- Joined
- May 27, 2023
- Messages
- 3,746
- Points
- 133
தீபமெனும் பலவகை விளக்கிட்டு
ஒளி ஏற்றுவோம்.....
தீதும் பாபமும் விலகட்டும்
ஒழிந்து முற்றிலும்......
தித்தித்து திகட்டட்டும்...
தின்பண்ட இனிப்புகளில்...
தீப்பொறிகள் பல வடிவில் பறந்து
விண்ணில் ஒளிரட்டும்.....
சுற்றி சுற்றி ஓடட்டும்
சங்கெனும் ஒளி.....
ஒளியாய் பூக்கட்டும்.....
பூந்தொட்டி பூக்களெலாம்.....
தூவட்டும் வானத்தில் வாண ஒளி... கொட்டட்டும் வண்ண ஒளியை தெளித்து தெறித்து...
ஒளியியலும் ஒலியியலும் படிக்கப்படட்டும்....
பட்டாசு வெடிகளாய்...
விட்டு விட்டும்...
விடிய விடியவும்....
தாவியோடிடும் பட்டுப்பாவாடை தாவணிகளும்....
தட்டுத் தடுமாறும் கட்டுப்படாத காளையரும்......
தத்தி தத்தி ஒளிந்து கொள்ளும் தேவதைக் குழந்தைகளும்...
பட்டாசு பொடியன்களும்......
மாப்பிள்ளை கோலத்தில் ஆடவரும்....
சரிகை பட்டு சரசரக்க பெண்டிரும்....
வாழ்த்துகளுடன் நானும்.....
விடிந்தால் தீபாவளி...
இனிய தீபாவளி வாழ்த்துகள்....
️