What's new

Sales and Marketing!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Marketing - மண்ண கூட மார்க்கெட்டிங் பண்ணா தங்கம்னு விக்க முடியும். ஆனா அது எப்படி பன்றோம்கிறது ரொம்ப முக்கியம். முதல்ல அது யாருக்கான பொருள். அது எதுக்கு யூஸ் பன்றோம்கிறது பேஸ் பண்ணி அந்த மார்க்கெட்டிங் ஆரம்பிக்குது. இப்போ நான் முதல்ல சொன்ன நீங்க தேவையே இல்லைன்னு நினைக்கிற

C472F81D-3F7E-4A8F-8678-BA53C817178B.jpeg


பொருள உங்கள வாங்க வைக்கிறது பத்தி சொல்றேன். அதுக்கு தேவையும் இதே மார்க்கெட்டிங் தான். இப்போ எந்த பொருள வாங்க மாட்டேன்னு சொல்லுவிங்க. மேக்ஸிமம் அது உங்ககிட்ட ஏற்கனவே இருக்கிற பொருளா இருக்கும். இல்லாட்டி இது நமக்கு எதுக்குன்னு தோணுற பொருளா இருக்கும். முதல்ல இரண்டாவது பொருள் பத்தி
D5CA542E-0E60-42DC-948D-C67C3E20F589.jpeg
Example - Philsbury cake. முதல்ல நாம இந்த பாக்கெட்ட சூப்பர் மார்க்கெட்ல பார்த்த உடனே நமக்கு என்ன தோணும். இது எதுக்கு நமக்குன்னு. உங்களுக்கு தோனுற அந்த விஷயம் இப்போ எப்படி மாருதுன்னு பாருங்க‌. அந்த கம்பெனி காரன் முதல்ல கேக் ரெடி பண்ணி pocket போட்டு வித்தான்(Philsbury cookiecake)

21A52B86-7895-4B9A-8870-69D93CB2A3B6.jpeg


அதை நாம வாங்க மாட்டோம்னு தெரிஞ்சு அந்த Advertisementஅ எல்லார் வீட்டு டிவியிலையும் ஒட விட்டான். அதுல முக்கியமா காட்டுன கலர் அன்ட் பிளேவர் குழந்தைங்களுக்கு பிடிச்சது. நாம 500₹ செலவு பண்ணி வாங்க வேண்டிய கேக் product items (cake மாவு, அதுக்கான மிக்ஸிங் items)

நீங்க இப்போ 30₹ க்கு வாங்க போறிங்க 30₹ செலவு பண்ண முடியாத ஆளுங்களுக்கு 10₹ சேம்பிள் பேக் அதாவது ஒரு பிஸ்கெட் மட்டும் கிடைக்கும். இப்போ உங்க வீட்ல அந்த கேக் எல்லாரும் சாப்பிட்டிருப்பிங்க. உங்க வீட்டுக்காரம்மா என்ன சொல்லும் ஏங்க கேக்கு நல்லா இருக்கே நம்ம வீட்ல நாமளே செய்யலாம்னு

F3A891F4-B2BB-4B11-A21B-16463108EC9A.jpeg
அப்பவும் நாம தப்பிக்க ஓவன் இல்லைன்னு சொல்லுவோம். இதையும் அவன் எப்படி யோசிக்கிறான் பாருங்க ‌ இட்லி குண்டால கேக் ரெடி பண்ண சொல்றான். இப்போ இதோட விலை 100₹. இப்போ 30₹ல இருந்து 100₹ வந்துட்டோம். அடுத்து இந்த இட்லி கேக் ரெடி பண்ண தைரியத்தில நம்ம வீட்டு அம்மணி அடுத்த தடவை அந்த

7F01C2EA-C62D-4B98-BAEA-342AB5C9DCAE.jpeg

சூப்பர் மார்க்கெட்ல முதல்ல பார்த்த கேக் மாவா இப்ப பார்த்தா என்ன நடக்கும்னு அவங்க அவங்க கெஸ்ல விட்டுட்டுறேன். ஆக நீங்க நமக்கு எதுக்கு இது எல்லாம்னு நினைச்ச ஒரு Productஅ உங்கள வாங்க வைக்க நடக்குற சைக்கிளுக்கு ஆகுற டைம் வெரும் 1 மாசம் தான்.


சரி இப்போ முதல் ஆப்சன் உங்க கிட்ட ஏற்கனவே இருக்கிற பொருள திரும்ப வாங்க வைக்கிறது. அது இதைவிட சுலபாமான வழி. எப்படின்னா ஒரு சின்ன அப்டேட் போதும். இதுக்கு example க்கு பாபநாசம் கமல கூப்பிடலாம். அதாவது அவர்கிட்ட ஏற்கனவே ஒரு கார் இருக்கும். அந்த மலை காட்டுக்குள்ள போக சொல்ல போனா


B4C09A18-AC1B-40E6-A47E-5BDDCDF7F3FC.jpeg

அந்த ஜீப் தான் நல்லா இருக்கும். ஆனா அவங்க புள்ளைங்க என்ன சொல்லும் அப்பா அப்பா எனக்கு Swift car வேணும்னு கேட்கும். அவர் வேண்டாம்னு சொன்னா. அடுத்து என்ன நடக்கும்னு நல்லா தெரியும். இருந்தாலும் ஒரு சின்ன முயற்சி பண்ணுவாரு. என்ன ஆகும் அந்த அம்மா கோபமா படுத்துக்கும் திரும்ப


C74505B5-C5EB-4E9E-B5A5-58589E67F840.jpeg

ஓத்துக்கிட்டு தான் போகனும். இதுல எங்க Advertisement நடக்குதுன்னு கேக்குறிங்களா. அந்த கார் பத்தி டிவியில வர Advertisement. அடுத்தது அந்த மாடல் கார ஹீரோஸ் படத்தில யூஸ் பண்ண வைக்கிறது. மங்காத்தா படத்தில அஜித் Swift யூஸ் பண்ணுவாரு அதுல கிளைமேக்ஸ் டர்னிங்ல ஒரு drift அடிப்பாரு.
60AE8FD0-466E-4B26-B43C-F1566F81FE02.jpeg

இது எல்லாமே இவங்க கொடுக்குற Advertisement தான். உங்களுக்கு இன்னும் தெளிவா சொல்லனும்னா அவங்க தனியா இதுக்கு sponsor பண்ணுவாங்க. நீங்க ஜே ஜே னு ஒரு மாதவன் படம் இருக்கு பாத்திருக்கிங்களா. அதுல Mr.Bean coffee powderக்கு Advertisement பண்ணுவாங்க. அதுக்காக கிட்டத்தட்ட 4 தடவை

3BE4DF93-FB5A-4880-A01F-EB5E3C0EAAB8.jpeg

ஒரே காபி சாப் திரும்ப திரும்ப காட்டுவான். அந்த காபி பவுடர் நேம உங்க மூளையில ஏத்திடுவான். வீட்ல ஒருத்தர் வேணாம்னாலும் இன்னொருத்தர் வேணும்னு கேட்ப்பாங்க. இந்த ஒவ்வொரு Advertisement methodக்கும் ஒரு நேம் இருக்கு. இப்போ இதுல அவங்களுக்கு இருக்கிற அடுத்த பிரச்சினை
D4BE1B49-52A5-4693-B582-83DE620AE569.jpeg

அந்த பொருள் வாங்குற அளவுக்கு உங்க கிட்ட காசு இருக்கனும்.இல்லாட்டி அதுக்கு என்ன பண்ணுவாங்கன்னு அடுத்த பார்ட்ல சொல்றேன்.எனக்கு தெரிஞ்சத சொல்லிருக்கேன். ஏதாவது தப்புன்னா சொல்லுங்க கத்துக்கிறேன்.
🙏
 
Top