What's new

சோழர் பெருமை

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
844
Points
133
ஏறு பூட்டு மண் கிளறி
ஏற்றம் வைத்து நீர் இறைத்து
நாற்று நட்டு பயிர் வளர்த்து
நாட்டுக்கெல்லாம் நெல் அனுப்பும்

நம் தஞ்சை மண்ணை தலைமையிடமாக கொண்டு உலகின் பல பகுதிகளை ஆட்சி செய்து இன்றும் பலர் பிரமிப்பாக பேச கூடிய கட்டிடக்கலை அரசியலமைப்பு,ஆட்சி முறை என எல்லாவற்றிலும் மிக சிறப்பாக விளங்கி ஆட்சி செய்த சோழர் பெருமைகளை இந்த பகுதியில் தினமும் பதிவு செய்து சோழர் வரலாறை இந்த பகுதியில் தொகுத்து வழங்க விரும்புகிறேன்.

படிக்கும் உங்களின் ஆர்வம் மற்றும் அறிவை வளர்க்கும் பொருட்டு சுவாரசியமாக இந்த பகுதியை வழங்க வேண்டும் என என் விருப்பத்தை பதிவு செய்கிறேன்.

எத்தனை மக்கள் அறிய ஆசை படுகிறீர்கள் என்பதை பொறுத்தே இதை தொடரலாமா என முடிவு செய்ய உள்ளேன்.

எனவே விருப்பம் உள்ளவர்கள் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . அதிகம் பேர் விரும்பினால் சோழர் வரலாறை ஒரு தொடராக இங்கே பதிவிடுவேன்.
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746

எனவே விருப்பம் உள்ளவர்கள் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . அதிகம் பேர் விரும்பினால் சோழர் வரலாறை ஒரு தொடராக இங்கே பதிவிடுவன்.
Come on...
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஏறு பூட்டு மண் கிளறி
ஏற்றம் வைத்து நீர் இறைத்து
நாற்று நட்டு பயிர் வளர்த்து
நாட்டுக்கெல்லாம் நெல் அனுப்பும்

நம் தஞ்சை மண்ணை தலைமையிடமாக கொண்டு உலகின் பல பகுதிகளை ஆட்சி செய்து இன்றும் பலர் பிரமிப்பாக பேச கூடிய கட்டிடக்கலை அரசியலமைப்பு,ஆட்சி முறை என எல்லாவற்றிலும் மிக சிறப்பாக விளங்கி ஆட்சி செய்த சோழர் பெருமைகளை இந்த பகுதியில் தினமும் பதிவு செய்து சோழர் வரலாறை இந்த பகுதியில் தொகுத்து வழங்க விரும்புகிறேன்.

படிக்கும் உங்களின் ஆர்வம் மற்றும் அறிவை வளர்க்கும் பொருட்டு சுவாரசியமாக இந்த பகுதியை வழங்க வேண்டும் என என் விருப்பத்தை பதிவு செய்கிறேன்.

எத்தனை மக்கள் அறிய ஆசை படுகிறீர்கள் என்பதை பொறுத்தே இதை தொடரலாமா என முடிவு செய்ய உள்ளேன்.

எனவே விருப்பம் உள்ளவர்கள் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . அதிகம் பேர் விரும்பினால் சோழர் வரலாறை ஒரு தொடராக இங்கே பதிவிடுவேன்.
😍😍😍👌 @ThePopeye nice.... 🙏🙏🙏

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
844
Points
133
இந்த பகுதியில் வாரம் இருமுறை பல பிரிவுகளாக சோழர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள ஏதுவாக தொகுத்து வழங்குவோம்.
இதில் ஏதேனும் பிழை இருந்தாலோ மேலும் உங்களுக்கு தெரிந்த தகவல்கள் ஏதும் இருந்தாலோ இங்கே தாராளமாக பதிவிடலாம்.

பகுதி 1 சோழர்கள் யார்.?

images (38).jpeg

"சோறுடைத்து நாடு சோழ நாடு" என்னும் சொல்லுக்கொப்ப தமிழகத்தின் நெல்களஞ்சியம் தஞ்சையை மையமாக கொண்டு பொது ஊழி (கி.பி) 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழர்கள் தங்கள் ஆட்சியை அமைத்திருந்தார்கள் என பல சங்க கால இலக்கியங்களின் வாயிலாக நாம் அறியலாம். மேலும் வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றின் படி அதற்கு முன்னர் எவ்வளவு காலங்கள் அவர்கள் இருந்தனர் எப்போது தோன்றினர் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

சோறுடைத்து நாடு பின்னாளில் மறுவி சோற நாடு மற்றும் சோழ நாடு என்று மறுவியதாக ஆய்வாளர்களின் கூற்றுக்கள் நமக்கு அறிவிக்கின்றன.

வேறு சிலரோ நெல் என்னும் தனியத்தின் வேறு பெயர் சொல் என்றும்
அது லகரம் ழகரமாக மறுவி சோழ நாடு என பெயர் வந்ததாக தெரிவிக்கின்றனர்.
அந்த சோழ நாட்டை ஆட்சி செய்து அதன் பரப்பை உலக அளவில் விரிவுபடுத்தி தங்களின் மொழியான தமிழை உலகரியச்செய்து இன்றும் தமிழரின் பெருமை பேசப்படும் இடங்கள் எல்லாம் பேச பட கூடியவர்களாக திகழும் இனம் சோழர் இனம்.

கல்வி ஞானம் செல்வம் வீரம் என அத்துணை துறையிலும் சிறந்த கட்டிடக்கலைக்கு சான்றாக பல கட்டுமானங்களை உலகிற்கு தந்த பெரும் பேருக்கு சொந்தக்காரர்..

காவேரிக்கரையின் பல பகுதிகளை உள்ளடக்கி அங்கிருந்து போர் புரிந்து உலகின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்தி பல மன்னர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வீரமிகு மக்கள் திறன் மிகுந்த அரசர்கள் கொண்டிருந்த இனம்.
 
Top