What's new

மலர் - சிறுக(வி)தை

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
குறிப்பு: இது ஒரு சிறுக(வி)தை வடிவம் பெற்ற கற்பனைத் தொகுப்பு, இதில் இடம் பெற்ற ஒவ்வொரு பத்தியும், கதை மற்றும் கவிதை நடையில் நகரும். கதையாக விரிவது என்னுடைய (அகமகிழன்) நடை, கவிதையாக மலர்வது கதாநாயகியின் (மலர்) நடை. வாருங்கள் தோழி மலரைச் சந்திப்போம்..! வாசக நண்பர்களுக்கு என்றென்றும் நன்றிகளுடன் அகமகிழன்..!

இதழ் - 1

மலர், 25 வயது நிரம்பிய பெண், மதி மலரும் மாலை வேளையில், தன் வேலைகளை முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து மின்சார ரயிலில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். ஜன்னல் ஓரம் அயர்ந்து அமர்ந்திருந்த மலர், தடதடவென ஓடிய ரயிலின் அலாதியான இசையில் கடகடவென தன் கடந்த காலத்தை அசைபோடத் தொடங்கினாள்.

ஆதரவற்றுப் பிறந்த மலர், இரண்டு வயது வரை ஆதரவற்றோர் காப்பகத்தில் ஆதரவின்றி வளர்ந்தாள்.

அனாதைகளின் இல்லமாம்..
அன்னை தந்தை இல்லையாம்..
பெண்ணாய் பிறந்ததைச் சொல்லியே..
இன்னல் என்றும் எண்ணியே..
என்னை தூக்கி எறிந்தராம்..!

சரியான பராமரிப்பு இல்லாத அனாதை இல்லத்தில், அந்த பச்சிளங் குழந்தைக்கு பசிப் மட்டுமே பரிசாய் கிடைத்தது.

மண்ணை அள்ளி உண்டேனாம்..
கல்லைக் கூட கடித்தேனாம்..
பசி என்ற பிணியிலே,
அழுகக் கூட தெம்பின்றி,
புலுவைப் போல சுருண்டேனாம்..!

அனாதை இல்லத்தில் ஆதரவற்று வளர்ந்து வந்த மலரை, ஒரு இளம்பெண் தத்தெடுக்க முடிவு செய்கின்றார். இளம் வயதில் விதவையான அப்பெண், தன் வாழ்க்கையின் ஒரே நம்பிக்கையாக மலரைக் கண்டார்.

மழலை மலர்கள் நடுவிலே..
மலரென்ற பெயரிலே..
மலரைப் போன்ற சிரிப்பிலே..
மலராக மலர்ந்த என்னை..
மனதார ஏற்ற அன்னை..!

மலரைத் தத்தெடுத்த அன்னை,அவளைத் தன் மகளாகவே வளர்த்தார், எந்த ஒரு கண்டிப்பும் கட்டுப்பாடும் இன்றி. மழலைச் சொல் பேச ஆரம்பித்த மலர், குறும்புச் சுட்டியாக மலர்கின்றாள்.

குதூகலமாய் குறும்புத்தனம்..
குட்டிக் குட்டிக் கள்ளத்தனம்..
கலகலவென சிரிப்பு தினம்..
கட்டி உருண்டு சண்டையிடும்..
அடாவடி ஆண்மை குணம்..!

- மலரும்..!

- அகமகிழன்

அடுத்த பாகத்தை படிக்க (இதழ் - 2)
 
Last edited:

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113

Wow romba nala iruku. Looking forward to read next part. Keep writing 💐😍👌
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
முந்தைய பாகத்தை படிக்க (இதழ் - 1)

இதழ் - 2

முன்கதைச் சுருக்கம் : ஆதரவற்று வாடியிருந்த மலரை, விதவைப் பெண் ஒருவர் தத்தெடுத்துவளர்க்கின்றார். மலரின் வாழ்க்கை மகிழ்ச்சியாக மலர்கிறது..!

குறும்புத்தனமும், கொஞ்சும் குணமும் கொட்டிக் கிடந்த மலரின் மனதில், என்றும் நீங்கா நினைவுகளாய், பள்ளிப் பருவத்தில் அவள் ரசித்த பல தருணங்கள் பொதிந்து கிடந்தன. மலர், அரசுப் பள்ளியில், தன் படிப்பைத் தொடங்கினாள்.

கடல் பொங்கும் கரையில்
பாதம் பதித்த முதல் நாள்..!
மெதுவாய் பறக்கும் மேகம்
பார்த்து ரசித்த முதல் நாள்..!
புத்தகப் பையை மறந்து
பள்ளிக்குச் சென்ற முதல் நாள்..!
என்னைப் பெண்ணாய் நான்
என்னுள் உணர்ந்த முதல் நாள்..!

பார்க்கும் அநேகர்களிடமும் குறைவே இல்லாமல் சிநேகம் பாராட்டிய மலருக்கு அனைத்து வகுப்புகளிலும் நண்பர்கள் அமைந்ததில் ஆச்சரியம் இல்லை. மதிப்பெண்களை அறவே மதிக்காத மலர், தேர்ச்சி மதிப்பெண்களை மட்டுமே பெற்றுவந்தாள்.

கமரு கட்ட கடிச்சிக்கிட்டு..
கடல மிட்டாய் எடுத்துக்கிட்டு..
இரட்டை ஜடை பின்னிக்கிட்டு..
பட்டையத்தான் கிளப்பிக்கிட்டு..
பள்ளிக்கூடம் போனோம்..
அங்க வாத்தியாரக் காணோம்..!

விருப்பமே இல்லாமல் படித்துவந்த மலர், தப்பித்தவறி பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். எந்நேரமும் நண்பர்கள், விளையாட்டு என்றே இருந்த மலருக்கு, கல்லூரியில் சேர துளியும் விருப்பம் இல்லை. தன் அன்னையின் அன்பான வேண்டுகோளுக்கு இனங்க தமிழ்
இலக்கியம் படிக்க முடிவு செய்தாள்.

விரும்பி எதையும்
படிக்கவில்லை..!
படிக்கவும் எனக்கு
பிடிக்கவில்லை..!
இலக்கணமே இல்லாத
என் வாழ்வில்,
இலக்காக மாறியது
தமிழ் இலக்கியமே..!

வெளியூர், புதிய மனிதர்கள், புதிய சுற்றுச்சூழல், மாணவியர்விடுதி, என எண்ணற்றவை மலரின் கல்லூரி வாழ்வில் புதிதாய் வந்தன. இவற்றை எல்லாம் எதிர்கொள்ள மலர் புதிதாய் தன்னை மாற்றவில்லை. கல்லூரியில் நன்கு பழகிய நண்பர்களும் சமயங்களில் விலகியே நின்றார்கள். அது மலருக்கு ஆச்சரியமாகவே அமைந்தது.

பார்த்துப் பேசிப் பழகிய
பாசமிகு நண்பர்கள்..!
கருத்து வெறுத்து விலகிய
நேசமிகு அன்பர்கள்..!
கல்லூரிச் சாலையில்
வாழ்க்கைக் கல்வி கற்றுக்
கொடுத்த ஆசான்கள்..!

- மலரும்..!

- அகமகிழன்

அடுத்த பாகத்தை படிக்க (இதழ் - 3)
 
Last edited:

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
முந்தைய பாகத்தை படிக்க (இதழ் - 2)

இதழ் - 3

முன்கதைச் சுருக்கம் : படிப்பில் விருப்பமே இல்லாமல் இருந்த மலர், வெளியூர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கின்றாள்.

பெண்களில், ஆர்ப்பறிக்கும் அழகை விட, அலட்டிக் கொள்ளாத அழகையே ஆண்கள் அதிகம் விரும்புவர்.
இதில் மலர் இரண்டாம் வகையே. கல்லூரியில் மலரின் மனதில் இடம்பிடிக்க, அவள் பின்னால் சுற்றிய காதல்தாசர்கள் பலர், ஆனால் மலர் எவருக்கும் மசியவில்லை.

செல்லும் வழியெங்கும்
தொடர்ந்தவர்கள்..!
செல்லிடப் பேசியிலும்
தொடர்ந்தவர்கள்..!
தொடராய் என்னைத்
தொடர்ந்து காதல்
கனைகளைத் தொடுத்தவர்கள்..!

தினமும் விடுதியிலிருந்து கல்லூரிக்கு, மலர் பேருந்தில் தன் தோழிகளுடன் சென்று வந்தாள். அன்றொரு நாள்,
பேருந்திற்காக காத்திருந்தபோது, எதார்த்தமாய் அருகில் நின்றவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இளம் வயதில் ஒருவன் பேருந்தின் வருகையை நோக்கி ஏக்கத்துடன் காத்திருந்தான். ஏனோ தெரியவில்லை,
அவனைப் பார்ததும், மலரின் மலர் போன்ற விழிகள் இமைக்க மறுத்துவிட்டன.

என்னைப் பாரா ஒருவனை
ஏனோ நான் பார்த்தேன்..!
எதார்த்தமான ஆசைகள்,
என் மனதில் ஓசைகள்..!
அவன் கண் பார்க்கும்
பெண்ணாக நான் இருக்க
வேண்டும் என்று..!

கல்லூரியில் மலர் சராசரி மதிப்பெண்களைப் பெற்று, ஓரளவு நன்றாகவே படித்து வந்தாள். ஒருநாள் கல்லூரியில் உணவு இடைவேளைக்குச் செல்லும் போது, எதிர்பாராமல் எதிரில் அவனைப் பார்த்தாள், அவனும் இதே கல்லூரியில் படிக்கின்றான் என்பது அன்றுதான் தெரிந்தது. எதார்த்தமான நிகழ்வுதான் என்றாலும், ஏகப்பட்ட கேள்விகள் மலரின் மனதில்.

அவன் எதிலும் என்னைத்
தொடரவில்லை..!
அவன் விழிகளில் மொழிகள்
பேசவில்லை..!
அவன் பெயரும் எனக்குத்
தெரியவில்லை..!
முதல் பார்வையில் மனதை
ஈர்த்தவன் அவனோ..!

மலரின் மனதில் ஏற்பட்ட மாற்றங்களால், எதையுமே எண்ணாத தருணங்களில், அவனைப் பற்றிய எண்ணங்கள்
தானாகவே தொற்றிக்கொண்டது. ஒரே கல்லூரியில் படிப்பதால், அவ்வப்போது அவனைப் பார்க்கவும் முடிந்தது. தயக்கத்தை தகர்த்தெறிந்து நாளையே அவனிடம் பேசிவிட முடிவு செய்தாள்.

எதை எதையோ
எதிர்பார்த்திருந்தேன்..!
வழியினில் விழி வைத்துக்
காத்திருந்தேன்..!
என் கிழக்கினில் உதித்திட்ட
கதிர் அவனோ..!
இந்த மலரினுள் மகரந்தம்
தூவிய மாயவனோ..!

- மலரும்..!

அடுத்த இதழுடன் இந்த சிறுக(வி)தை நிறைவு பெறுகின்றது..! மலரின் வாழ்வில் காதல் மலருமா ?!!

- அகமகிழன்

அடுத்த பாகத்தை படிக்க (இதழ் - 4)
 
Last edited:

Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133

Pphhhaa...awesome..
அவன் கண் பார்க்கும்
பெண்ணாக நான் இருக்க

வேண்டும் என்று..!

eagerly waiting ...
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
Thanks you so much @Aadhini. This is my very first short story. Wrote it about three years back. Oru pennoda parvaila love epdi irukumnu romba etharthama oru kavithai ezhuthanumnu thonuchi, and thats how it started. Oru haiku-va arambichi, short storyah urumariduchi 🙂
 
Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
Thanks you so much @Aadhini. This is my very first short story. Wrote it about three years back. Oru pennoda parvaila love epdi irukumnu romba etharthama oru kavithai ezhuthanumnu thonuchi, and thats how it started. Oru haiku-va arambichi, short storyah urumariduchi 🙂
Arumaiya eluthureenga👌💐. Mudiya poguthunu than sogam😒😒😒
Adutha story ipave think pana arambichidunga😍🙋
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
Thanks Much @Nanci, thodar kathaiya ezhuthuna, oru stagela padikravangaluku interest poirumnu thought. So, kutti kutti stories seriesah ezhutha try panraen. Again, Mikka Nandrigal for all your encouragements, that means a lot..!
 
RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
என்னைப் பாரா ஒருவனை
ஏனோ நான் பார்த்தேன்..!
எதார்த்தமான ஆசைகள்,
என் மனதில் ஓசைகள்..!
அவன் கண் பார்க்கும்
பெண்ணாக நான் இருக்க
வேண்டும் என்று..!
Simply wow👏
 
agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
முந்தைய பாகத்தை படிக்க (இதழ் - 3)

இதழ் - 4 (இறுதி இதழ்)

முன்கதைச் சுருக்கம் : கல்லூரிச் சாலையில் காலடி எடுத்துவைத்த மலரின் வாழ்க்கையில் காதல் மலர்கிறது..!

மலர், தான் பேச விரும்பிய அந்த மாணவனைத் தேடிச் சென்றாள். அவன் உணவறைக்குள் செல்வதை தொலைவிலிருந்து பார்த்துவிட்டு, தன் நடையின் வேகத்தை விவேகமாக்கி விரைந்து சென்றாள். மூச்சிரைக்க ஓடி
வந்தவள் கண்ட காட்சி, உரைக்க எண்ணிய இவள் பேச்சை உறைத்தது. ஆம், அவன் தன் காதலியுடன் மகிழ்ந்திருந்தான்.

நான் விரும்பும்
என்னவனின் கரம்,
அவன் விரும்பும்
இன்னொருவளின் கரத்தில்,
இன்புற்றிருக்கக் கண்டேன்..!

நமது ஆசைகள் அனைத்தும் நிறைவேறுவது இல்லை, நிறைவேறாத நிராசைகள் நிரம்பப் பெற்றதுதான் மனிதவாழ்வு என்பதை மலரின் மனம் ஏற்றுக்கொண்டது. அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொண்ட மனம், அவ்வப்போது தனிமையில் அவனை எண்ணி விழிநீரும் வடித்தது. மலர், தன் மனதை திசை திருப்ப படிப்பில் நாட்டம் செலுத்தினாள்.

என் வாழ்வின்
அழகான பக்கங்களில்,
எழுதப்படாத
எழுத்துக்களாய்
என்றும் அவன்
இருப்பான்..!

நாட்கள் உருண்டோடின, மலர் தனது இறுதி வருட கல்லூரிப் படிப்பைப் படித்துக் கொண்டு இருந்தாள். அன்றொரு நாள், இந்த திடுக்கிடும் தகவல் மலரைச் சென்றடைந்தது. அவளை வளர்த்த அன்னை உடல் நலக்குறைவினால்
படுத்த படுக்கை ஆகிவிட்டார். போதிய வருமானம் இல்லாத காரணத்தால் மருத்துவமும் சரிவர பார்க்கவில்லை. மலர், தன்னையே எண்ணிக் கொண்டிருக்கும் அன்னையைப் பார்க்க விரைந்தாள்.

முதுமையில் வறுமையும்,
தனிமையில் வெறுமையும்,
அன்னையின் மனதினில்
ஒட்டிய ஒட்டுண்ணிகளாய்
உயிரை உறிஞ்சின..!

அன்னையின் உடல் நிலை காரணமாக, மலர் பட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, உடன் இருந்து கவனித்தாள். அதிர்ஷ்டவசமாக, அவள் அன்னை பணிபுரிந்த அலுவலகத்தில் இவளுக்கு வேலை கிடைத்தது. வரும்
வருமானத்தில் அன்னையை கவனித்துக் கொண்டாள். இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் மலர்.

ஆதரவு அளித்து,
அயராது உழைத்து,
அன்பு மழை பொழிந்து,
கண்ணைப் போல்
என்னைக் காத்த என்
அன்னைக்கு கைமாறு
செய்ய விளைகின்றேன்..!

இரயிலில் சிறுமிகள் எழுப்பிய சத்தத்தில், மலரின் கடந்த கால கனவுகள் கலைந்தது. அந்தச் சிறுமிகள், ஒரு புத்தகத்தில் கதை படித்துக்கொண்டு வந்தனர். மலர், சற்றே அதை கவனித்தபின்தான் உணரந்தாள், அது இவளால் எழுதப்பட்ட இவள் வாழ்க்கை பற்றிய க(வி)தை தொகுப்பு என்று..!

ஆம், படிப்படியாய் முன்னேறிய மலர் எழுத்தாளராக மாறிவிட்டாள். ஜன்னலோரம் வீசிய தென்றல் காற்றில், கூந்தலைக் கோதிய மலரின் இதழோரத்தில் சிறு புன்னகைப் பூ மலர்ந்தது..!

நன்றிகளுடன்,

Beautiful feel gud story😍👌💐

என் வாழ்வின்
அழகான பக்கங்களில்,
எழுதப்படாத
எழுத்துக்களாய்
என்றும் அவன்
இருப்பான்..! 👌😍😍😍
 
Top