What's new

மழை வெள்ளம் (திருநெல்வேலி)

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
பேய் மழையே

நீர் செல்லும் பாதையை மேடாக்கி
அதையும் பின்னாளில் வீடாக்கி
தடை போட்டு தடுத்த மனிதன்
தலையில் கொட்டு வைக்க
தவறாமல் வருடத்தின் இறுதியில்
தாக்கிடுவாய் சென்னையை

கான்கிரீட் காடான அங்கே
கொட்டி தீர்த்து நீயும் தங்க
பித்து பிடித்து அவர்கள் புலம்ப
பின்னர் மன்னித்து நீ கிளம்ப
வருடந்தோறும் இதை கண்டோம்
வருத்தமின்றி தானே கடந்தோம்

இந்த முறை என்ன ஆச்சு
நெல்லையில் உன் ஆட்சி
நீயும் தான் வந்த பின்னே
உன்னை பற்றி தான் பேச்சு
மண் மேலே பாசம் வச்சு
மக்களையும் தான் மதிச்சு
ஆதாரம் என இருந்த - நீ
சேதாரம் செஞ்சிட்டியே
பேயாக நீ அடிக்க
பயந்து நெல்லை துடிக்க
பார்த்ததுதான் கவலையில்
என் கண்ணும் நீர் வடிக்க
என்னதான் கோவமென
கேக்கதான் தோணுதம்மா
யாருகிட்ட நான் கேப்பென்
எதுவும் புரிய வில்லையம்மா

கடவுள் கிட்ட முறையிடத்தான்
கை கூப்பி நான் நின்றேன்
கடவுளோ என்னிடத்தில்
என்ன குறை என கேட்டார்
மழை பேஞ்சு மக்களெல்லாம்
தவிப்பதையே நான் சொல்ல
அதன் பாதை ஏன் அடைச்ச
என திருப்பி அவர் கேட்டார்

என்ன பதில் சொல்லுறது
என்று எதும். விளங்காம
அறிவாளி பெருமையெல்லாம்
அடகு வச்சு நிக்கிறேனே

என்ன குறை இருந்தாலும்
எங்க கிட்ட சொல்லு நீ
தீர்த்து தானே வைக்கிறோம்
கொஞ்சம் தயவு செஞ்சு செல்லு நீ
 
Top