What's new

வீழ்வேன் என்று நினைத்தாயோ!! - 1

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
வணக்கம்!!

அனைவருக்கும் பாரதியாரின் " தேடிச் சோறு நிதம் தின்று" பாடல் தெரிந்திருக்கும். அப்படி தெரியவில்லை என்றாலும் " வீழ்வேன் என்று நினைத்தாயோ" இந்த வரி தெரிந்திருக்கும் 😃😃

இப்பாடலின் வரிகளை பார்ப்போம்!

தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?

வேடிக்கை மனிதர் என்று பாரதி கூறுவது நம்மை தானோ 🤔🤔

"தேடிச் சோறுநிதந் தின்று -"

சோறு தின்பதற்காக, ஒரு இருப்பது அல்லது இருபத்தி ஐந்து வருடங்கள் படித்தோம். வேலைக்குப் போனோம். சம்பாதித்து உணவு உண்கிறோம். அது தானே முதல். வீடு, கார் எல்லாம் அப்புறம் தானே. சோறு திங்க வாழ்நாளில் பெரும் பகுதியை செலவழிக்கிறோம்.

சரி. அப்புறம் என்ன சாதித்தோம்?

"பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -"

பெரிதாக ஏதாவது சிந்திக்கிறோமா? உலகை மாற்றும் படி, பெரிய கண்டு பிடிப்பு ஏதாவது செய்ய சிந்திக்கிறோமா? Whatsapp, faceboook , chat என்று ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் இந்த வெட்டிக் கதைப் பேசுவதில் போக்குகிறோம்.

சரி நல்லா சாப்பிட்டாச்சு, வாட்சப்பில் forward பண்ணுவதும், வந்த forward களை படிப்பதும், chat ல நாலு பேர் கிட்ட கடல போட்டபடி நாள் ஓடுகிறது.

அப்புறம் என்ன செய்கிறோம்?

" மனம் வாடித் துன்பமிக உழன்று -"

கவலைப் படாத நாள் உண்டா? துன்பம் இல்லாத நாள் உண்டா ? ஒன்றும் இல்லாவிட்டாலும், எதையாவது நினைத்து கவலைப் படுவதே இயல்பாகப் போய் விட்டது. கவலை இல்லாதா நாள் ஒரு நாளே இல்லை என்று ஆகி விட்டது.

சரி, சாப்பாடு, அரட்டை, துன்பம் ஆச்சு. அப்புறம் வேற ஏதாவது செய்கிறோமா?

" பிறர் வாடப் பலசெயல்கள் செய்து "

நாம் கவலைப் பட்டால் போதாது என்று, மற்றவர்களையும் கவலைப் படுத்துகிறோம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, மற்றவர்களை கவலைப் பட வைக்கிறோம்.

" நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -"

வாழ்க்கை இப்படியே போய் விடுகிறது. நரை கூடி, கிழப் பருவம் வந்து சேர்கிறது.

" கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -"

கூற்றுவன்(எமன்) வந்து பிடித்துக் கொண்டு போய் விடுவான் ஒரு நாள்.

" பல வேடிக்கை மனிதரைப் போலே -"

Funny Fellows என்று பாரதி நம்மைச் சொல்வது போலவே இருக்கிறது. 🤭

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

நானும் அப்படி ஆவேனோ என்று யாரிடம் எதிர்த்துக் கேட்கிறார்?

நம்மில் பலர் இதோடு பாடல் முடிந்தது என்று நினைத்திருப்போம். ஆனால் இல்லை. அது மட்டும் அல்ல... இது ஒரு பக்தி பாடல் என்று எவ்வளவு பேருக்கு தெரியும்??

" வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்று யாரிடம் சவால் விடுகிறார் தெரியுமா?🤔

காளியிடம் 🙏😲

மீதி பாடலை பார்த்தல் அது தெரியவரும்.

அடுத்த பதிவில் மீதி பாடலுடன் சந்திப்போம்! 😊😊

அடுத்த பதிவிற்கான இணைப்பு:

images (17).jpeg
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

அடுத்த பதிவில் பார்ப்போம்! 😊😊

View attachment 3132
Super பதிவு 🥰😍 @Aadhini 😍😍😍
 
Top