சுதந்திரம்
சுதந்திரம் இரண்டு வகைப்படும் ஒன்று எடுத்துக்கொள்வது மற்றொன்று கொடுப்பது
சுதந்திரம் கொடுப்பது
நம் பிள்ளைகளின் வாழ்வை அவர் விரும்பும் வகையில் தீர்மானிக்க விடுவது
சுதந்திரம் கொடுப்பது நல்வழியில் நடந்திட
சுதந்திரம் கொடுப்பது மற்றவர்களுக்கு உதவி செய்திட
சுதந்திரம் கொடுப்பது சமுதாயம் மேம்பட
சுதந்திரம் எடுத்துக் கொள்வது
பிறர் மனதை பிறர் மதத்தை புண்படுத்த அல்ல
சுதந்திரம் எடுத்துக் கொள்வது
நம் கலாச்சாரத்தை சீர் கெடுப்பதற்கு அல்ல
சுதந்திரம் எடுத்துக் கொள்வது
அரைகுறை ஆடை அணிந்து
திரிவதற்கு அல்ல
சுதந்திரம் எடுத்துக் கொள்வது
மற்ற நாட்டவரின் பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கு அல்ல
நாம் எடுத்துக் கொள்ளும் சுதந்திரமும் கொடுக்கும் சுதந்திரமும் நம் தாய்த்திரு நாட்டை யும் நம் கலாச்சாரத்தையும் காத்திடவே பயன்பெற வேண்டும்
வேரறுப்போம் வேற்றுமையை
காத்திடுவோம் ஒற்றுமையை
சுவாசிப்போம் நம் தாய்நாட்டின் சுதந்திரத்தை
ஜெய் பாரத் மாதா
வந்தே மாதரம்

வாழ்க இந்தியா வளர்க இந்தியா
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


JOKERR
