What's new

50 வயதில் உடல் பசிக்கு என்ன பதில்...?

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
மனிதனுக்கு எத்தனையோ வழிகளில் ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவு, உயர்ந்த நட்பு, சிறந்த கேளிக்கை, விளையாட்டு போன்ற பல்வேறு வழிகளில் ஆனந்தம் அடையும்போது ஏற்படாத குற்ற உணர்வு, காமத்தினால் கிடைக்கும் ஆனந்தத்தில் உருவாகிறது.

செய்யக்கூடாத ஒரு தவறு செய்துவிட்டது போல் உணர்கிறான். இது சரிதானா..?

“50 வயதிலும் என் உடல் காமத்தை எதிர்பார்க்கிறது... என்னால் இதை தவிர்க்க இயலவில்லை. ஆனால், இதுபற்றி பேசுவதற்கு அவமானமாக இருக்கிறது’’ என்று கேட்பவர்களுக்கு என்ன பதில்?

’80 வயதானாலும் வயிறு பசிப்பது போன்று உடலும் பசிப்பது தவறு இல்லை. உலகில் மனிதன் மட்டுமே குழந்தை பெறுவதைத் தாண்டியும் காமத்தை ஆனந்தத்திற்குப் பயன்படுத்துகிறான். சந்தோஷம், ஆனந்தம் தரும் எதுவும் தவறு இல்லை.

அதே நேரம், ஆணும் பெண்ணும் பிறர் துணையின்றியும் காமத்தை வெல்ல முடியும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நிறைவேறாத ஆசை பெருங்கோபமாக மாறி விடும். எனவே, காமத்தை தீர்ப்பதற்கு இன்னொரு நபர் வேண்டும் என்று காத்திருப்பதில் அர்த்தம் இல்லை.

வாழ்க்கை என்பது குடும்பம், பணம், ஆரோக்கியம், கேளிக்கை, அன்பு போன்ற பல்வேறு கூறுகள் கொண்ட முழுமையான ஒரு சக்கரம். இதில் காமத்துக்கும் ஓர் இடம் நிச்சயம் உண்டு. மலர்களை ரசிப்பது போன்று காமத்தையும் அனுபவித்து நகர்ந்துவிடுங்கள். இதில் அச்சப்படவோ, மகிழவோ எதுவும் இல்லை.

உங்கள் காமத்துக்கு பிறரை இரையாக்கவோ அல்லது பிறரது காமத்துக்கு நீங்கள் இரையாகவோ மாறிவிட வேண்டாம். பரஸ்பரம் அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுங்கள்… ’’
 
Top