• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

அப்பா

Agnii

Beta squad member
Beta Squad
பிஞ்சு விரலின் தீண்டல்களில்
அகிலம் யாவும் என்னில் கண்டேன்!

மலர் பாதம் என் நெற்றி மோதியே
ஆண் அகங்காரம் நீங்க கண்டேன்!

வர்ண களஞ்சியம் உன்னை ஏந்தவே
விழுந்தேனோ மண்ணில் நானும்!

வயிற்றில் சுமக்காத குறை துடைக்கவே
தோள்கள் சுமக்கும் நாளும்!

தத்தி தவழும் மானுட மேகமானாய்
தாவும் என் மார்பில் கடவுள் வடிவமானாய்!

இமைகள் சிமிட்டி இதழ்கள் விரித்து
'அப்பா' என்ற வேளையில்
புதிதாய் என்னை உயிர்ப்பித்த
தாயுமானாய் !!
 
Last edited:
பிஞ்சு விரலின் தீண்டல்களில்
அகிலம் யாவும் என்னில் கண்டேன்!

மலர் பாதம் என் நெற்றி மோதியே
ஆண் அகங்காரம் நீங்க கண்டேன்!

வர்ண களஞ்சியம் உன்னை ஏந்தவே
விழுந்தேனோ மண்ணில் நானும்!

வயிற்றில் சுமக்காத குறை துடைக்கவே
தோள்கள் சுமக்கும் நாளும்!

தத்தி தவழும் மானுட மேகமானாய்
தாவும் என் மார்பில் கடவுள் வடிவமானாய்!

இமைகள் சிமிட்டி இதழ்கள் விரித்து
'அப்பா' என்ற வேளையில்
புதிதாய் என்னை உயிர்ப்பித்த
தாயுமானாய் !!
Wow 🥰❤ cute @Agnii 👌👌👌 keep it up!!
 
அன்றாடம் அறிபவன்..
அத்தனையும் தந்தவன்..
அன்பை அறியாமல் வாழ்ந்தவன்..
அப்பா என்று
அன்றே எழுதி வைத்தான் இறைவன்
அப்பா என்ற சொல்லை விவரிக்க சொற்கள் பத்தாது... 😇😇😇
 
Back
Top