What's new

மருமகளிடம்...

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
" வாழ்க்கை ஒன்று வாழ்ந்திட

வாசப்படி ஏறும் வெண்ணிலா..

வாழ்ந்த வீடு வசந்தம் எல்லாம்

வாழ்க்கைத்துணை வீட்டில் கிடைக்குமா "



பெற்ற அன்பு பிள்ளையாய்..

பெத்த மனம் பதறிடுமா..

கை பிடித்து கொடுத்துவிட்டு

கை கழுவுதல் நியாயம் ஆகுமா?



நாலடி சுவர்க்குள்ளே,

நாத்தைக்கு பங்கு வேண்டுமாம்..

நாள் பார்த்து வந்திடுமாம்..

நாகப்பாம்பு விஷம் தெளித்துடுமாம்.



அன்னைக்கு அன்பு பிள்ளையாய்

அன்பான கணவனம்மா..

அத்தனையும் ஏற்றுக்கொள்,

அதுதான் உன் விதி என்பானம்மா..



பிள்ளைப்பேறு காலம் வரும்.

பிறந்திட வீடு செல்லும் ஏங்கும் மனம்..

செல்லாத காசாக

செல்லரிச்சு போய்டுதம்மா...



ஆசையோடு வந்த வீட்டில்

ஆலமரம் ஊஞ்சல் ஆடுதம்மா..

ஆடி மாசம் முடிஞ்சதுமே

ஆட்டுக்குட்டி ஆசை அடங்குதம்மா..



ஆண்டுக்கு ஒருமுறைதான்..

அன்னை வீட்டு சோறம்மா..

சோலைக்காட்டு பொம்மை ஒன்று

சொல்லாமலே போனதம்மா...


தாய்வீடு சென்றுவிட்டால்..

தாமதமாக வந்துவிட்டால்..

தாங்காத கேள்வியும்மா..

தாலிக்கும் தண்டனை தரும்மம்மா.


படிச்ச படிப்பெல்லாம்

பாழாகி போனதம்மா...

பச்சரிசி பொங்குதம்மா..

பசியில பயிர் கருகுதம்மா..



ஆக்கி வச்ச சோத்துலதான்...

ஆயிரம் குறை சொல்லுமம்மா...

சொந்தங்கள் என்று பார்க்காம

சொடுக்கு போட்டு சொல்லுதம்மா..



பெத்த மனம் ஊமையம்மா..

பெத்த பிள்ளைக்காக வாழுதம்மா..

ஆக்கி வைச்ச சோறும் இங்கே

அரைவயிறு செல்ல மறுக்குதம்மா..



கண்ணீர் விட்டு கதற இங்கே

கண் தண்ணீருக்கும் பஞ்சமம்மா..

கண்டாங்கி சேலை எல்லாம்

கண்ணீரிலே கரையுதம்மா..



பொண்ணாக பொறந்ததாலே

தொப்புள்கொடி இங்கு மாறிடுமா?

பொத்தி வைச்ச பொறுமை எல்லாம்

பொழுதுபோக்கா போனதம்மா...


ஊருக்கு ஓரமா...

ஒத்த ரோஜா பூத்ததும்மா..

ஒத்தையா பூத்ததாலே...

ஒத்துழைப்பு இல்லாம நிக்குதம்மா..



என் வீட்டு மருமகள்தான்

என்னோட மகள் என்பார்களம்மா..

நம்பி நானும் போனேம்மா...

நடுபாதை வழி அழிந்ததம்மா...


கடந்த கால கதையிலதான்..

கள்ளிப்பாலால் கொன்னாங்களம்மா...

காரணம் இப்போ தெரிந்ததம்மா...

கஷ்டப்படுவ என்று கொன்னாங்களம்மா.....


































 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
" வாழ்க்கை ஒன்று வாழ்ந்திட

வாசப்படி ஏறும் வெண்ணிலா..

வாழ்ந்த வீடு வசந்தம் எல்லாம்

வாழ்க்கைத்துணை வீட்டில் கிடைக்குமா "




பெற்ற அன்பு பிள்ளையாய்..

பெத்த மனம் பதறிடுமா..

கை பிடித்து கொடுத்துவிட்டு

கை கழுவுதல் நியாயம் ஆகுமா?



நாலடி சுவர்க்குள்ளே,


நாத்தைக்கு பங்கு வேண்டுமாம்..

நாள் பார்த்து வந்திடுமாம்..

நாகப்பாம்பு விஷம் தெளித்துடுமாம்.



அன்னைக்கு அன்பு பிள்ளையாய்

அன்பான கணவனம்மா..

அத்தனையும் ஏற்றுக்கொள்,

அதுதான் உன் விதி என்பானம்மா..



பிள்ளைப்பேறு காலம் வரும்.

பிறந்திட வீடு செல்லும் ஏங்கும் மனம்..

செல்லாத காசாக

செல்லரிச்சு போய்டுதம்மா...




ஆசையோடு வந்த வீட்டில்

ஆலமரம் ஊஞ்சல் ஆடுதம்மா..

ஆடி மாசம் முடிஞ்சதுமே


ஆட்டுக்குட்டி ஆசை அடங்குதம்மா..



ஆண்டுக்கு ஒருமுறைதான்..

அன்னை வீட்டு சோறம்மா..

சோலைக்காட்டு பொம்மை ஒன்று

சொல்லாமலே போனதம்மா...


தாய்வீடு சென்றுவிட்டால்..

தாமதமாக வந்துவிட்டால்..

தாங்காத கேள்வியும்மா..

தாலிக்கும் தண்டனை தரும்மம்மா.


படிச்ச படிப்பெல்லாம்

பாழாகி போனதம்மா...

பச்சரிசி பொங்குதம்மா..

பசியில பயிர் கருகுதம்மா..



ஆக்கி வச்ச சோத்துலதான்...

ஆயிரம் குறை சொல்லுமம்மா...

சொந்தங்கள் என்று பார்க்காம


சொடுக்கு போட்டு சொல்லுதம்மா..



பெத்த மனம் ஊமையம்மா..

பெத்த பிள்ளைக்காக வாழுதம்மா..

ஆக்கி வைச்ச சோறும் இங்கே

அரைவயிறு செல்ல மறுக்குதம்மா..




கண்ணீர் விட்டு கதற இங்கே

கண் தண்ணீருக்கும் பஞ்சமம்மா..

கண்டாங்கி சேலை எல்லாம்

கண்ணீரிலே கரையுதம்மா..



பொண்ணாக பொறந்ததாலே

தொப்புள்கொடி இங்கு மாறிடுமா?

பொத்தி வைச்ச பொறுமை எல்லாம்

பொழுதுபோக்கா போனதம்மா...


ஊருக்கு ஓரமா...


ஒத்த ரோஜா பூத்ததும்மா..

ஒத்தையா பூத்ததாலே...

ஒத்துழைப்பு இல்லாம நிக்குதம்மா..



என் வீட்டு மருமகள்தான்

என்னோட மகள் என்பார்களம்மா..

நம்பி நானும் போனேம்மா...

நடுபாதை வழி அழிந்ததம்மா...


கடந்த கால கதையிலதான்..

கள்ளிப்பாலால் கொன்னாங்களம்மா...

காரணம் இப்போ தெரிந்ததம்மா...

கஷ்டப்படுவ என்று கொன்னாங்களம்மா.....

































👌👌👌👌 donnu mama @Assistantdon
 
Top