What's new

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
*தமிழ் புத்தாண்டு கவிதை*

*சித்திரை* சிகரத்தில்
வைகறையாம் *வைகாசி*
*ஆனி* ஆதியாய்
ஆற்றல்கள் *ஆடி* வர
ஆயத்தமாகு *ஆவணி* யில்
புரட்சிகள் புசித்திடு *புரட்டாசி* யில்
ஐயமின்றி *ஐயப்பசி* யில்
காலூன்று *கார்த்திகை* யில்
மாற்றங்கள் நிகழட்டும் *மார்கழி* யில்
*தை* தழைத்து வர
மாசில்லா மனதோடு *மாசி* யில்
மானுடனாய் பகிர்ந்திடு *பங்குனி* யில்
இப்பன்னிரண்டு திங்களும்
மாட்சிகள் வசமாகட்டும்..
🙏🙏🙏
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,230
Points
133
மாதஙகளின் தமிழ் பெயர்கள் பெரிதும் அறியப்பட்டிருக்கவில்லை தமிழர்கள் மத்தியில். வானத்தில் விண்மீன்களின் கூட்டத்தை வைத்து 27 நட்சத்திரங்களாகவும் 12 வீடுகளாகவும் பிரித்ததில் அதிகாலையில் கீழ்வானில் உதிக்கும் வீடுகளின் பெயர்களே மாதஙகளின் பெயராவது எத்தனை பேர்கள் அறிந்தார்கள் எனத் தெரியவில்லை. மாதங்களின் / இராசி / வீடுகளின் தமிழ்ப் பெயர்கள்

மேழம்
விடை
இரட்டை
கடகம்
மடங்கல்
நாரி
துலை
நளி
சிலை
சுறவம்
குடம்
கயல்
என்பதுவாம். இச்சொற்கள் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை தனித்தமிழில் தமிழார்வம் மிக்கவரும் இந்த சொற்களை பரவலாக பயன்படுத்தினால் தமிழ்ச்சொல் பயன்பாடு பரவும். இதனை பார்ப்பவர்கள் முடிந்த அளவு புழஙக விடுங்கள். நன்றி.
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மாதஙகளின் தமிழ் பெயர்கள் பெரிதும் அறியப்பட்டிருக்கவில்லை தமிழர்கள் மத்தியில். வானத்தில் விண்மீன்களின் கூட்டத்தை வைத்து 27 நட்சத்திரங்களாகவும் 12 வீடுகளாகவும் பிரித்ததில் அதிகாலையில் கீழ்வானில் உதிக்கும் வீடுகளின் பெயர்களே மாதஙகளின் பெயராவது எத்தனை பேர்கள் அறிந்தார்கள் எனத் தெரியவில்லை. மாதங்களின் / இராசி / வீடுகளின் தமிழ்ப் பெயர்கள்

மேழம்
விடை
இரட்டை
கடகம்
மடஙகல்
நாரி
துலை
நளி
சிலை
சுறவம்
குடம்
கயல்
என்பதுவாம். இச்சொற்கள் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை தனித்தமிழில் தமிழார்வம் மிக்கவரும் இந்த சொற்களை பரவலாக பயன்படுத்தினால் தமிழ்ச்சொல் பயன்பாடு பரவும். இதனை பார்ப்பவர்கள் முடிந்த அளவு புழஙக விடுங்கள். நன்றி.
Hmmm 🥰🥰👌👌 புழங்க விற்றுலாம் 😊
 
Top