What's new

விரயம்..

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
கல்லொன்றை எடுத்து உளி கொண்டு செதுக்க
துகள் மட்டும் இங்கே விரயமடா
அழகிய சிலையும் கிடைக்குமடா


வில்லொன்றை எடுத்து அம்பொன்றை பொருத்தி
எய்தால் அம்பே விரயமடா
இலக்கு நம் வசம் ஆகுமடா


சொல் ஒன்றை எடுத்து வரிகளில் பொருத்த
நேரம் மட்டும் விரயமடா
அழகிய கவிதை பிறக்குமடா


மனமதை கவரும் பெண்ணை கண்டால்
இதயம் இங்கே விரயமடா
எதிர்காலம் நமக்குக் கிடைக்குமடா


இப்படியாக எல்லா செயலிலும்
ஏதோ ஒன்று விரயமடா
என்றால் கூட ஏதோ ஒன்று
நமக்கதில் நன்றாய் கிடைக்குமடா


என்ன கொண்டு வந்தோம் நாமே
அதை நாம் இங்கே இழப்பதற்கு
என்பதை கொஞ்சம் புரிந்து கொண்டால்
விரயத்தில் பயமில்லயே நமக்கு


கண்டு கேட்டு உண்டு உணர
ஐம்புலன் என்று நமக்கிருக்கு
அதிலே குறையாய் வாழ்பவர் பார்

விரயத்தில் கவலையும் நமக்கெதுக்கு


(தோழி @Laughing colour கொடுத்த தலைப்பு)
 
Last edited:

Laughing colour

Well-known member
Joined
Nov 2, 2023
Messages
104
Points
63
கல்லொன்றை எடுத்து உளி கொண்டு செதுக்க
சில துகள் மட்டும் விரயமடா
அழகிய சிலயும் கிடைக்குமடா

வில்லொன்றை எடுத்து அம்பொன்றை பொருத்தி
எய்தால் அம்பே விரயமடா
இலக்கு நம் வசம் ஆகுமடா

சொல் ஒன்றை எடுத்து வரிகளில் பொருத்த
நேரம் மட்டும் விரயமடா
அழகிய கவிதை பிறக்குமடா

மனமதை கவரும் பெண்ணை கண்டால்
இதயம் இங்கே விரயமடா
எதிர்காலம் நமக்குக் கிடைக்குமடா

இப்படியாக எல்லா செயலிலும்
ஏதோ ஒன்று விரயமடா
என்றால் கூட ஏதோ ஒன்று
நமக்கதில் நன்றாய் கிடைக்குமடா

என்ன கொண்டு வந்தோம் நாமே
அதை நாம் இங்கே இழப்பதற்கு
என்பதை கொஞ்சம் புரிந்து கொண்டால்
விரயத்தில் பயமில்லயே நமக்கு

கண்டு கேட்டு உண்டு உணர
ஐம்புலன் என்று நமக்கிருக்கு
அதிலே குறையாய் வாழ்பவர் பாரு

விரயத்தில் கவலையும் நமக்கெதுக்கு


(தோழி @Laughing colour கொடுத்த தலைப்பு)
தலைப்புக்கு ஏற்ற அருமையான கவிதை 💐 👏👏மிகவும் நன்றாக👌 எழுதி உள்ளீர்கள் மிக்க நன்றி 🙏
 
Top