What's new

மனதால் மணந்தாள்

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 2
M

Mathangi

Guest
மணமேடை அமைக்கவில்லை,
ஆடை, அலங்காரமில்லை,
மாலை சூடவில்லை,
மங்கள இசை இசைக்கவில்லை,
மாங்கல்யம் பூட்டவில்லை,
ஊரார், உறவினர் வாழ்த்தவில்லை,
அம்மி மிதிக்கவில்லை,
அருந்ததி பார்க்கவில்லை,
என்னவன் என் மனதிலே,
மணந்தேன் மனதினிலே,
வேறு உறவு இனி தேவையில்லை
மனத்தால் மணந்த மனைவியாய்
என்னவனை எண்ணி
மண்ணில் மறையும் வரை வாழ்வேன்....
என்னவன் நினைவுகளோடு.....
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Illaaa ivan than engayaoo nala vangi irukan inga vandhu yarukoo nanadhathu pola soluran nu vadivel joke varum la andha mathri 😆😅
ஹாஹா!!!அப்போ அப்போ correct ஆ சொல்றாலே 🤔🤔🤔 நம்மள கரெக்ட் ஆ watch பன்றாயா @Mathangi நினைக்கும் 🤣🤣🤣😜😜 is it my dear அன்பியே 🤣🤣🤣
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மணமேடை அமைக்கவில்லை,
ஆடை, அலங்காரமில்லை,
மாலை சூடவில்லை,
மங்கள இசை இசைக்கவில்லை,
மாங்கல்யம் பூட்டவில்லை,
ஊரார், உறவினர் வாழ்த்தவில்லை,
அம்மி மிதிக்கவில்லை,
அருந்ததி பார்க்கவில்லை,
என்னவன் என் மனதிலே,
மணந்தேன் மனதினிலே,
வேறு உறவு இனி தேவையில்லை
மனத்தால் மணந்த மனைவியாய்
என்னவனை எண்ணி
மண்ணில் மறையும் வரை வாழ்வேன்....
என்னவன் நினைவுகளோடு.....
மணமேடை அமைத்தாலும்,
ஆடை, ஆபரணங்கள் அமைத்தாலும்,
மாலைகள் சூடினாலும்,
மங்கள இசை இசைத்தாலும்,
மாங்கல்யம் பூட்டினாலும்,
உற்றார், உறவினர்கள் வாழ்த்தினாலும்,
அம்மி மிதித்தாலும்,
அருந்ததி பார்த்தாலும்,
என்னவள் என் மனதிலே,
மணந்தேன் அவளை காந்தர்வமாய்,
வேறு உறவே இனி தேவையில்லை,
மனதால் மனதை கொள்ளைகொண்ட என் மனையாளை,
எண்ணி எண்ணி இம்மண்ணில் மறையும் வரை வாழ்வேன்.... 😍🥰
என்னவளின் ஒவ்வொரு துளி நினைவலைகளோடு.... 🥰😍
 
Top