• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

மருதாணி அரச்சி வச்சேன்!! 😍🥰

View attachment 3153


மூன்று தினங்களுக்கு முன்பு மருதாணி அரைத்து வைத்தேன் 😍😍

இப்பொழுதெல்லாம் மருதாணி அரைத்து வைப்பது குறைந்துவிட்டது. செயற்கை மருதாணி பிரபலம் ஆகிவிட்டது. ஆனால் அரைத்து வைக்கும் மருதாணியில் சில நன்மைகள் உண்டு..

மருதானியின் பயன்கள்

  • மருதா‌ணி இலையை அரை‌த்து கைககளு‌க்கு வை‌த்து வர, உட‌ல் வெ‌ப்ப‌ம் த‌ணியு‌ம்.
  • கைகளு‌க்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர மனநோ‌ய் (stress, depression) ஏ‌ற்படுவது குறையு‌ம்.
  • சிலரு‌க்கு மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ல் ச‌ளி ‌பிடி‌த்து ‌விடு‌ம். இத‌ற்கு மருதா‌ணி இலைகளை அரை‌‌க்கு‌ம் போது கூடவே 7 அ‌ல்லது 8 நொ‌ச்‌சி இலைகளை சே‌ர்‌த்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
  • மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம்.
  • ஆனா‌ல் இ‌ந்த பய‌ன்க‌ள் எ‌ல்லா‌ம் த‌ற்போது கடைக‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் மருதா‌ணி கோ‌ன்க‌ளி‌ல் ‌கிடை‌க்க வா‌ய்‌ப்பே இ‌ல்லை எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்க.
உடல் சூட்டை குறைக்கும்
மருதாணியை உள்ளங்கை மற்றும் பாதத்தில் வைப்பதால் அதில் உள்ள குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைக்கிறது. இதனால் உடல் வெப்பத்தால் ஏற்படும் தோல் நோய்கள்,வயிற்று உபாதைகள் போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது.

தலை முடி
முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர,மருதாணியை அரைத்து தலைக்கு குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

தீக்காயம்
தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். மருதாணி இலைகளை அரைத்து தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.

வலி நிவாரணி
மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர் அல்லது பேஸ்ட்டை நெத்தியில் தடவினால் தீராத தலைவலியாக இருந்தாலும் கூட குறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு
மருதாணி இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.

தூக்கமின்மை
மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் நன்றாக வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.
எல்லாம் ஓகே.ஆனா எனக்கு ஒரு சந்தேகம்.அது ஏன் யாரு கைல மருதாணி போட்டாலும் நடுல தோசை கல் வச்சு சுத்தி இட்லி வைக்கிறீங்க? அடுத்த முறை இடியாப்பம் வைங்க... நிறைய பேருக்கு இங்க பிடிக்கும்
 
எல்லாம் ஓகே.ஆனா எனக்கு ஒரு சந்தேகம்.அது ஏன் யாரு கைல மருதாணி போட்டாலும் நடுல தோசை கல் வச்சு சுத்தி இட்லி வைக்கிறீங்க? அடுத்த முறை இடியாப்பம் வைங்க... நிறைய பேருக்கு இங்க பிடிக்கும்
எனக்கு ஒரு rava ரோஸ்ட் master!!! Then, பொடி தோசை 🤣🤣🤣
 
எல்லாம் ஓகே.ஆனா எனக்கு ஒரு சந்தேகம்.அது ஏன் யாரு கைல மருதாணி போட்டாலும் நடுல தோசை கல் வச்சு சுத்தி இட்லி வைக்கிறீங்க? அடுத்த முறை இடியாப்பம் வைங்க... நிறைய பேருக்கு இங்க பிடிக்கும்
Idiyappam design laam kaila nalla irukaathu... 😂

Kaiya hotel nu ninachitanga pola.. idly dosai idiyappam rava roast nu order panraanga 🤭😂
 
Back
Top