What's new

வாழ்க்கை பயணம் (போராட்டம்).....

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 0
M

Mathangi

Guest
யாருக்காக இவ்வுயிர் ?
எதற்காக இந்த உயிர் ?
ஏன் இந்த வாழ்வு ?
முடிவு என்னும் எல்லையை நோக்கி
ஒவ்வொரு நாளும் போராட்ட பயணம்
நிலைப்பது எதுவும் இல்லை
நீடிப்பதும் எதுவும் இல்லை
வருவதும் தெரிவதும் இல்லை
வாழ்வது புரிவதும் இல்லை
எதற்காக என்று விடை தெரியாமல்
இப்போராட்ட பயணம்....
ஏன் இந்த அன்பு ?
ஏன் இந்த நேசம் ?
ஏன் இந்த பாசம் ?
ஏன் இந்த பரிவு ?
ஏன் இந்த பிரிவு?
ஏன் இந்த இன்பம் ?
ஏன் இந்த துன்பம் ?
ஏன் இந்த ஆசை ?
ஏன் இந்த அவதி ?
ஏன் படைத்தான்?
ஏன் எடுத்தான் ?
விளக்கம் அறியாமல், வினவுது பலர் மனம்....
சிலர், பலர் பாச பிணைப்புகள்.....
பாதியில்,
சிலர் அவதியில்
இப்படியும் ஓர் வாழ்வு
விடை தெரியாமல் தொடர்கிறது.....
தினப் போராட்டத்தில்....
 
Last edited by a moderator:
Top