கற்பு நெறியா? அறமா?அறிவா?
இறைவியின் யோனி மூடும் திரையா?
உள்ளத்தின் வலிமைக்கு அழிவுண்டா?
கற்பு சமூகத்தின் முற்றாதிக்கம்
உயி(ய)ர் சக்தி கண்டோரின் நடுநடுக்கம்
மன்றாடாதே நின்று எரித்துவிடு!!!
அதிர்ச்சி கடந்ததும் மறையாதே மறைக்காதே
கபாலம் நொறுங்க காளியாய்
எள்ளும் மடையரை மிதித்துவிடு!!!
அப்பாவியாய் சிரிக்கும் மற்றொரு சிறுசகியும்
அபலையாய் சிதைக்கப்படும் முன்னே
அவன் முகத்திரை கிழித்துவிடு!!!
காக்கும் கரங்கள் தட்டிவிடு
தேற்றும் மொழிகள் உமிழ்ந்துவிடு!!!
இச்சை அரக்கர்களை காயடிக்க கழுவிலேற்றிவிடு
கொண்ட கணவனே ஆயினும்
மறுதலிப்பு மீறி வெறி கொண்டால்
மாற்றான் என்றே உதைத்து விடு
அக்னி குஞ்சை சூறையாட முடியுமா?
அவணி அதிர, ஈன சனம் சிதைய
தீர நெறியுடன் கயவனை சிதையிலிடு
இறைவியின் யோனி மூடும் திரையா?
உள்ளத்தின் வலிமைக்கு அழிவுண்டா?
கற்பு சமூகத்தின் முற்றாதிக்கம்
உயி(ய)ர் சக்தி கண்டோரின் நடுநடுக்கம்
மன்றாடாதே நின்று எரித்துவிடு!!!
அதிர்ச்சி கடந்ததும் மறையாதே மறைக்காதே
கபாலம் நொறுங்க காளியாய்
எள்ளும் மடையரை மிதித்துவிடு!!!
அப்பாவியாய் சிரிக்கும் மற்றொரு சிறுசகியும்
அபலையாய் சிதைக்கப்படும் முன்னே
அவன் முகத்திரை கிழித்துவிடு!!!
காக்கும் கரங்கள் தட்டிவிடு
தேற்றும் மொழிகள் உமிழ்ந்துவிடு!!!
இச்சை அரக்கர்களை காயடிக்க கழுவிலேற்றிவிடு
கொண்ட கணவனே ஆயினும்
மறுதலிப்பு மீறி வெறி கொண்டால்
மாற்றான் என்றே உதைத்து விடு
அக்னி குஞ்சை சூறையாட முடியுமா?
அவணி அதிர, ஈன சனம் சிதைய
தீர நெறியுடன் கயவனை சிதையிலிடு
Attachments
Last edited: