What's new

மகாகவிக்கு ஒரு காதல் கவி னு சொல்லிக்கறேன்....❤️

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
jeeva-artist-vikatan-2021-09-31d3f229-aabd-4774-bc79-689820a6c4d5-001.jpg

மெய்யெங்கும் நனைய முத்தமிட்டதுபோல்....களிப்பூட்டி...
சிலிர்க்கிறதே .....

மெய்ஞான
முண்டாசுக் கவியூட்டிய
சிருஷ்டிகளில்.....

காதலியும் ஆனான்
கண்ணனுக்கு நாயகியாய்....

காதலனும் ஆனான்
கன்னிகைக்கு நாயகனாய்.....

சுதந்திர தாகமும் ஆனான்....
தணிக்கும் தீர்த்தமும்
ஆனான்....

விளங்கவியலா பேரின்பத்தை
துதித்துப் பாடினான்....

விலக்கவியலா பெருந்துன்பத்தை
இன்பம் கோடி என்றான்....

மனதில் உறுதியும்...
திமிர்ந்த ஞானச் செருக்கும்
வார்த்தான்....
சோர்ந்திட விடாமல்....

படித்திடில் பரவசமாகி....
கேட்டிடில் பரிதவித்து...

மட்டில்லாமல் பிரியம்
கொள்கிறேன்....

மடைதிறந்த வெள்ளமெனும்
கண்ணீரால் காதலாகி உருகுகிறேன்....

நல்லதோர் வீணையை
நலுங்கிடாமல்....
நன்னாளில் மீட்டி...
படித்துப்....பாடி....

நினைவுபடுத்துவோம்....
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
நல்லதோர் வீணையை
நலுங்கிடாமல்....
நன்னாளில் மீட்டி...
மகா கவியின் இந்த வரிகளிலே ஒரு நுட்பத்தை வைத்தருக்கிறார். கவனித்தீர்களா?
இவர் சொல்லும் உவமையை பாருங்கள். என்ன கேட்கிறார் அம்மையிடம்? அதுவும் ஒருமையில் கேட்கிறார் என்றால் என்ன ஒரு உரிமை?
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவருண்டோ? இது உவமானம்
அதாவது என்ன கேக்குறாருன்னா.. யாராச்சும் நல்ல அழகா ஒரு வீணைய மெனக்கெட்டு செஞ்சு அதை கொண்டு போய் குப்பையிலே வீசுவாங்களா? இது காட்டிய உதாரணம். அதாவது உவமானம் அல்லது உவமை.

சரி. இவர் விளக்கிக் கூறப்புகுந்த உவமேயம் என்னவாம்? பார்ப்போமே.
சொல்லடி சிவசக்தி. எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்..
படைச்சு ? அப்படியே நிக்குதே. முடிக்கலையே. உதாரணத்தில் அழகான ஒரு பொருளை உருவாக்கி குப்பைல வீசினது ஒரு முட்டாத்தனமான செயல். இத யாராச்சும் செய்ய்வங்களா? அப்டினு கேட்டவர், உவமேயம் சொல்லும் பொது என்னை இப்படி அறிவோட படைச்சிட்டியே அப்டின்னு சொல்லி நிறுத்தினா என்ன உள் அர்த்தம்? இந்த நாட்டுல கொண்டு போய் போட்டுட்டியே ன்னு தானே அர்த்தம் வருது? அவர் நாட்டு பற்று இல்லாதவர் லாம் இல்லை. ஞானமென்பதோர் சொல்லலின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர் அப்டினு போற்றுறார். அவர் குப்பை குழிக்கு நிகரான உவமேயத்தை சொல்லாமல் விட்டது வெளிப்படையாகச் சொல்லாமல் விட்டாலும் பெறப்படும் பொருள் அவரை பிறப்பித்த இடத்தின் நாட்டின் தரத்தை தான் குறிக்கும். மனம் புழுங்கி பல கவிகள் பழித்தறிவுறுத்தல் என்று இம்மண்ணின் சிறுமைகளை சாடியதும் இதனால் தான். இதிலே முரண் இல்லை. பழையதில் பெருமை. பின்னர் அடைந்த சிறுமையை கண்டு வருந்துவது என்று தெளிந்திடுதல் வேண்டும்.

முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றிருந் தேர்கிலர்
பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள்

என்றும் பாடி விட்டார். தேசப் பற்றில்லாமல் இல்லை. மிகுதியான பற்றினால் நெஞ்சம் வருந்தி சொன்னது என்று புரிந்து கொள்ளவேண்டும்.
 
Top