What's new

சித்திரம் பூக்கும் சிறுகதைக் குவியல்

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
சிறுகதை - 1

மோட்சம்

மண்ணை முட்டிப் பிறந்த என் தாயார், ஆறு திங்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும், கடும் குளிரிலும் தவம் புரிந்து, என்னுடன் சேர்த்து ஐந்நூறு உயிர்களுக்கு ஜனனம் அளித்தார். ஜனனம் அளித்த சில நாட்களிலேயே சருகாகிச் சரிந்த தாயாரைப் பிரிய மனமில்லாமல், அவர் உடல் ஒட்டியே இருந்தோம்..!

போர் அடித்தல் என்னும் முறையில், ஒரு போரை நடத்தியதால், உறவின் முறைகள் அனைத்தும் சிதறிச் சின்னாபின்னம் ஆனோம். என் உயிர் காக்கும் கவசம் நீக்கி, வருங்கால சந்ததியினருக்கு விதையாகும் பாக்கியம் இழந்தேன். இனி வரும் நாட்களில் நரகவேதனை நிச்சயம் என்பதனை உணர்ந்தேன்..!

கொதிக்கும் வெந்நீரில் வெந்து நொந்தேன், உலர்த்தி உறைத்து, அரைபடும் இயந்திரத்தில் அவலம் அடைந்தேன். இறுதியாக கோணிப் பையில் அடைத்து நாடும் கடத்தப்பட்டேன். இவ்வளவு இன்னல்களை எதிர் நோக்கியபோதும், இன்னோர் உயிர்க்கு உயிர்சக்தியாகப் போகின்றோம் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது..!

நாடு கடத்தப்பட்ட நான், ஒரு வீட்டை அடைந்தேன், மூச்சடைத்த கோணிப்பையில் இருந்து ஒரு குவளையை அடைந்தேன். நன்னீரில் கிடத்தி, என் கசடுகள் நீக்கப்பட்டன. நீர்குமிழிகள் பொங்கும் பானையில் கிடத்தப்பட்ட போது வேதனை அதிகம் இல்லை, ஜனித்த மறுத்தினமே இவ்வேதனையை அனுபவித்தவன் நான் அல்லவா..!

சிறிது நேரத்தில், கல் போன்ற என் தேகம் பஞ்சு போன்று மென்மையாவதை உணர்தேன். மோட்சத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தேன். மிருதுவான என் தேகம் நன்கு பிசையப் பட்டது, பின்னர் சூடான குழம்பை என் மேல் ஊற்றி மீண்டும் நன்கு பிசையப்பட்டேன். மானுடனின் வாய்வரை சென்ற நான், அவன் வயிற்றை அடையவில்லை..!

சிதறி மீண்டும் மண்ணில் வீழ்ந்தேன். வாழ்நாள் முழுவதும் இன்னல்களை அனுபவித்தும், மோட்சம் கிட்டவில்லையே என்று வருந்தினேன். இறுதியில் நான்கு எறும்புகள் என்னைத் தூக்கிச்சென்று, அவர்கள் கூடும்பத்துடன் பசியாறினர்..! மோட்சம் கிட்டியது..!

குறிப்பு : இறுதி பத்தியில் உள்ளபடி, ஒரு காட்சியை நிறைய முறை, நிறைய இடங்களில் பார்த்துள்ளேன். நாம் சாப்பிடும்போது சிதறிய உணவுகளுக்கு எறும்புகள் வருவது இயற்கைதான் என்றாலும், அந்த சிதறிய உணவுக்கு ஒரு மனதிருந்தால், அது எவ்வளவு வேதனைப்படும் என்று எண்ணியபோது தோன்றிய ஒரு சிறுகதை தான் இது. தெரியாமல் சிதறிய உணவுக்கே இவ்வளவு வேதனை இருந்தால், தெரிந்தே வீணாக்கப்படும் உணவுக்கு?? கலப்படம் செய்யப்படும் உணவுக்கு?? சிந்திப்போம்..!

நன்றிகளுடன்,
அகமகிழன்

நகரம் - அடுத்த சிறுகதையைப் படிக்க
 
Last edited:

Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133

No words...
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
மோட்சம் - முந்தைய சிறுகதையைப் படிக்க

சிறுகதை - 2

நகரம்

பளிச்சிடும் மின்விளக்குகளுடன், விளம்பரப்பலகைகளையும் தாங்கி நிற்கும் மின்கம்பங்கள். சாலை விதிகளை மதிக்காமல், விதியே என வீதியில் சுற்றும் மக்கள். எங்கும் இரைச்சல், ஊழல்களுக்கு இல்லை குறைச்சல். பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத, ஒரு நகரத்தின் மையப்பகுதி அது..!

அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில், உடல் மெலிந்த பசு ஒன்று சாலை ஓர குப்பைகளை மேய்ந்து கொண்டிருந்தது. குனிந்த தலை நிமிராமல் சென்ற பசு, ஒரு குப்பைத் தொட்டியை அடைந்தது. குப்பைத் தொட்டியின் பின்புறத்தில் பசுவிற்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது..!

அங்கே அரை மயக்கத்தில் ஒரு புள்ளி மான்குட்டி தரையில் விழுந்து கிடந்தது. அந்த மானைக் கண்டதும், பரிதாபத்தில் பசு தன் நாவால் வருடியது. சற்றே மயக்கத்தில் இருந்து தெளிந்த மான், பசுவிற்கு நன்றியை உரைத்தது. இவ்வாறாக மானிற்கும், பசுவிற்குமான உரையாடல் துவங்கியது..!

பசு : எப்படி இங்கே வந்தாய் ?? ஏன் இந்த நிலைமை ??
மான் : அருகில் இருந்த பூங்காவில் நான் ஒரு காட்சிப் பொருளாக இருந்தேன். அங்கே எனக்குத் தேவையான உணவு, நீர், உறைவிடம் சரியாக கிடைக்காததால், தப்பி ஓடி வெளியே வந்துவிட்டேன். வெளியே வந்தும், எந்த உணவும் கிடைக்காததால், பசியில் மயங்கியும் விட்டேன். என் துரதிர்ஷ்டம், நான் இந்த நகரத்தில் வாழ தகுதி அற்றவன் ஆகிவிட்டேன்..!

ஒரு வனவிலங்கு தன் வாழ்வியலை முற்றிலும் மறந்து, இந்த நகரம் என்னும் நரகத்தின் பிடியில் சிக்கியிருப்பதை எண்ணி பசு வருந்தியது. இந்தக் காட்சியை கண்ட பசுவின் மனதில், பல எண்ண ஓட்டங்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, பசுக்களை கால்நடை விலங்காக மாற்றிய மனித இனம், இன்று வீதிகளில் அம்போ என அனாதையாக விட்டு, செய்தித்தாள்கள், சுவரொட்டிகள், காகிதங்கள் மற்றும் நெகிழிப் பைகளை உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதையும் எண்ணி கண்ணீர் வடித்தது..!

சற்றும் எதிர்பாரா நேரத்தில், கூட்டமும் குரைச்சலுமாக ஓடிவந்த தெருநாய்க் கூட்டம் பசுவை விரட்டி, மானை முற்றுகை இட்டது..!

குறிப்பு : இக்கதையின் முடிவு சிலர்க்கு மிகைப்படுத்தப்பட்டதாக தெரியலாம். ஆனால், அது உண்மையில் பெருநகரங்களில் வருடந்தோறும் நடந்துகொண்டிருக்கும் சம்பவம் தான். அநேகர்கள் எளிதில் கடந்து செல்லும் ஐந்தாம்பக்க, ஆறாம்பக்க செய்தி இது. கால்நடைகள், செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் எந்த தவறும் இல்லை, ஆனால் அவைகளின் உணர்விற்கும் மதிப்பளிக்கவேண்டும், அவைகளும் நம்மைப் போன்ற உயிர்களே. இந்த நிலை தொடருமானால், இன்றைக்கு கவர்ச்சியான செல்லப்பிராணிகளாக (exotic pets) வளர்க்கப்படும் உயிரினங்கள் (iguana, python, monkey, turtle, hedgehog, etc.,) நாளை வீதிக்கு வந்தால் ?? சிந்திப்போம்..!

நன்றிகளுடன்,
அகமகிழன்

ஐந்து கரிச்சான்கள் (பாகம் - 1) - அடுத்த சிறுகதையைப் படிக்க
 
Python வந்தால் மனித இனத்திற்கு தான் ஆபத்து.
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
நகரம் - முந்தைய சிறுகதையைப் படிக்க

சிறுகதை - 3

ஐந்து கரிச்சான்கள் (பாகம் - 1)

குறிப்பு: இது முற்றிலும் கற்பனைக் கதையே, ஆங்கிலப் படமான Angry Birds-ன் ஈர்ப்பில் எழுதப்பட்டது. :LOL:

"A Village Version of Angry Birds"

கதிரவன் மங்கிக்கொண்டிருக்கையில், மதியவன் மஞ்சள் மேகந்தனில் முகங்காட்டும் மாலைப்பொழுது. காக்கைகள், குயில்கள், குருவிகள் எனப் பட்சி இனங்கள், சில பூச்சி இனங்களைப் புசித்துக்கொண்டிருந்தன. அது ஒரு அடர்ந்த கருவேலங்காடு, சூரியஒளி கொஞ்சம் கொஞ்சமாக மங்கத்தொடங்கியவுடன், முட்புதருக்குள் மறைந்திருந்த கோடிக்கணக்கான கொசுக்கள் துணிந்து வெளியே வரத்தொடங்கின..!

அந்த சமயம் வரை வேட்டையாடிக் கொண்டிருந்த பறவைகள், ஒட்டுமொத்தமாக பல கோடி கொசுக்களைத் திரளாகக் கண்டதும், கொஞ்சம் சுதாரித்து விலகி நின்றன. கோடிக்கணக்கில் கூடிப்பறந்த கொசுப்படையின் ரீங்காரம், பறவைகளை அச்சுறுத்தியது என்றே கூற வேண்டும்..!

இந்த சம்பவங்களை எல்லாம் தொலைவில் இருந்த பனை மரத்தின் உச்சிக் கொம்பில் அமர்ந்தபடி கண்டுகொண்டிருந்த ஐந்து கரிச்சான்கள் (இரட்டை வால் குருவிகள்). அவற்றுள் ஒரு கரிச்சான் கூறியது, நமது இனத்தின் எண்ணிக்கை வேண்டுமெனில் குறைந்திருக்கலாம், ஆனால் எதிரிகளை உதிரியாக்குவதில் நாம் இன்றளவும் குறைந்தவர்கள் இல்லை..!

கொசுக்கள் படையை நோக்கி, மிதவை விமானம் போல காற்றை கிழித்துக்கொண்டு பறந்து சென்றன, பயமரியாத அந்த ஐந்து கரிச்சான் குருவிகள். அணை கட்டுவது போல, ஐந்து கரிச்சான்களும் காற்றினில் வியூகம் அமைத்து வேட்டையாடின..!

நன்கு பசியாறிய பின்னரும், கோபத்தின் உக்கிரத்தில் இருந்த கரிச்சான்கள், கொசுக்களின் இறகொடித்து இரண்டாய்ப்பிளந்து மண்ணில் வீழ்த்தின. ஐந்தே நிமிடத்தில், கோடிக்கணக்கில் பறந்த கொசுக்கூட்டம், ஆயிரமாகக் குறைந்தது. கொசுக்களின் பலம் குறைந்ததும், எஞ்சியிருந்த கொசுக்கள் அனைத்தும் முட்புதருக்குள் பதுங்கத் தொடங்கின..!

கரிச்சான் வேட்டை தொடரும்..!

நன்றிகளுடன்,
அகமகிழன்

ஐந்து கரிச்சான்கள் (பாகம் - 2) - அடுத்த சிறுகதையைப் படிக்க
 
Last edited:

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652

Unga Tamil eludhum thiran, karpanai karuthukkal elarayum thirumbi parka seigiradhu...👏👏👏
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,252

Romba nalla irukku unga stories 👏 👏

Your writing style reminds me of someone. Neenga idhukku munnadi blogs ezhudhirukeengala??
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
Romba Thanksnga..!

Na ithuku munadi blogs ezhuthunathae ilai. Summa thonumpothu paperla ezhuthurathu than habit/hobby, antha paperah oru photo eduthu vachipaen :LOL: missagida kudathula.. Inga forum activeah irukrathala, now paperla ezhuthunathu ellam digital formku mathikitu irukaen :)
Neenga yaroda stylenu nenaikrengalo, avunga naan ilai 🤣. Because, na ezhuthunathae romba kami and atha yarum padichathae ilai 😂
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,252
Points
133
Romba Thanksnga..!

Na ithuku munadi blogs ezhuthunathae ilai. Summa thonumpothu paperla ezhuthurathu than habit/hobby, antha paperah oru photo eduthu vachipaen :LOL: missagida kudathula.. Inga forum activeah irukrathala, now paperla ezhuthunathu ellam digital formku mathikitu irukaen :)
Neenga yaroda stylenu nenaikrengalo, avunga naan ilai 🤣. Because, na ezhuthunathae romba kami and atha yarum padichathae ilai 😂
Haha. Righttu (y)
All the best. Ippadiye pala pala kadhaigal ezhudhi periya ezhuthaalaraaga valara vaazhthukal :D
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
Mikka Mikka Nandrigal..! that means a lot..! Inum niraiya puthagangal padikanum, nirya kathukanumnu aasai.. kathukitathuku aprum konjamathu ezhuthalargal stylela story narrate pana mudiyumnu namburaen 🙏
 
Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
நகரம் - முந்தைய சிறுகதையைப் படிக்க

சிறுகதை - 3

ஐந்து கரிச்சான்கள் (பாகம் - 1)

குறிப்பு: இது முற்றிலும் கற்பனைக் கதையே, ஆங்கிலப் படமான Angry Birds-ன் ஈர்ப்பில் எழுதப்பட்டது. :LOL:

"A Village Version of Angry Birds"

கதிரவன் மங்கிக்கொண்டிருக்கையில், மதியவன் மஞ்சள் மேகந்தனில் முகங்காட்டும் மாலைப்பொழுது. காக்கைகள், குயில்கள், குருவிகள் எனப் பட்சி இனங்கள், சில பூச்சி இனங்களைப் புசித்துக்கொண்டிருந்தன. அது ஒரு அடர்ந்த கருவேலங்காடு, சூரியஒளி கொஞ்சம் கொஞ்சமாக மங்கத்தொடங்கியவுடன், முட்புதருக்குள் மறைந்திருந்த கோடிக்கணக்கான கொசுக்கள் துணிந்து வெளியே வரத்தொடங்கின..!

அந்த சமயம் வரை வேட்டையாடிக் கொண்டிருந்த பறவைகள், ஒட்டுமொத்தமாக பல கோடி கொசுக்களைத் திரளாகக் கண்டதும், கொஞ்சம் சுதாரித்து விலகி நின்றன. கோடிக்கணக்கில் கூடிப்பறந்த கொசுப்படையின் ரீங்காரம், பறவைகளை அச்சுறுத்தியது என்றே கூற வேண்டும்..!

இந்த சம்பவங்களை எல்லாம் தொலைவில் இருந்த பனை மரத்தின் உச்சிக் கொம்பில் அமர்ந்தபடி கண்டுகொண்டிருந்த ஐந்து கரிச்சான்கள் (இரட்டை வால் குருவிகள்). அவற்றுள் ஒரு கரிச்சான் கூறியது, நமது இனத்தின் எண்ணிக்கை வேண்டுமெனில் குறைந்திருக்கலாம், ஆனால் எதிரிகளை உதிரியாக்குவதில் நாம் இன்றளவும் குறைந்தவர்கள் இல்லை..!

கொசுக்கள் படையை நோக்கி, மிதவை விமானம் போல காற்றை கிழித்துக்கொண்டு பறந்து சென்றன, பயமரியாத அந்த ஐந்து கரிச்சான் குருவிகள். அணை கட்டுவது போல, ஐந்து கரிச்சான்களும் காற்றினில் வியூகம் அமைத்து வேட்டையாடின..!

நன்கு பசியாறிய பின்னரும், கோபத்தின் உக்கிரத்தில் இருந்த கரிச்சான்கள், கொசுக்களின் இறகொடித்து இரண்டாய்ப்பிளந்து மண்ணில் வீழ்த்தின. ஐந்தே நிமிடத்தில், கோடிக்கணக்கில் பறந்த கொசுக்கூட்டம், ஆயிரமாகக் குறைந்தது. கொசுக்களின் பலம் குறைந்ததும், எஞ்சியிருந்த கொசுக்கள் அனைத்தும் முட்புதருக்குள் பதுங்கத் தொடங்கின..!

கரிச்சான் வேட்டை தொடரும்..!

நன்றிகளுடன்,
அகமகிழன்
Looking forward to read more stories 😍✌️💐
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
மோட்சம் - முந்தைய சிறுகதையைப் படிக்க

சிறுகதை - 2

நகரம்

பளிச்சிடும் மின்விளக்குகளுடன், விளம்பரப்பலகைகளையும் தாங்கி நிற்கும் மின்கம்பங்கள். சாலை விதிகளை மதிக்காமல், விதியே என வீதியில் சுற்றும் மக்கள். எங்கும் இரைச்சல், ஊழல்களுக்கு இல்லை குறைச்சல். பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத, ஒரு நகரத்தின் மையப்பகுதி அது..!

அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில், உடல் மெலிந்த பசு ஒன்று சாலை ஓர குப்பைகளை மேய்ந்து கொண்டிருந்தது. குனிந்த தலை நிமிராமல் சென்ற பசு, ஒரு குப்பைத் தொட்டியை அடைந்தது. குப்பைத் தொட்டியின் பின்புறத்தில் பசுவிற்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது..!

அங்கே அரை மயக்கத்தில் ஒரு புள்ளி மான்குட்டி தரையில் விழுந்து கிடந்தது. அந்த மானைக் கண்டதும், பரிதாபத்தில் பசு தன் நாவால் வருடியது. சற்றே மயக்கத்தில் இருந்து தெளிந்த மான், பசுவிற்கு நன்றியை உரைத்தது. இவ்வாறாக மானிற்கும், பசுவிற்குமான உரையாடல் துவங்கியது..!

பசு : எப்படி இங்கே வந்தாய் ?? ஏன் இந்த நிலைமை ??
மான் : அருகில் இருந்த பூங்காவில் நான் ஒரு காட்சிப் பொருளாக இருந்தேன். அங்கே எனக்குத் தேவையான உணவு, நீர், உறைவிடம் சரியாக கிடைக்காததால், தப்பி ஓடி வெளியே வந்துவிட்டேன். வெளியே வந்தும், எந்த உணவும் கிடைக்காததால், பசியில் மயங்கியும் விட்டேன். என் துரதிர்ஷ்டம், நான் இந்த நகரத்தில் வாழ தகுதி அற்றவன் ஆகிவிட்டேன்..!

ஒரு வனவிலங்கு தன் வாழ்வியலை முற்றிலும் மறந்து, இந்த நகரம் என்னும் நரகத்தின் பிடியில் சிக்கியிருப்பதை எண்ணி பசு வருந்தியது. இந்தக் காட்சியை கண்ட பசுவின் மனதில், பல எண்ண ஓட்டங்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, பசுக்களை கால்நடை விலங்காக மாற்றிய மனித இனம், இன்று வீதிகளில் அம்போ என அனாதையாக விட்டு, செய்தித்தாள்கள், சுவரொட்டிகள், காகிதங்கள் மற்றும் நெகிழிப் பைகளை உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதையும் எண்ணி கண்ணீர் வடித்தது..!

சற்றும் எதிர்பாரா நேரத்தில், கூட்டமும் குரைச்சலுமாக ஓடிவந்த தெருநாய்க் கூட்டம் பசுவை விரட்டி, மானை முற்றுகை இட்டது..!

குறிப்பு : இக்கதையின் முடிவு சிலர்க்கு மிகைப்படுத்தப்பட்டதாக தெரியலாம். ஆனால், அது உண்மையில் பெருநகரங்களில் வருடந்தோறும் நடந்துகொண்டிருக்கும் சம்பவம் தான். அநேகர்கள் எளிதில் கடந்து செல்லும் ஐந்தாம்பக்க, ஆறாம்பக்க செய்தி இது. கால்நடைகள், செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் எந்த தவறும் இல்லை, ஆனால் அவைகளின் உணர்விற்கும் மதிப்பளிக்கவேண்டும், அவைகளும் நம்மைப் போன்ற உயிர்களே. இந்த நிலை தொடருமானால், இன்றைக்கு கவர்ச்சியான செல்லப்பிராணிகளாக (exotic pets) வளர்க்கப்படும் உயிரினங்கள் (iguana, python, monkey, turtle, hedgehog, etc.,) நாளை வீதிக்கு வந்தால் ?? சிந்திப்போம்..!

நன்றிகளுடன்,
அகமகிழன்

ஐந்து கரிச்சான்கள் (பாகம் - 1) - அடுத்த சிறுகதையைப் படிக்க
Looking forward to read more stories 😍✌️💐
Thank You 🙏💐 will try to write continuously..
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
ஐந்து கரிச்சான்கள் (பாகம் - 1) - முந்தைய சிறுகதையைப் படிக்க

சிறுகதை - 3

ஐந்து கரிச்சான்கள் (பாகம் - 2)

குறிப்பு: இது முற்றிலும் கற்பனைக் கதையே, ஆங்கிலப் படமான Angry Birds-ன் ஈர்ப்பில் எழுதப்பட்டது. :LOL:

கரிச்சான்களின் ஆக்ரோஷ தாக்குதலில் கொசுக்களின் படை துவம்சம் ஆனது. எஞ்சி இருந்த ஒரு சில கொசுக்களும் உயிருக்கு அஞ்சி முட்புதருக்குள் உட்புகுந்தன. முட்புதரின் உள்ளே, சிறியது முதல் பெரியது வரை என இலட்சக்கணக்கான வண்டினங்கள் ஏற்கனவே தஞ்சம் புகுந்து இருந்தன..!

அந்த வண்டுகளின் தலைவன், உள்ளே வந்த கொசுக்களைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்புடன் கூறியது, இவ்வளவு படை பலம் இருந்தும், கேவலம் ஐந்து கரிச்சான்ங்களை கடந்து கூட செல்ல முடியவில்லை. முட்டாள்தனமாக மோதி மண்ணில் வீழ்ந்ததுதான் மிச்சம் என்று எள்ளி நகையாடியது. கொசுக்களுக்கு அவமானமாக இருந்தாலும், அந்த வண்டு கூறியதே உண்மை என்று உணர்ந்தன..!

கரிச்சான்கள் ஐந்தும் முட்புதரை வட்டமிட்டபடியே எஞ்சி இருந்த கொசுக்களை எதிர்நோக்கி காத்திருந்தன. ஆனால் கொசுக்கள் வெளியே வரவே இல்லை. உடனே கரிச்சான்கள் ஒன்றிற்கொன்று கண்களால் சில தகவல்களைப் பரிமாறிக்கொண்டன..!

திடீரென இரண்டு கரிச்சான்கள் மின்னல் வேகத்தில் வான் உயரப் பறந்தன. நல்ல உயரம் அடைந்ததும், பூமராங் போல, சென்ற பாதையிலேயே பூமியை நோக்கி முழுவேகத்துடன் முட்புதருக்குள் கூச்சலுடன் உட்புகுந்தன. அடுத்த நொடியே, அத்தனை பூச்சிகளும் புதரை விட்டு மிரண்டு வெளியே பறந்தன..!

வெளியே பொறி வைத்து காத்திருந்தது போல், மூன்று கரிச்சான்களும் மீண்டும் தங்கள் வேட்டையை தொடங்கின. சுற்றி இருந்த மரங்களில் அமர்ந்திருந்த பறவைகள், கரிச்சான்களின் பராக்கிரமத்தை வாயைப் பிளந்தபடி பார்த்து இரசித்தன..!

கரிச்சான் வேட்டை தொடரும்..!

நன்றிகளுடன்,
அகமகிழன்

ஐந்து கரிச்சான்கள் (பாகம் - 3) - அடுத்த சிறுகதையைப் படிக்க
 
Last edited:

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
ஐந்து கரிச்சான்கள் (பாகம் - 2) - முந்தைய சிறுகதையைப் படிக்க

சிறுகதை - 3

ஐந்து கரிச்சான்கள் (பாகம் - 3)

முட்புதருக்குள் உட்புகுந்த இரண்டு கரிச்சான்கள், அத்தனை பூச்சிகளையும் வெளியே கொண்டுவந்தன. காத்திருந்த மூன்று கரிச்சான்களும் வட்ட வடிவில் வியூகம் அமைத்து வேட்டையைத் துவங்கின. அப்பொழுது வண்டினத்தின் தலைவன், முட்டாள் கரிச்சானே, நாங்கள் கொடிய விஷப்பூச்சிகள், எங்களை நீ உட்கொண்டால் உயிரை விடுவாய் என்று மிரட்டும் தொனியில் எச்சரித்தது..!

என் எதிரில் நின்று எச்சரிக்கும் அதிகாரம் பெற்றுவிட்டாயா?? என்று தன் அலகைச் சுற்றிய அரும்பு மீசைகள் விடைக்க அந்த வண்டை நோக்கி விரைந்தது கரிச்சான். அதே சமயத்தில், புதருக்குள் இருந்து இரண்டு காச்சான்களும் முட்கள் தொய்த்த உடலுடன் வான் நோக்கி மேலெழுந்தன..!

இறக்கையை அடித்து சுழன்றதில், விஜயன் வில் விடுத்து புரப்பட்ட கனைகளைப் போல, முட்கள் அனைத்தும் வண்டுகளை குறிவைத்து துளைத்தன, அதில் அந்த தலைமை வண்டும் மடிந்தது. இவ்வாறாக பூச்சிப் படையை நாசமாக்கிய சில வினாடிகளிலேயே எங்கிருந்தோ பறந்து வந்த பருந்து ஒன்று ஒரு கரிச்சானைக் கவ்விச் சென்றது..!

சற்றும் தாமதிக்காமல், ஏனைய நான்கு கரிச்சான்களும் கூக்குரலுடன் பருந்தை துரத்தி கொத்தித் தீர்த்தன. காலினில் அகப்பட்டிருந்த கரிச்சானை விடுவித்து, பருந்தை விரட்டியடித்தன..!

கண்ணுக்குத் தெரிந்த எதிரி எளியவனோ வலியவனோ, பயமறியாது நெஞ்சில் உறுதியுடன் எதிர் நோக்கும் நமது இனம் எண்ணிக்கையில் குறைந்ததற்குக் காரணம், கண்ணிற்கு புலப்படாத கதிர் இயக்கமே என தொலைவில் இருந்த கதிர் இயக்க கோபுரத்தைக் கண்டன..!

குறிப்பு: இன்றைய மனித வாழ்வில் புறக்கணிக்க முடியாத சில விஷயங்களில் ஒன்றாக செல்லிடப்பேசியும், இணையதளமும் மாறிவிட்டன. இருந்தாலும், இயற்கைக்கு புறம்பாக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், உடனுக்கு உடனாக இயற்கையின் பதில் மாற்று வடிவில் வந்து கொண்டேதான் இருக்கின்றது. இந்த விளைவை நாம் பெரிதாக உணராமல் இருப்பது போன்று தோன்றினாலும், இதுவே எதார்த்தம் என்று நடக்கும் அனைத்தையும் இயல்பாக்கி வாழ்ந்து வருகின்றோம். இன்றைக்கு, கரிச்சான் போன்ற பல பறவை மற்றும் விலங்கு இனங்கள் குறைந்திருக்கலாம், விரைவில் அது மனிதனுக்கும் நிகழலாம் அல்லவா?? சிந்திப்போம்..!

நன்றிகளுடன்,
அகமகிழன்

ஆலத்தின் ஆழம் - அடுத்த சிறுகதையைப் படிக்க
 
Last edited:
Top