• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

ஓர் அற்புதமான பகிர்வு!!❤🥰

நண்பர்களுடன் கோயிலுக்குச் சென்றேன்.

தரிசனம் முடிந்து, ஓய்வாக
நானும் நண்பர்களும்
பிரகாரத்தில் அமர்ந்தோம்.

எங்கள் அருகில் காவி வேட்டி
அணிந்த சாது ஒருவரும்
அமர்ந்து இருந்தார்.

கருவறை கடவுள் எங்கே?
என்று நண்பரிடம் கேட்டேன்.

கருவறையில்தான் "
என்றார் நண்பர்.

கள்ளமில்லா உள்ளத்தில்
என்றார் இன்னொரு நண்பர்.

கேட்டு கொண்டிருந்த
சாது மெல்ல சிரித்தார்.

எங்கும் நீக்கமற
எல்லாமுமாக இருந்து
எல்லாவற்றையும்
ஆட்டுவிக்கும் அவரை
யார் அறிவார்? என்றார்.

அவர் பதில் வித்தியாசமாகவும்
ஞானத்தின் சாரலாகவும் இருந்தது.

பின் எதற்கு ஒரு கருவறை?
என்று கேட்டார் நண்பர்.

தெளிவு வரும் வரை
தாயின் பாதுகாப்பில்.
வளர்ந்தவுடன் உனக்கு
நீயே பாதுகாப்பு.
எங்கேயும் தேடாதே
உன் அருகிலேயே
உனக்குள்ளேயே இருந்து
உன்னை ஆட்டுவிக்கிறான்.
புரியும் வரை கருவறை
புரிந்த பின் நீயே கருவறை!!❤🥰
 
Back
Top