- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
மலரும் நினைவுகளை
மனம் முழுக்க தந்தவளே
மலரின் மென்மையினை
மனம் முழுக்க கொண்டவளே
அறிவாய் சில நேரம்
நீயும் பேசிடுவாய்
குளிரும் தென்றலென
எனக்குள்ளே வீசிடுவாய்
மறுத்தால் முறைப்பாக
என் கண்ணை நீ பார்க்க
மயிலின் தோகை என
என்னை நீ கூசிடுவாய்
அன்பாய் பேசையிலே
என்னுடைய அன்னையும் நீ
தெம்பாய் வாழ சொன்ன
என்னுடைய தந்தையும் நீ
அரும்பாய் பூத்திருக்கும்
புன்னகையில் பூவும் நீ
குறும்பாய் வம்பு செய்யும்
என்னுடைய தோழியும் நீ
முகம் காண நான் கேட்டால்
வீம்பாக மறுத்திடுவாய்
அகம் காட்டி என்னோடு
குறும்பாக சிரித்திடுவாய்
ஆசையாய் நான் பேச
விரும்புகிறேன் மொழியால்
அன்புடனே எனை தாங்கும்
மலர் போன்ற விழியாலே
மனம் முழுக்க தந்தவளே
மலரின் மென்மையினை
மனம் முழுக்க கொண்டவளே
அறிவாய் சில நேரம்
நீயும் பேசிடுவாய்
குளிரும் தென்றலென
எனக்குள்ளே வீசிடுவாய்
மறுத்தால் முறைப்பாக
என் கண்ணை நீ பார்க்க
மயிலின் தோகை என
என்னை நீ கூசிடுவாய்
அன்பாய் பேசையிலே
என்னுடைய அன்னையும் நீ
தெம்பாய் வாழ சொன்ன
என்னுடைய தந்தையும் நீ
அரும்பாய் பூத்திருக்கும்
புன்னகையில் பூவும் நீ
குறும்பாய் வம்பு செய்யும்
என்னுடைய தோழியும் நீ
முகம் காண நான் கேட்டால்
வீம்பாக மறுத்திடுவாய்
அகம் காட்டி என்னோடு
குறும்பாக சிரித்திடுவாய்
ஆசையாய் நான் பேச
விரும்புகிறேன் மொழியால்
அன்புடனே எனை தாங்கும்
மலர் போன்ற விழியாலே