What's new

கயல்

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
முதல் நாள் பிறை


பிறை ஒன்று உருவானதே..
பிழை ஏதும் அறியாததே..
நான் அழுத அழுகை எல்லாம்,
நால்வருக்கும் சிரிப்பானதே..
தன்னை தாங்கிக்கொள்ள
தாயே கைவிரித்தாயே..
பெண் பிள்ளை என்று ,
சாபம் என நினைத்தாயோ..?
பெருமையின் வரம் என சொல்லி
பாவம் என்று பகைத்தாயோ?
ஆழ்கடலும் அழகானதே..
ஆழ் மனதின் கனவும் அழுகை ஆனதே..
நான் கொடுத்த வலியோ பத்து மாதம் கணக்கோ?..
உன் எண்ணங்களின் வலியோ,
எண்ணிக்கையில் அடங்காததோ?

கனவுகளோடு பிறந்த மகளுக்கு,
கயல் என்ற என் பெயர் மட்டுமே அழகு,
கண்டாங்கி சேலை எல்லாம்,
உன் கண்ணீரில் குளமாகுதோ.
கண் விழித்து பார்த்தேன்..
கனவுகள் பலகோடி,
கண் மூடி அயர்ந்தால்,
கடப்பேன் பல தேடல் தேடி..

பணத்தால் தவிப்பாளோ ?
இல்லை
பாதுகாத்து கொள்ள பறந்திடுவாளோ?
ஏன் இந்த அச்சமோ?
பெண் என்றாலே சூட்சமோ?.

தண்ணீரில் வாழும் மீன்கள்
தவிப்பை நினைப்பது இல்லை,
தவித்தாலும் கூட
தண்ணீரின் தன்மை மாறுவதில்லை..
மீனாக பாரத்தால்
மீளாமல் நீந்துவேன்.
தண்ணீராக பார்த்தால்,
தன்னிலை மாறாமல் இருப்பேன்..
எண்ணத்தில் உள்ளது வண்ணங்கள்,
எண்ணிக்கையில் உள்ளது ஏமாற்றங்கள்..
எதை எடுத்து செல்வது?
எழுதும் தீர்ப்புக்கு இலக்கணம் எதற்கு?

என் தேடல் அழகானது.
எதை தேடும் இயல்பானது..
உன்னை போல் நானும்
உலகத்தில் ஒருநாள் தாய் ஆவேனே..
அதுவரையில் நானும்

உன்னுள்ளே வாழ்வேனே..

1578035071-3151.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
குழந்தை நட்சத்திரம்

திக்கி சேர்க்கும் அவள் தமிழும் அழகு,
தித்திக்கும் அவள் பேச்சும் அழகு,
திமிரும் பார்வை ஓரழுகு,
திகட்டாத சிரிப்பு பேரழகு

பட்டு பாவாடை பவள நிலா அழகு,
பட்டாம்பூச்சி போல் பறப்பதும் அழகு,
பஞ்சவர்ண கிளி இங்கு வந்து
பஞ்சு மிட்டாய் திண்பதும் அழகு..

எத்தனையோ கோபமும் அழகு,
எங்கள் வீட்டு இளவரசி அதிகாரமும் அழகு,
எழில் கொஞ்சும் அவளின் பேச்சில்,
எந்தன் தாய்மொழியும் தவிப்பது அழகு..

கயல் விழியில் கருமை அழகு,
கவி பேசும் அவள் கன்னக்குழி அழகு
கங்கை நதியா? காவிரியின் மகளா?
கடந்து செல்லும் அவள் நடையழகு.

குடம் தூக்கும் குறும்புகளும் அழகு,
குழந்தை தன குடைச்சலும் அழகு..
நட்சத்திரமும் நடந்திடுமா?
எங்கள் வீட்டில் பாருங்கள்.
எழுந்து நின்று வாழ்த்துங்கள்.


4717a8009b596a1d4ea692cac91a219b.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
கலவரத்தில் ஒரு திருவிழா


கடலில் மூழ்கும் முத்துக்கு என்றும்
கடலில் ஆழம் தெரியாதே..
கடந்து வந்த நிகழ்வின் வலியும் ,
கண்ணீர் துளிகள் அறியாதே..
துடிக்கும் கருவில் நான் பிறந்தவளே.
துரத்தும் துன்பம் அறிந்தவளே..

எட்டு வயதில் எதை நான் பார்த்தேன்.
எட்டுத்திக்கும் சுற்றும் குழந்தையாய் நான்..
எதிர்த்து வரும் எதிர் காற்றுக்கும்,
எதிர்மறை இன்றி வழி விட்டவள் நான்..

ஊர்க்கூடும் ஒருநாள் திருவிழா..
ஊரார் முன்னிலையில் வசந்த விழா..
மனதோ இன்பத்தில் மூழ்கியதே..
மனங்களை பார்க்க இதயம் ஏங்கியதே..

ஜன்னல் ஓர பேருந்தின் பயணம்,
என்னுடன் நிலாவும் பயணித்ததே..
எத்தனை மரங்கள் கடந்தது என்று
எண்ணிக்கையில் என் விரல்கள் எழுதியதே..

அன்பாய் ஒரு குரல் அழைத்தது எதற்கு?
அருகில் அமர அணைத்தது அதற்கு,
அகராதி அறியாத குழந்தை என்று,
ஆடைகளில் அசம்பாவிதம் நடந்ததுவோ?

அறியா பிள்ளைக்கு அது என்ன தெரியும்.?.
அழுதால் அதுவே பயம் என நடுங்கும்..
தெரியாதது எதுவும் அறிந்திடும் வயதா?
தெளிந்தால் அது ஒரு கண ரக வலியா?

யாரை அழைப்பது?
எதை நான் சொல்லவது.?
கடவுளுக்கும் கண்கள் இல்லை
என நினைத்திடும் மனது..

விபத்தில் பேருந்து சிக்கியதுமே,
விபரீதத்தில் இருந்து தப்பிய பொழுது?
உயிர் பிழைத்தேன் என்று நினைப்பதா?
இல்லை
தவறிழைத்தவன் தப்பியது சரியா?

சென்ற நாட்கள் சென்றது என்று,
செல்லபிள்ளை அறியாததா?..
செல்லாக்காசை வாழ்ந்திடும் மனிதா,
செவிடாய் சென்றாய் ,
செல்லப்பிள்ளை குரல் உனக்கு கேட்கவில்லையா?
blog-how-adults-can-support-the-prevention-of-child-abuse.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
கண்ணாடி பொம்மை

ஓ காற்றே ஓ காற்றே
உன்னுடன் அழைத்து செல்வாயோ?
உன்னை போல் சுற்றிட வேண்டும்.
உன்னுள் நானும் சுவாசிக்க வேண்டும்..

ஓ அலையே, கடல் அலையே..
உன்னுடன் நீந்த அழைத்து செல்வாயோ?
விழுந்தாலும் மீண்டும் எழ வேண்டும்.
வித்தைகள் கற்று தருவாயோ?

எந்த ஆசையும் ஒருநாள் நிராசை ஆகும்.
அந்த பேராசை வேண்டாம் என்று
எனக்குள் வாழ்வேனே...

எட்டுத்திசையும் சேர்த்தாலும்,
ஒன்றோடு ஒட்டாமல் வாழும்..
செல்லும் திசையில் சென்று நானும்
செழிப்புடன் இருப்பேனே..

யாருக்கு கவலைகள் இல்லை..
யார் தந்தார் என்ற கவலையும் இல்லை..
வழிகாட்டி வாழ்க்கையில் நானும்
வழிப்போக்கனாய் வலம் வருவேனே..

வாசலில் வரைந்திடும் கோலம்,
வான்மழை பொழிந்தால் அழிந்தே போகும்..
கோலத்தின் கோலத்தையும் ரசிப்பேன்.
கோபங்கள் இல்லை என்று
மழையையும் ரசிப்பேனே..

திட்டம் போட்டு வாழ்ந்திடவில்லை‌..
வட்டமிட்டு அடைப்பது தொல்லை..
சிட்டுக்குருவிகளிடம் சிறகுகள் வாங்கி,
சிட்டாய் பறந்து மகிழ்வேனே..

தாமரை இதழ் மேல் தூரல்கள் விழுந்தால்,
தவித்து இதழ்கள் மூடுவதில்லை,
நீரின் அடியில் சிக்கும் வேர்களால்,
சிக்கி தன் அழகை குறைப்பதும் இல்லை..
அது போலவே ..
என்றும் அது போலவே..
நானும் வாழ்வேன் அது போலவே..

நிமிடத்தின் நினைவுகள் கடந்தாலும்,
நிற்காமல் சுற்றும் கடிகாரம் போல,
நிற்காமலே,
சுற்றுவேன் நினைக்காமலே..
நானும்
இயல்பாகவே ..
இசைப்பேன் ..
என் வாழ்க்கையை இயல்பாகவே
..
HD-wallpaper-tamil-style-baby-girl-in-yellow-dress-yellow-dress.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
சிப்பிக்குள் முத்து

முட்டை ஓட்டுக்குள் அடைப்பட்ட குஞ்சு ஒன்று,
முட்டை அடைகாக்கும் கோழி ஆனதம்மா..
கூடு கட்டி வாழ்ந்த குருவி ஒன்று,
இன்று கூட்டுக்குள் அடைப்பட்டதம்மா..

பூக்கள் எல்லாம் வந்து வாழ்த்தி சென்றதே..
பூப்படைந்த பூ வெட்கி நிக்குததே..
தென்னங்கீற்றிலே வீடு கட்டி,
தேவதையை அங்கே குடி அமர்த்தி.‌‌
தாய்மாமன் வந்தான் தாம்பூலம் ஏந்தி,
தாழம்பூவோ தாய்மையில் நீந்தி..

சின்ன சின்னதாய் ,
சிங்கரமாய் ,
சிவந்த முகத்தில்
சின்னச்சிறு பருக்கள் எட்டி நின்று பாரக்குதம்மா.

கன்னக்குழியில்
சந்தனங்கள் பட்டு,
சந்தங்களாய் வாழ்த்துதம்மா..

மஞ்சள் வெயில் மாலையிலே
மஞ்ச நீராய் மழை பொழிந்தம்மா..
மல்லிகை பூவும் மாலையாய் மாறி,
மங்களம் பாடுதம்மா..

ஆடைகள் எல்லாம் ஆணையால் கட்டணும்மா?
அதிகாரம் எல்லாம் அங்கே அடங்கி போகணுமா?..

தூக்கி கொஞ்சிடும் தந்தை இங்கு,
துணைக்கு வருவது இதனாலே..
தூரத்து சொந்தம் ஒன்று வந்தாலும்,
துரத்தும் தடைகள் எதனாலே?


குழந்தையின் கொஞ்சல்,
குழந்தையின் கெஞ்சல்,
குமரியாய் வந்தால் மாறிடுமா?

அன்னையின் கண்ணீல் ஆனந்த பேரலை..
அத்தனை ஆனந்தம்மா..
அள்ளிக் கொடுத்தது எத்தனை கைகள்,

அதுவே முதல் நாள் சிறையம்மா..

Mehndi.jpeg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
திசைகள் தேடி

உறக்கம் வர மறுக்க,
உத்திர நிலா கண் முழிக்க,
என்ன ஆனதோ?
என்ன ஆகுமோ?
எத்தனை கேள்விகள் வருமோ?
என என் இதயத்துடிப்பு எகிறவே!!

பதட்டத்தில் பரீட்சை முடிவுகள்..
பத்தாம் வகுப்பு முடிவுகள் அச்சிட...
ஓடும் நீரில் ஒரு துளி நீராய்
நானும் ஓடினேன்..

என்னை சுற்றி எத்தனையோ பரபரப்புகள்.
எண்ணை தேடும் என் கண் விழிகள்..
காத்திருக்கும் தந்தை வெளியே..
கால்கள் நடுங்க கயல் உள்ளே..

மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்..
மதிப்பெண் குறைந்தால் என் வாழ்க்கையும் ஒரு கேள்வியே?

சிந்தனைகள் சிதறி உடைந்து,
சிவந்த கண்களில்
சிறு பிள்ளையின் சிரிப்பு..

ஆம் ..

எண்ணை பாரத்தேன்.
எகிறி குதித்தேன்..
ஓடாத ஓடம் ஓவியத்தில் அழகு போல..
கவலையில் காத்திருந்த தந்தையை கட்டி அணைத்தேன்..

கண்கள் குளமாக,
கதிரவனை ரசிக்கும் குழந்தை போல..
காத்திருந்த பலன் கைகூடவே,
மீண்டும் கட்டி அணைத்தேன் ஆவலுடன்..

அந்த நொடிகள் அழகாகவே..
அன்புள்ள அப்பாவே..
முதல் இடத்தில்
முத்திரை பதித்துவிட்டேன் என கூற..
முத்தத்தில் முகம் மலர்ந்தது..

மகிழ்ச்சியில் மனம் சொல்லும் வார்த்தைகளும் அழகு..
மனங்களின் சந்தோஷ தவிப்புகளும் அழகு.‌

செல்ல ராணிக்கு இன்று செங்கோல் ஆட்சி..

செல்ல மகள் மகிழ்வுக்கு தென்றலும் சாட்சி..
maharashtra-board-result-2023-live-msbshse-12th-results-news-latest-updates-25-may-2023.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
உடைந்த கனவுகள்


சிதறிக்கிடக்கும் சிறுத்துளி நீரை எடுத்து,
நீரோடை ஆக்கவே எனக்குள் ஆசை,
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து,
சில நொடிகளில் ஏனோ தரை இறங்கிடும் வாழ்க்கை..
சிரமங்கள் இன்றி
சிலுவைகள் சுமக்கிறேன் ..
சில சமயங்களில் பூ வைத்து புதைக்கிறேன்..
கனவலையா?
இல்லை
கல்லரையா?

மகத்துவம் அது மருத்துவம்,
என் எண்ணத்தில் உதித்தது உதிர்ந்த பூக்களா?
எத்தனை கேள்விகள்?
எத்தனை கேளிக்கைகள்?

பட்டம் வாங்கி அதை பறக்க வைக்க,
படித்த படிப்பை மறக்க வைக்க,
கனவுகள் எல்லாம் கலங்கி நிற்க,
கண்ணாடி பொம்மையை உடைத்தால் கண்ணீர் விடுமா?
இல்லை ,
கலங்கரை விளக்கத்தை
கடப்பாரையால் இடித்தால் வழி காட்டிடுமா?

பெண் பிள்ளை என்று
பெற்றோருக்கு கடமை உண்டு,

பெற்ற கடமையை ஊரார் உரைப்பதுண்டு..
கடமை எல்லாம் கண்ணீர் வாழ்க்கையா?,

கடன் பட்டு முடித்திட நினைப்பது நெறியா?
காலம் உண்டு ,
காத்திருத்தல் தவறியில்லை என்ற நிலை வருமா?

குழந்தையாய் நான் பிறந்தாலும்,
குழந்தையாய் வாழும் மனதிற்கு துணை ஏது?
குற்றங்கள் சொல்லும் சூழலுக்கு,
குறைகள் அங்கு குடியிருக்கு..

என்னை சுற்றிய நிலவுகள் எல்லாம்,
என்னை பிரிந்து மறந்தது ஏன்?
என்னுள் வாழும் உறவுகள் எல்லாம்,
எதையோ தேடி பறந்தது ஏன்?

கனவுகள் எல்லாம் கானல் நீராய்,
கதறி இங்கு தவிப்பது ஏன்?
கல்லால் செதுக்கிய சிலைதான் அழகு என்று,
கல்லடி வலிகள் சிலை அறியாதது ஏன்?

ஆசைகனவாய் கட்டிய வீட்டுனுள் செல்ல,
ஆலமரத்தடியில் கூடுக்கட்டி காத்திருந்தேன்.
ஆனால் அது வெறும் கனவுதான் என்று ,
ஆசையை தீ வைத்து கொளுத்திவிட்டேன்.

கனவுகள் எல்லாம் சாம்பாலாய் மாற,
கல்லூரி வாழ்க்கையை தொடங்கிவிட்டேன்.
காண்பது எல்லாம் ஆசைதான் என்று ,
காலம் முழுக்க கற்றுக்கொண்டேன்.

வாழ்க்கை கொடுத்த தொகுப்புகள் யாவும்,
வலிகளா? இல்லை வலிமைகளா?
இரண்டையும் எடுத்து செல்வேன்..

இரண்டிற்கும் இடையே இனிமைகள் நிரம்பிட..

இனிதாய் என் கல்லூரியை கடந்திடுவேன்..
8-22-12-28-3-54-3m.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
சிறுதுளி பெரும் கண்ணீர்

கடந்த வாழ்க்கையில் கணம் இல்லை,
கடந்தேன் இனிதென கருத்தும் இல்லை..
கல்லூரி தோழிகள் காகிதம் போல் கிடைத்தால்,
கவிதைகள் எழுதவும் தயக்கமில்லை...

இதுவும் சுகம் என சுதந்திரமாக சுழன்றேன்.
இன்பத்தில் ஒருபோதும் குறைவில்லை..
இந்த தேடலும் எதுவரை போகும்?
இதுவரை நானும் தேடவில்லை....
இப்படியே இருந்திட மனம் இங்கு ஏங்கும்.
இதற்கும் எல்லை உண்டு மறுக்கவில்லை..

கவலைகள் எல்லாம் கலைந்திட்ட பிறகும்,
காதல் என்றுமே பூக்கவில்லை..
கல்லறையில் பூத்த பூவிற்கும்,
காதலை சொல்லவும் வழியுமில்லை..

இத்தகைய வாழ்வில் இனிதென வந்தது..
இமைக்கும் நொடியில் மாற்றமில்லை..
இதுவரை சென்றது, புது வரவு வந்தது
உறவுகளுக்கு உள்ளே பிணைப்புமில்லை..

குறை சொல்லும் உறவுக்கு குற்றமில்லை..
குறுகி நான் நிற்பேன் யாருக்கும் தெரியவில்லை..
குயில் பாடும் பாட்டுக்கு இலக்கணமில்லை.

குயில் இங்கு ஊமையானது தெரிவதில்லை..

தலை ஆட்டும் பொம்மையும் கதறும் இங்கே..

தாய்ப்பால் கொடுத்திட தாயும் இல்லை..
தடுமாறும் மனதிற்கு தட்டிக் கொடுக்க,
தகப்பனும் இங்கு தலையிடவில்லை..

தூர்வானம் மேகம் அது பொழிவதில்லை.
தூரினால் கண்ணீர் கலப்பேனா தெரியவில்லை
துரத்தும் துயரங்கள் குறைவதில்லை,
தூரத்து உறவுகளும் உண்மையில்லை..

மகளின் அதிகாரம் மண்ணோடு போனது..
மாற்று கருத்துக்கு மகிழ்ச்சி இல்லை..
மன்றங்கள் வைத்து மனங்களை இணைத்திட நினைத்தால்,
மகுடி வாசித்தும் பூக்கள் பூப்பதில்லை‌‌..

அண்ணன் அவன் பேசவில்லை,
அண்ணி சொல்ல அவனும் மறுப்பதில்லை..
அத்தனை இருந்தும் அனாதையாய் நிற்பது,
அதைவிட வலி ஏதும் பெரிதில்லை..

கண்கள் அது கலங்கிட,
கைக்குட்டை நனைந்திட,
கட்டிலில் கிடப்பேன் கவலையில்லை..

எண்ணங்கள் அதை எழுதிட ,
எழுத்துக்களில் அழுதிட,
எழுதுகோல் மை அதுவும் தீரவில்லை..

இருப்பது யாருக்கும் பிடிக்கவில்லை,
இறப்பதற்கும் இங்கு வழியும் இல்லை ,
இதுதான் வாழ்க்கை என்று ஒவ்வொரு பக்கமும்,
புத்தகத்திற்கு ஆறுதல் தருவதில்லை..

என்னுடைய பூங்கா அது பூக்கிறதே...
என்னுடன் சேர்ந்து அது அழுகிறதே..
உதிர்ந்திடும் பூக்களை ஒவ்வொன்றாய் எடுத்து,
உயிரினை கொடுத்தால் பூக்க மறுக்கின்றதே..

இதுவும் கடக்கும்,
இல்லறமும் சிறக்கும்,

இப்படி பொய் சொல்லி ஏற்றால் தவறில்லை..

3fe9257e4b0dd4d23d8c637ec24241a3.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
திட்டமிட்ட ஒரு திடல்


கொழுந்து விட்ட கதிர்களை ,
அறுவடை முன் அறுப்பது யார் தவறு?
கொஞ்சும் இந்த குழந்தையின் கனவை,
கொளுத்தியது இங்கு யார் தவறு?
தேய்பிறையாய் தேய்கிறேன்.
வளர்பிறையாய் வாழ்க்கை வளருமா?
தனியாய் இங்கு தவிக்கிறேன்..
தவிடாய் போனால் நிலைக்குமா?
கல்வியில் விழுந்தது ஒரு கல்வெட்டு,
கட்டி வைத்து பார்த்தார்கள் புது பட்டு.
அழுது புலம்ப அழுகையும் சொந்தமில்லை..
அத்தனை சொந்தம் இருந்தும் பயனில்லை..
இருளிலிலே எறியும் மெழுகுவர்த்தி,
வெளிச்சம் தர உயிர் மாய்த்தது யார் தவறு?
இரவிற்கு உதவியா?
இல்லை
இதுதான் அது வாழ்க்கையா?
வேண்டும் என்று நினைப்பது எல்லாம்,
வேடிக்கையாய் பார்ப்பது யார் தவறு?
வேண்டாம் என்று ஒதுங்கும் வாழ்க்கைக்கு,
வேண்டி வேண்டி தவம் இருப்பது என்ன பயன்?
படிப்பின் படுச்சுட்டி,
இன்று
பட்டுப்புடவையில் பகடுகாயாய்..
என்னிடமும் கேட்கவும் ஆளும் இல்லை..
எடுத்துச்சொல்ல ஊமையாய் ஒரு பிள்ளை..
கண்ணை கட்டி கத்தியில் நிற்கவைத்து,
கண்ணை காட்டி குத்தியது யார் தவறு?
பெண் என்றால் கடமையா?
பெண் கருவிற்கும் கனவில்லையா?
கண்ட கனவிற் கொள்ளியும் வைத்துவிட்டு,
கலங்காமல் இரு என்று சொல்லி என்ன பயன்?
விருப்பமில்லா விதியை தத்தெடுத்து,
விதி என்று வாழ்ந்து என்ன பலன்?
என் இதயம் நொறுங்கிடவே,
என் வீட்டில் இன்னிசை வாசிப்பதா?
ஏற்றுக்கொண்டு விலகிய எனக்கு,
ஏற்றிவைத்த தீபம் அணைத்தது யார் தவறு?
எதிரப்பார்ப்புகள் எரிந்த பின்னர்,
எதிர் அலையில் நீச்சல் அடித்து என்ன பயன்?
புது உறவு அது ஏற்குமா?

புது கனவுகள் மீண்டும் பிறக்குமா?

8B053E3C-8CCB-421E-B055-D8359F0821BB.jpeg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
கண் விழித்த காணாங்குருவி

இறக்கைகள் வெட்டி பறக்கிறேன்..
இல்லற வாழ்வில் வருகிறேன்...
தேனீ ஒன்று கட்டிய கூட்டில் ,
தேவதை போல நுழைகிறேன்..

எதிர்பார்ப்பில் எகிறினேன்.
ஏமாற்றங்கள் எல்லாம் கடக்கிறேன்..
எந்தன் வாழ்வில் புதுவித உலகம்,
எப்படி அடைவேன் துடிக்கிறேன்..

துடுப்பு போட்டு செல்கிறேன்..
துணையை நம்பி இருக்கிறேன்...
துவண்டு நானும் போனாலும்,
துடைப்பான் என்று கருதினேன்..

கனவுகள் மீள முயல்கிறேன்..
மீண்டும் கனவுகள் காண்கிறேன்..
கரையில் துடிக்கும் மீன்தான் ஒன்று,
கடலில் கலக்க துடிக்கிறேன்..

சீதனம் எல்லாம் பார்க்கிறேன்..
சிரிப்பில் பொய்யை கலக்கிறேன்..
சின்ன சின்ன ஆசைகள் எல்லாம்
சில சமயங்களில் மறக்கிறேன்..

புத்தம் புதிய வாழ்க்கையில்,
புத்தகம் தேடி படிக்கிறேன்..
புதிய உறவுகள் புள்ளிகள் வைத்து,
புத்தி சொல்ல வியக்கிறேன்..

விலகிய வாழ்க்கையை விரும்பினேன்..
விடியல் வருமென வியக்கிறேன்..
வில்லில் மாட்டிய அம்பு ஒன்றினை,
விருப்பத்தில் விலக்கிவிட விரும்பினேன்..

புதிய அத்தியாயம் எழுதினேன்..
புது புது அர்த்தங்கள் சேர்க்கிறேன்..
பூஜையில் வைத்த பூவிற்கு இங்கு,
தண்ணீர் ஊற்ற தவிக்கிறேன்..

இடம் பெயர்ந்த வாழ்க்கையில்,
இன்னல்கள் இன்றி இருக்கிறேன்..
இடையில் எந்த இடையூறு வந்தாலும்,

இந்த நிமிடம் போதும் என சிரிக்கிறேன்..

girl-7878741.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
தேள் கூட்டில் வாழும் தென்றல்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று ,
கூட்டை விட்டு துரத்தப்பட்ட ஒரு குருவி,
குடிசை கூட கோபுரம்தான் என்று,
கூடு மாறிய அந்த குருவி..
குரலுக்கும் மதிப்புமில்லை..
குறைகள் ஏற்று வாழ்ந்த முல்லை..

மாதம் ஒன்று நகரவே..
மாற்றம் ஒன்று நிகழவில்லை என்று..
மாமியாரின் மனக்கணக்குக்கு,
மாற்று பதிலும் ஏதுமில்லை...

செல்லும் இடம் எல்லாம் தடைகள் என்ன?
செல்லராணி செல்லாக்காசு ஆனதென்ன?
செய்து வந்த சத்தியம் எல்லாம்,
செல்லரிச்சு போனதென்ன?

கட்டும் முன் ஒரு பேச்சு,
கட்டி வந்ததும் மறு பேச்சு..
வார்த்தைகளில் போலித்தனம்,
வாய்க்கு வந்ததெல்லாம் பொய்யின் குணம்,

மாதம் எல்லாம் கணக்குப் போட்டு,
மாதவிடாய் நின்றதினால்,
மாதுளம் பிஞ்சு ஒன்று மலர்ந்திடவே
மாங்காய் சாப்பிட நேரம் வந்திடவே.

மகிழ்ச்சியில் மனம் அழுதிடவே,
மனக்குழப்பம் நீங்க ஏங்கிடவே,
எண்ணிக்கையில் எத்தனை இளவரசிகள்,
என்னைப்போல் வாழ்ந்தார்களோ?

கற்பை பற்றி கவலையில்லை,
கற்பனையில் தேவை ஆண் பிள்ளை..
தேவைக்கு மட்டும் பெண் என்றால்,
பெற்றுக்கொடுக்க ஏன் எந்த ஆணும் இல்லை?..

தேவதை வருவாளா?
தேவன் என்று பிறப்பானா?
தேடிக்கொள்ள தோணவில்லை..
தேடல் முடிவுகளில் பிறப்பது ஒரு பிள்ளை மட்டுமே..

கண்ணாடி வளையல் இட்டு..
கவிதை போல சீரும் இட்டு,
வளைக்காப்பு நடந்திடவே..
வலையில் மீண்டும் மீன் மாட்டியதே..

அலங்காரம் பண்ணிவிட்டு,
அதில் குறையாய் தங்க ஆபரணம் இல்லை என்று,
அடம் பிடித்து ஆட்டம் போட்டதுமே,
அப்பனிடம் அதிகாரம் சென்றதுவே..

உத்தமனும் உள்ளே வந்ததும்..
உடன் இருப்பான் என்று எண்ணி,
உள்ளுக்குள்ளே ஒரு எண்ணம் வந்ததுவே..
எண்ணத்தில் தீ பற்றி எரிந்ததுவே..

இரத்தத்திலும் பிரிவுகள் உண்டு,
இரத்த பந்தத்திலும் பிரிவுகள் உண்டு,
இதுவரை நம்பியதும்,
இலையுதிர் காலத்திலும் பூக்கள் பூக்கும் என்று

எத்தனை முகங்கள்?
அதில்
எத்தனை நிறங்கள்?
நிமிடம் மாறும் நிறம் எல்லாம்,

நிலையான குறை என்று சொல்லும்..
baby_shower_photoshoot_in_pondicherry_01.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
தெளிந்த நீரோட்டம்
பத்து மாத பனிக்குடத்தில்
பவள நிலா ஒன்று,
பனிச்சறுக்கு விளையாடி,
பதக்கங்கள் வென்றிருந்தாளோ?

என் பக்கத்தில் படுத்து,
பழகிய உறவு என,
பயம் இன்றி உறங்கிடுவாளோ?

அன்னைக்கு அன்னை அவள்,
அன்புள்ள பிள்ளை அவள்..
அத்தனையும் சேர்த்து வைத்த ,
அலங்கார தேர் அவள்..

தாய்மை உணர்த்தியவள்,
தாழம்பூ தமக்கை அவள்,
தான் கொண்ட வலிகளுக்கு,
தாய்மடி கொடுத்த அவள்..

துன்பத்திருக்கு கண்ணீர் காரணம் என நினைத்திருந்தேன்..
இன்பத்திற்கும் கண்ணீர் சொந்தம் என
ஒரு நொடியில் இனிதாய் மாற்றிய மகள்..

அருகில் அவள் இருந்தால்,
அத்தனையும் மறந்திடுமே..
அது போல ஒரு உணர்வு,
அவள் தந்த பொக்கிஷமே..

தேடலுக்கு கிடைத்த பரிசு,
தேவதையின் தரிசனமே..
தேடிய பதில்கள் எல்லாம்,
தேவை இல்லா கேள்விகள் ஆனதுமே,

ஆதரவு இன்றி நான் தவித்தேனே..
ஆருதல் சொல்லிட வந்தாளோ?
ஆனாலும் நான் அழுதாலும்,
ஆரத்தழுவி அணைத்திடுவாளோ?

மகள்தான் என் உலகு..
மகள் மனமும் பேரழகு..
எதையோ சொல்ல வந்து..
எல்லாம் மறந்தேனே..
எனக்கென வந்த அவள்..

என்றும் என் வசந்தம் என்பேனே..

da38572d5a0099ac9d13b2a1164ff05a.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
பாம்பாய் சுற்றும் மகுடி

முதல் நாள் நான் அழுது பிறந்தேன்..
முற்றிலும் சோகத்தில் என் தாய் இருந்தாள்.
இன்று நான் அழுதே ஈன்றேன்
இன்றும் என் தாய் அழுதே நின்றாள்..

காரணம் சொல்ல காரணங்கள் குறைவில்லை..
குறை சொல்லும் உலகுக்கு அது தெரிவதில்லை..
என் மகள் என்ற‌ ஆனந்தம் எனக்கு மட்டுமே..

முதல் குழந்தை பெண் குழந்தை
முகம் கொடுத்து பேச ஆட்களும் இல்லை..
முதல் நாள் பிறந்த மொட்டுக்கு,
பூக்களின் ஆதரவும் இல்லை..

எதை நான் சரி செய்வேன்.
எதை நான் ஏற்று கொள்வேன்..
எண்ணத்தில் மாற்றம் இல்லை..
எதை பற்றியும் கவலையும் இல்லை..

தைமாதம் பூத்த பூவிற்கு,
தைரியம் சொல்ல நான் மட்டும் போதும்..
தடைகள் பல தனித்து வந்தாலும்..
தடையற்ற வாழ்க்கை நான் மட்டும் தருவேன்..

உற்றார் உறவினர் கவலைகள் இல்லை..
உலகம் இழித்தாலும் அது தேவையும் இல்லை..
சாபம் நான் வாங்கி வந்தாலும்,
சாயும் முன் காத்து நிற்பேன்..

மன்னனுக்கு மகள்மேல் அன்பு..
மனைவி மேல் துளியும் இல்லை..
மற்றவரின் பேச்சை கேட்டு,
மகுடி ஆடியும் பலனும் இல்லை..

மஞ்சள் கொடி மட்டுமே மன்னவன் தந்த அடையாளம்,
மற்றவை எல்லாம் மாற்றார் பேச்சில் அடைக்கலம்..

lockdownindia-1585130338.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
எதிர்ப்பில் ஒரு ஈர்ப்பு

மீளா துயரில் நான் இருந்தேன்..
மீண்டும் மீன் ஒன்றை நான் சுமந்தேன்..
துளையில்லா தோட்டாக்கள் எல்லாம்
துளையிட்டு கேள்விகள் கேட்டதுவே..

ஆணாக வேண்டும் ஆசையில்தான்,
ஆற்றில் அடித்துச் செல்லும் இலையாக நான்,
துடுப்பு ஏதும் கையில் இல்லாமலே,
கரையை கடக்கும் படகாக நான்..

என்னை தவிர
என்னைப்பற்றி கவலை பட யார் உண்டு..
வளரும் பிறைக்கும் தெரியாது..
வளர்ந்து வரும் நாட்கள் தொய்வு என்று..

மகிழ்ச்சியில் மற்றவருக்கு பரப்பரப்பு..
மனதில் பொய்யாய் அனுசரிப்பு..
கண்கள் மூடி கண்ணீரில் ..
கவலையில் மீண்டும் ஓர் அலங்கரிப்பு..

விதைகள் சுமக்கும் மரங்களுக்கு,
விதையின் வலி என்று அறியாது..
காய்த்தால் அது தரமான மரம் என்றும்,
பொய்த்தால் அது மலடி மரம் என்றும்..
ஊரார் சொல்வது உவமை ஆகாது..

என்னை விதைத்து ..
என்னுள் விதைத்து,
எத்தனை கேள்விகள் துளைத்து,
எட்டு மாதங்கள் கடந்தும் நான்..

முடிவில் ஒரு முடிவில் நான்..
பெண்பால் என்றால்
போராடாமல் சுதந்திரம் கிடைத்துவிடும்..
ஆண்பால் என்றால் நரகத்தில் நகர்ந்து செல்ல வேண்டும்..

கடைசி மாத கணக்கெடுப்பின்,
கண் மூடி தொலைத்தேன் ஓர் இரவை.‌.
கடைசியில் ஓர் சத்தம் கேட்டதுவே..
காதில் பட்டது ஆண்பால் என்றதுமே‌‌..

மகிழ்ச்சியும் இல்லை,
மகிழ்ந்தாலும் தொல்லை..
பொய் கணக்கில் மீண்டும் ஒரு நரக வாழ்க்கை..
il_fullxfull.1275845287_6oyq_2048x.jpg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
முடிவின்றி முதல்

அடைமழை பெய்திட ஆசை தான்.
அதில் நனைந்திட ஆசைதான்.
பொங்கி எழும் புயலிலும் பூப்பறிக்க ஆசைதான்

தென்றல் தொட்டிட ஆசைதான்..
தென்றல் காற்றில் சுவாசிக்க ஆசைதான்..
தென்றலுக்கும் மடிகொடுத்து
தூங்க வைத்திட ஆசைதான்..

நகங்களை வெட்டி,
நிலவினில் வைத்து,
பிறை என்று சொல்லிட ஆசைதான்..

தோள் கொடுக்க தோழன் வேண்டி ஆசைதான்..
தோல்விகளும் வெற்றி பெறும் என்ற ஆசைதான்..
தேர்தலின்றி போட்டியின்றி ,
ராணியாய் மகுடம் சூட்டிட ஆசைதான்..

வண்ணத்துப்பூச்சி வண்ணத்தில் கலந்திட ஆசைதான்..
வண்ணங்களில் எண்ணங்கள் வரைந்திட ஆசைதான்..
வலையில் சிக்கிய மீன்களுக்கு..
வலியின்றி முதலுதவி செய்திட ஆசைதான்..

என் வானத்தில் நட்சத்திரம் எடுத்து
என் வீட்டின் வாசலில் கோலமிட ஆசைதான்..
என் தோட்டத்தின் பூத்த பூக்கள் எல்லாம்,
எந்தன் தலைமுடி சேர்ந்திட ஆசைதான்..

மீண்டும் குழந்தையாய் மாற‌ ஆசைதான்...
மீளாமல் சென்ற நாட்கள் மாற்ற ஆசைதான்..
தூக்காணங்குருவி கூட்டினிலே,
தூங்கி வழிந்திட ஆசைதான்..

ஆலங்கட்டி மழையில் நனைந்திட ஆசைதான்..
அதை அள்ளி பருகிட ஆசைதான்..
ஆலமர விழுதில் ஊஞ்சல் கட்டி,
ஆடிட என்றும் ஆசைதான்..

ஆத்தோரத்தில் நடந்திட ஆசைதான்..
அதில் பதியும் பாதச்சுவடுகள் பார்த்திட ஆசைதான்..
அச்சமின்றி மிச்ச சிரிப்பை..
சிரித்தி பார்த்திட ஆசைதான்..

அணில் கடித்து அழுகிய பழத்தை,
அதனுடன் பங்குபோட்டு தின்றிட ஆசைதான்..
கிளிகள் பேசும் பேச்சுக்கு,
கொஞ்சி பேசிட ஆசைதான்..
குயில்கள் பாடும் பாடலுக்கு,
குரலும் கொடுக்க ஆசைதான்..

மழலை மொழி குழந்தைகளுடன்,
மழையில் நனைய ஆசைதான்..
மன்றம் வந்த தென்றலுக்கு,
மஞ்சள் பூசி விட ஆசைதான்..

என் வார்த்தைகள் கோர்வையாய் எடுத்து,
என் கவிதைக்கு போர்வையாய் சேர்த்திட ஆசைதான்..
போர்க்காலத்தில் மயிலுக்கு குளிரும் என்றால்..
என் போர்வையில் அணைத்திட ஆசைதான்..

ஆசை எல்லாம் தீரா ஆசைதான்..
அகிலம் எல்லாம் கேட்டிட ஆசைதான்..
அந்தி நிலவில் வீடு கட்டி,
அதிலே குடியேற ஆசைதான்..

எழுதி வைத்த எழுத்து எல்லாம்,
என்னில் விதைந்த ஆசைதான்..
என் மேலே விழுந்த கண்ணீர் எல்லாம்,
எழுந்து துடைக்க கைகள் கிடைக்க ஆசைதான்..

நால்வருக்கும் இடையூறின்றி
நடந்து சென்றிட ஆசைதான்..
நான் பார்த்த நால்வருக்கும்
நன்றிகள் உரைத்திட ஆசைதான்..

எனக்காக காயம் எல்லாம்,
என்னை பிரிந்து செல்ல ஆசைதான்..
என்றென்றும் எனக்கான
துன்பம் எல்லாம் இன்பமாக ஆசைதான்..

படைத்தவனிடம் கேள்வி கேட்டு,
கண்ணீர் விட்டு கதறிட ஆசைதான்...
படைத்தவனுக்கும் கண்ணீர் வந்தால்,
பட்டு கைகளால் துடைத்திட ஆசைதான்..

கடந்தது கடந்து..
நினைவுகள் இனித்து,
நிலையென வாழ்ந்திட ஆசைதான்..

நான் வாழ்ந்த வாழ்வெல்லாம்..
நாளடைவில் மாறும் என்ற ஆசைதான்..
அதுவரையில் அத்தனையும்,

ஒரு கையால் வீசிடும் ஓசைதான்..

walking-in-the-dream-pushpa-sharma.jpg
 
Top