- Joined
- May 27, 2023
- Messages
- 3,746
- Points
- 133
படித்ததில் பாதித்த இன்றைய கவிதை
தந்தையே
உன்னைக் கொன்றது
மிக மிகத் தாமதம் என்கிறாள்
ஒரு தேசபக்தை
படத்தில் உன்னை
மீண்டும் சுட்டுச்சுட்டு
ஆத்ம சாந்தி கொள்கிறாள்
ஒரு இராமபக்தை
பழைய இந்தியாவில் நீ
புதிய இந்தியாவில்
உன் நினைவுகள்...
நவகாளி நாயகனே!
உன்னை
நாட்டில் அல்ல...
நவராத்திரி கொலுவில்
ஒரு பொம்மையாகப் பார்க்கக்கூட
பாவமாக இருக்கிறது
#பழநிபாரதி