M
Mathangi
Guest
எண்ணிலடங்கா அழகு
யாவருக்கும் ரசிக்க போதாத
அழகு இயற்கையே....
தினம் தினம் ஒவ்வொரு பொழுதும்
ஒவ்வொரு விதமாய் உன் அழகு
மாலை நேரம், தேகம் தீண்டும் தென்றலே
அசைந்தாடும் பச்சை தாவரமே
அழகான ஸ்பரிசமே,
உந்தன் அழகின் நடுவில்
தென்படும் நீல நிற வானமே,
பல வித ஓவிய படைப்பின் மேக கூட்டமே,
மறையும் தருணத்தில் அழகின் அதிசயமாய்
விளங்கும் செந்நிற சூரியனே,
உன் அழகின் வியப்பில் மெய் மறந்து
வேறெங்கும் எனது விழி பாராமல்
ஸ்தம்பித்து கிடக்கிறேன்.....
சாலையோரம் உன் அழகின் வர்ணிப்பில்
அல்லாடும் ஒரு பேதையாய்.....
யாவருக்கும் ரசிக்க போதாத
அழகு இயற்கையே....
தினம் தினம் ஒவ்வொரு பொழுதும்
ஒவ்வொரு விதமாய் உன் அழகு
மாலை நேரம், தேகம் தீண்டும் தென்றலே
அசைந்தாடும் பச்சை தாவரமே
அழகான ஸ்பரிசமே,
உந்தன் அழகின் நடுவில்
தென்படும் நீல நிற வானமே,
பல வித ஓவிய படைப்பின் மேக கூட்டமே,
மறையும் தருணத்தில் அழகின் அதிசயமாய்
விளங்கும் செந்நிற சூரியனே,
உன் அழகின் வியப்பில் மெய் மறந்து
வேறெங்கும் எனது விழி பாராமல்
ஸ்தம்பித்து கிடக்கிறேன்.....
சாலையோரம் உன் அழகின் வர்ணிப்பில்
அல்லாடும் ஒரு பேதையாய்.....