What's new

மச்ச சாஸ்திரம்

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133

பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா?

மச்ச சாஸ்திரம் சொல்வதென்ன?


Mole Astrology: பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம்.

1) பெண்களுக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் இடத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் அவர்களுக்கு உயர் பதவியில் இருக்கும் ஒருவர் கணவராக அமைவார் என்று மச்சசாஸ்திரம் கூறுகிறது.

2) கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றம், இறக்கம் என இரண்டும் நிறைந்ததாக இருக்கும்.

3) நாக்கில் மச்சம் உள்ள பெண்கள் கலை ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். ரசனைகள் அதிகமாக இருக்கும்.

4) மூக்கின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள். மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

5) மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக இருப்பார்கள் சிறந்த குணசாலியான கணவன் அவருக்கு வாழ்க்கைத்துணைவராக வருவாராம்.

6) பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்குமாம்.

7) முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான செயல்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

8) தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணம் நிறைய இருக்கும். வாழ்க்கையில் மன நிறைவு இருக்காது.
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Konjam apdiyaae left cheek la macham irudha ena nu solungaa nala dhirsti potu mathri iruku.. 😂
Chin la vera iruku... 🤣

Nalatha pathu solungaa ejaman
நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.💐💐
 
Top