What's new

How To Get Soft and Fluffy Idlis !!

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
How to மேக் soft idlies ❤🍛🍛🍚❤:

Simple tips to make soft idlis in tamil: 4 பங்கு இட்லி அரிசிக்கு 1 பங்கு உளுந்து, 1 ஸ்பூன் வெந்தயம், 1 ஸ்பூன் வெள்ளை அவல் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைத்து அரைத்தால் மிருதுவான மற்றும் புசுபுசு இட்லிகளை பெறலாம்.
tamil-indian-express-2022-01-09T194208.527.jpg

healthy food tips in tamil: தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக இட்லி வலம் வருகிறது. இவற்றுக்கு சூடான சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னிகள் அசத்தலாக இருக்கும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகவும் இட்லி உள்ளது.

இந்த சூப்பர் ஃபுட்டை சாஃப்டாக தயார் செய்வது மிகவும் ஈஸியாகும். ஆனால், நம்மில் சிலர் சிரமப்படுகிறோம். சாஃப்டான இட்லிகளை தயார் செய்வது ஒன்றும் மாய வித்தை அல்ல. இவற்றுக்கு சில சிம்பிளான டிப்ஸ்களை போதும். அப்படிப்பட்ட ஈஸியான டிப்ஸ்களையும், நீங்கள் மறக்கவே கூடாத சில சீக்ரெட்ஸ்களையும் இங்கு பகிர்ந்துளோம். அவற்றை இப்போது பார்க்கலாம்.
tamil-indian-express-2022-01-09T195740.460.jpg

பஞ்சுபோன்ற சாஃப்டான இட்லிகள் தயார் செய்ய சிம்பிள் டிப்ஸ்!!

அரிசி வகை
பஞ்சுபோன்ற சாஃப்டான இட்லிகளைப் பெற, நீங்கள் இட்லி அரிசியை பயன்படுத்த வேண்டும். அல்லது புழுங்கல் அரிசியைப் பயன்படுத்த வேண்டும். இந்த அரிசிகள் கிடைக்கவில்லை என்றால், குறுகிய அல்லது நடுத்தர தானிய அரிசியைப் பயன்படுத்தலாம்.

குளிர்ந்த பிறகும் மென்மையாக இருக்கும் பஞ்சுபோன்ற இட்லிகளைப் பெற விரும்பினால், நீண்ட தானிய அரிசியைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். எனினும், நீங்கள் புழுங்கல் அரிசியை பயன்படுத்தும்போது அவை இட்லி சமைக்க எளிதாக இருக்கும் மற்றும் இவை அதிக சத்தானதும் கூட.

2. பருப்பு வகை
இட்லிக்கு, பெரும்பாலும் முழு அல்லது பிளவுபட்ட உளுந்து பயன்படுத்தப்படுகிறது. இட்லிக்கு முழு உளுந்தையே பயன்படுத்தலாம். ஏனெனில் இவை அதிக சத்தானது.

பொதுவாக இட்லி மாவுக்கு அரிசி மற்றும் பருப்பு 2:1 என்ற விகிதத்தில் தான் அளந்து கொள்ள வேண்டும் (ஒவ்வொரு கப் பருப்புக்கும் 2 கப் அரிசி). நீங்கள் எந்த கப் அரிசி அளக்க பயன்படுத்துகிறீர்களோ அதே கப்பை தான் உளுந்து அளக்கவும் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

tamil-indian-express-2022-01-09T195753.087.jpg

3. ஊறவைத்தல்:
சிலர் உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக ஊறவைப்பார்கள், ஆனால் இரண்டையும் தனித்தனியாக ஊறவைப்பது உங்களுக்கு சிறந்த பலனைத் தரும். ஏனென்றால், அரிசி மற்றும் உளுந்து மென்மையாக மாறுவதற்கு வெவ்வேறு அளவு தண்ணீர் தேவை. உளுந்துக்கு பொதுவாக ஒரு பகுதிக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.

4. அரைத்தல்
இட்லி மாவு அரைக்க நீங்கள் பயன்படுத்தும் கிரைண்டர் வகையும் இட்லியின் அமைப்பில் முழு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இட்லி மாவு தயாரிக்க நீங்கள் வெட் கிரைண்டர் பயன்படுத்துவது மிகவும் நல்லது. வெட் கிரைண்டரின் உள்ளே இருக்கும் கற்கள் மென்மையாதாக இருக்கு. இது பஞ்சுபோன்று அரைக்கவும் உதவும்.

5. இரகசிய மூலப்பொருள்
பஞ்சுபோன்ற சாஃப்டான இட்லிக்கு ஊறவைத்த வெந்தயம் நன்கு வேலை செய்யும். இவை இட்லியை சாஃப்டாக மாற்ற உதவுகிறது.

இருப்பினும், வெந்தய விதைகளின் சுவை அனைவருக்கும் பிடிக்காது. எனவே உங்கள் மாவுடன் அவற்றை ஒரு சிறிய அளவில் சேர்ப்பதன் மூலம் நீங்கள் பரிசோதனை செய்யலாம்.

நீங்கள் இட்லி மாவு அரைக்கும் போதே அவற்றுடன் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் சாஃப்ட் இட்லி கிடைக்கும்.

இது தவிர, 4 பங்கு இட்லி அரிசிக்கு 1 பங்கு உளுந்து, 1 ஸ்பூன் வெந்தயம், 1 ஸ்பூன் வெள்ளை அவல் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைத்து அரைத்தாலும் மிருதுவான மற்றும் புசுபுசு இட்லிகளை பெறலாம்.
tamil-indian-express-2022-01-09T195844.014.jpg
 
Top