகமாய் ஆராய்ந்து
அலறும் ஆந்தை கூட்டம்
நறுக்கென்று கொத்தும்
ஒரு செம்பருந்து
பாடிப்பாடி பறந்திடும்!!!!
கூடி கூடி நடமிடும்!!!!!
கூவி கூவி கூத்துக் கட்டும்!!!
ஆடி ஆடி அடங்கிடும்!!!!!
என் மன வானின் பறவைக் காடு
Attachments
Last edited: