What's new

தாழம்பூ

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
தாழம் பூவில் ஆண் தாழை பெண் தாழை என்று வேறுபாடு உள்ளது... இது உங்களில் எவ்வளவு பேருக்கு தெரியும்?🤔🤔 ( சில நாட்களுக்கு முன்பு தான் நான் தெரிந்து கொண்டேன்)

மயில், சேவல் போன்ற பறவைகளில் ஆண் வசீகர தோற்றமுடையது அல்லவா? அதே போல் தாழம் பூவிலும் ஆண் தாழை தான் வசீகர தோற்றமுடையது. 😃😉

இடி, மின்னலில்லாத காலங்களில் மலராதென்றும், தாழை மலர்வதற்கு இடி, மின்னல் தேவையென்றும் சொல்வார்கள்.🤔🤔🤔 ( ஏன் இப்படி சொல்கிறார்கள் ?)

அது என் தாழம்பூ மலர இடி மின்னல் தேவை??

தாவரங்கள் வளர நைட்ரஜன் (Nitrogen) இன்றியமையாதது. நைட்ரஜன் குறைவாகக் கிடைக்கும் நீர் நிலைகளின் அருகிலேயே தாழை மரங்கள் வளர்வதால், நைட்ரஜன் குறைபாட்டால் அவற்றின் வளர்ச்சிக்குத் தடையேற்படுகிறது. ஆனால் இடி, மின்னல் காலங்களில் காற்றிலுள்ள நைட்ரஜன் மூலக்கூறுகளை (Nitrogen Molecules) மின்னலின் கடும் வெப்பம் உடைக்க, உடைக்கப்பட்ட நைட்ரஜன் அணுக்கள் (Nitrogen Atoms) காற்றிலுள்ள ஆக்ஸிஜன்/பிராணவாயு வுடன் (Oxygen) சேர்ந்து Nitrates ஆகி, மழையோடு சேர்ந்து மண்ணில் கலக்கிறது. இது Atmospheric Nitrogen Fixation எனப்படுகிறது. மண்ணில் நைட்ரஜன் கூடினால், அங்கு வளரும் தாவரங்களில் அதிகளவு இலை வளர்ச்சியேற்படும் (Growth of foliage). இதனால் மின்னல் காலங்களில் தாழை இலைகள் நன்றாக வளர்ச்சியடைந்து, கிளைகளின் நுனியில் பூக்கள் போன்று தோற்றமளிக்கு வெளிர் இலைகளைக் கொள்கின்றன.

தாழம் பூவையும், மின்னலையும் இணைத்துப் பல சினிமா பாடல்கள் வந்துள்ளன:

அதில் நம் அனைவருமக்கும் மிக தெரிந்த பாடல்....

"மின் ஒளியில் மலர்வன தாழம் பூக்கள், கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்" (வெல்லிமலரே பாடல் - வைரமுத்து)

வேறு சில பாடல்களின் வரிகள்

"மேகத்துக்குள் மின்னல் போல நின்றாயே, மின்னல் தேடும் தாழம் பூவாய் நானும் வந்தேனே" (கவிஞர் முத்துலிங்கம்)

"மின்னலை தேடும் தாழம் பூவே, உன் எழில் மின்னல் நானே" (கவிஞர் முத்துலிங்கம்)

"மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌"(கவிஞர் விவேகா)

"சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே, உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே" (கவிஞர் சுரதா)

😲😲 இவளோ பாட்டு இருக்கா!!!

PCIMG_2022-03-21_09-03-53.JPG
PCIMG_2022-03-21_09-02-37.JPG

படிதமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼😊
 
M

Mathangi

Guest
Ithaan thazham poo ah naan innaikuthaan parkkuren. Kelvi patruken but paarththu kidaiyaathu. அருமையான பதிவு sis 😍😍😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Ithaan thazham poo ah naan innaikuthaan parkkuren. Kelvi patruken but paarththu kidaiyaathu. அருமையான பதிவு sis 😍😍😍
Dei என் இனிய அன்பியே @Mathangi 😒😒 தாழம்பூ பார்த்தது இல்லையா 😒😒ohh god 😒 சத்திய சோதனை 😒😒btw, @Aadhini உன்னோட தாழம்பூ பதிவிற்காக inda paatu umaku சமர்ப்பணம் 😍🥰
 
Top