What's new

🐝🐝🐝தேனீக்கள்🐝🐝🐝 பற்றிய ஸ்வாரஸ்ய தகவல்!!!🥰

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
dh2a6c3a7505bd406c8eab62927c93c797_758c99706f7811ecbff7b7cb1a2ab951910c1d599731c5c86d5277611b0...jpg
ஆண் தேனீக்களின் பரிதாப நிலை 😒😒 தேன் கூட்டில் என்ன நடக்கிறது??

தேனீக்கள் பற்றிய சில ஸ்வாரஸ்யமான தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

மனிதர்களாகிய நாம் பிறரிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள மொழியை பயன்படுத்துகிறோம். இதேபோல், தேனீக்கள், மற்ற தேனீக்களுடன் தொடர்பு ஏற்படுத்தவும், பூக்கள் இருக்கும் இடங்களை பிற தேனீக்களுக்கு தெரியப்படுத்தவும் நடனம் ஆடுமாம். இதில் இரண்டு விதமான நடனங்களை தேனீக்கள் பயன்படுத்துகிறது.

அதில் ஒன்று வட்ட நடனம், மற்றொன்று சுற்று நடனம். ஒரு தேன் கூட்டில் ஒரு இராணித்தேனீ, ஆயிரம் ஆண் தேனீக்கள், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வேலைக்காரத் தேனீக்கள் இருக்கும். இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதில் ஆண் தேனீக்களின் பரிதாப நிலை நமக்கு தெரியாது.

dh2a6c3a7505bd406c8eab62927c93c797_758c99706f7811ecbff7b7cb1a2ab951ed08dd73edb8a2c147565641296...jpg

அதாவது, ஆண் தேனீக்களின் பணி, ராணி தேனீயுடன் இனப்பெருக்கம் செய்வது மட்டுமே. அப்படியிருக்கும் போது, ராணித்தேனீ 65 முதல் 100 அடி உயரத்தில் பறக்கும் போது மட்டும் தான், ஆண் தேனீ, அதனுடன் இனப்பெருக்கம் செய்யும். அதாவது, வானில் பறக்கும்போது மட்டும் தான், இனப்பெருக்கம் செய்ய ராணித்தேனீ அனுமதிக்கிறது.

அவ்வாறு ராணித்தேனீ அனுமதி வழங்கும் போது, ஆண்தேனீக்கள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு அதனை நெருங்கும். ஆனால், இதில் அதிகபட்சமாக, 18 ஆண்தேனீக்களை மட்டும் தான் அனுமதிக்கும் ராணித்தேனீ. மேலும், ஒரு ஆண் தேனீ, ராணித்தேனீயுடன் ஒரு முறை இனப்பெருக்கம் செய்துவிட்டு, வானத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிடுமாம்.

dh2a6c3a7505bd406c8eab62927c93c797_758c99706f7811ecbff7b7cb1a2ab95173baa3d4aabcccfb00d5b7ae78c...jpg
அடுத்தது, இராணித்தேனீயின் வேலை மற்றும் அதிகாரம் என்ன? என்பதை பார்ப்போம். தேன்கூட்டில் லார்வாக்களை உருவாக்குவதும், வேலைகாரத்தேனீக்களை சரியாக வழிநடத்துவதும் தான் இராணித்தேனீக்களின் பணி. ஒரு தேன் கூட்டில் ராணித்தேனீ இல்லையெனில், வேலைக்காரத்தேனீக்கள், என்ன செய்வதென்று தெரியாமல் அலைந்துகொண்டிருக்குமாம்.

இராணித்தேனீ, நாள் ஒன்றிற்கு, 1500 முதல் 3000 முட்டைகளை இடுகிறது. அந்த வகையில், ஒரு ஆண்டிற்கு ஏறக்குறைய, 2 லட்சம் முட்டைகளை இடுகிறது. அடுத்ததாக, ஆண்தேனீயின் மற்றொரு பரிதாபத்தை பார்க்கலாம். ஆண் தேனீக்களுக்கு இனப்பெருக்கம் செய்வது மட்டும் தான் வேலை.
dh2a6c3a7505bd406c8eab62927c93c797_758c99706f7811ecbff7b7cb1a2ab951c769941e83c41ad34a4e38758cf...jpg
எனவே, ஆண் தேனீக்கள் உணவு மற்றும் பாதுகாப்பிற்கு வேலைக்காரதேனீக்களை நம்பி தான் வாழ்கிறது. ஏனெனில், ஆண் தேனீக்களுக்கு தங்களை காக்க, கொடுக்குகள் கிடையாது. மேலும், தேனைத் தேடி எங்கும் செல்லாது. இதனால், வேலைகாரத்தேனீக்கள், ஆண் தேனீக்களை குறைவாகத் தான் நடத்துமாம்.

எடுத்துக்காட்டாக, குளிர்காலத்தில் அதிகமாக பூக்கள் பூப்பதில்லை. இதனால் வேலைக்காரத் தேனீக்களுக்கு தேன் கிடைக்காது. எனவே, தேன் கூட்டில் உணவு தட்டுப்பாடு உண்டாகும். அப்போது, கோபமடையும் வேலைகாரத்தேனீக்கள், எதுவும் செய்யாமல் இருக்கும் ஆண்தேனீக்களை தேன்கூட்டிலிருந்து வெளியேற்றிவிடும்.

dh2a6c3a7505bd406c8eab62927c93c797_758c99706f7811ecbff7b7cb1a2ab951a98fef9a72f0cd3e2bbb6b6d1a2...jpg
அவ்வாறு, வெளியேற்றப்படும் ஆண்தேனீக்கள், பாதுகாப்பு மற்றும் உணவு இல்லாமல், பசியில் இறக்கிறது. அடுத்ததாக ராணித்தேனீ எவ்வாறு உருவாகிறது? என்று பார்ப்போம். ஒரு இராணித்தேனீ வயது முதிர்வு காரணமாக, முட்டையிடும் திறனை இழந்து, இறக்கும் தருவாயில் இருக்கும் போது, வேலைகாரத்தேனீக்கள் சேர்ந்து அடுத்த இராணித்தேனீயை உருவாக்க திட்டம் தீட்டும்.

அவ்வாறு, திட்டமிட்டு, ராணித்தேனீ இறுதியாக இட்ட சில முட்டைகளை தேர்ந்தெடுத்து, அவற்றை, தேன் கூட்டில் ஒரு பெரிய அறையை உருவாக்கி அதில் வைத்துவிடும். அந்த முட்டையிலிருந்து வரும் லார்வாக்களுக்கு, சிறப்பான உணவை வேலைக்கார தேனீக்கள் வழங்கும்.
dh2a6c3a7505bd406c8eab62927c93c797_758c99706f7811ecbff7b7cb1a2ab9510be1e32e202dc96c348c74a4834...jpg
அந்த உணவில், ஒரு வகையான நொதி கலந்திருக்கும். அதை உண்ணும், லார்வா தான் இராணித் தேனீயாக உருமாற்றம் அடைகிறது. எனினும், அந்த நொதியை லார்வா உண்ணாமல், நாம் தடுத்தால், அவை ராணித்தேனீயாக வளராது. சாதாரண, வேலைகாரத்தேனீயாகத்தான் வளரும்.

அடுத்ததாக வேலைக்காரத் தேனீக்களை பற்றி பார்ப்போம். மலட்டு பெண்தேனீக்கள் தான் வேலைகாரத்தேனீக்கள். இவை தான், தன் கூட்டுக்குத் தேவையான தேனை தேடிச்சென்று சேமித்து வைக்கும். மேலும், இந்த வேலைக்காரத்தேனீ ஒரு வருடத்திற்கு மட்டும் 450 கிலோ எடையுடைய, பூக்களில் இருக்கும், குளுக்கோஸ், பிசின், மகரந்தம், நீர் போன்றவற்றை தன் கூட்டிற்கு எடுத்து வருகிறது.
dh2a6c3a7505bd406c8eab62927c93c797_758c99706f7811ecbff7b7cb1a2ab9516b8178acc683aefd026779a8a71...jpg
இந்த வேலைக்காரத் தேனீ, தன் கூட்டை பாதுகாப்பதற்கு தன் உயிரையும் தியாகம் செய்யும். அதாவது, தன் தேன்கூட்டை, தாக்க வருபவர்களை தன் கொடுக்கால் தாக்கிவிடும். அவ்வாறு, அது கொடுக்கை பயன்படுத்தி கொட்டும் போது, அங்கேயே அது உயிரிழக்கிறது. மேலும், இந்த தேனீக்கள், சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தேனை எடுத்து வருகிறது.

ஏனெனில், குளிர் காலத்தில் பூக்கள் அதிகமாக பூக்காத காரணத்தால், அவற்றிற்கு தேன் கிடைக்காது. எனவே, தான் இந்த தேனீக்கள் முன்னதாகவே தேனை சேமிக்கிறது. அடுத்ததாக தேன்கூட்டை பற்றி பார்ப்போம். வேலைகாரத்தேனீக்கள், அதன் உடலில் இருக்கும் ஒருவித மெழுகைகொண்டு தான் தேன்கூட்டை கட்டுகிறது.
dh2a6c3a7505bd406c8eab62927c93c797_758c99706f7811ecbff7b7cb1a2ab951ed2f53b6c9784a14986183fb3fa...jpg
தேன்கூட்டின் அனைத்து அறைகளும், அறுங்கோணத்தின் வடிவத்தில் இருக்கிறது. ஏனெனில், அறுங்கோணம் தான் அறிவியல் படி, அதிகமான எடையை தாங்கும். எனவே, தேன்கூட்டில் இருக்கும் அனைத்து அறைகளும், அறுங்கோண வடிவத்தில் தான் இருக்கும். ஆனால், ராணியின் அறை மட்டும் பெரியதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.

🥰🥰🥰🥰🥰🥰
 
Green

Beta squad member
Beta Squad
Joined
Feb 5, 2022
Messages
35
Points
38
View attachment 205
ஆண் தேனீக்களின் பரிதாப நிலை 😒😒 தேன் கூட்டில் என்ன நடக்கிறது??

தேனீக்கள் பற்றிய சில ஸ்வாரஸ்யமான தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

மனிதர்களாகிய நாம் பிறரிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள மொழியை பயன்படுத்துகிறோம். இதேபோல், தேனீக்கள், மற்ற தேனீக்களுடன் தொடர்பு ஏற்படுத்தவும், பூக்கள் இருக்கும் இடங்களை பிற தேனீக்களுக்கு தெரியப்படுத்தவும் நடனம் ஆடுமாம். இதில் இரண்டு விதமான நடனங்களை தேனீக்கள் பயன்படுத்துகிறது.

அதில் ஒன்று வட்ட நடனம், மற்றொன்று சுற்று நடனம். ஒரு தேன் கூட்டில் ஒரு இராணித்தேனீ, ஆயிரம் ஆண் தேனீக்கள், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வேலைக்காரத் தேனீக்கள் இருக்கும். இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதில் ஆண் தேனீக்களின் பரிதாப நிலை நமக்கு தெரியாது.

View attachment 206
அதாவது, ஆண் தேனீக்களின் பணி, ராணி தேனீயுடன் இனப்பெருக்கம் செய்வது மட்டுமே. அப்படியிருக்கும் போது, ராணித்தேனீ 65 முதல் 100 அடி உயரத்தில் பறக்கும் போது மட்டும் தான், ஆண் தேனீ, அதனுடன் இனப்பெருக்கம் செய்யும். அதாவது, வானில் பறக்கும்போது மட்டும் தான், இனப்பெருக்கம் செய்ய ராணித்தேனீ அனுமதிக்கிறது.

அவ்வாறு ராணித்தேனீ அனுமதி வழங்கும் போது, ஆண்தேனீக்கள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு அதனை நெருங்கும். ஆனால், இதில் அதிகபட்சமாக, 18 ஆண்தேனீக்களை மட்டும் தான் அனுமதிக்கும் ராணித்தேனீ. மேலும், ஒரு ஆண் தேனீ, ராணித்தேனீயுடன் ஒரு முறை இனப்பெருக்கம் செய்துவிட்டு, வானத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிடுமாம்.

View attachment 207
அடுத்தது, இராணித்தேனீயின் வேலை மற்றும் அதிகாரம் என்ன? என்பதை பார்ப்போம். தேன்கூட்டில் லார்வாக்களை உருவாக்குவதும், வேலைகாரத்தேனீக்களை சரியாக வழிநடத்துவதும் தான் இராணித்தேனீக்களின் பணி. ஒரு தேன் கூட்டில் ராணித்தேனீ இல்லையெனில், வேலைக்காரத்தேனீக்கள், என்ன செய்வதென்று தெரியாமல் அலைந்துகொண்டிருக்குமாம்.

இராணித்தேனீ, நாள் ஒன்றிற்கு, 1500 முதல் 3000 முட்டைகளை இடுகிறது. அந்த வகையில், ஒரு ஆண்டிற்கு ஏறக்குறைய, 2 லட்சம் முட்டைகளை இடுகிறது. அடுத்ததாக, ஆண்தேனீயின் மற்றொரு பரிதாபத்தை பார்க்கலாம். ஆண் தேனீக்களுக்கு இனப்பெருக்கம் செய்வது மட்டும் தான் வேலை.
View attachment 208
எனவே, ஆண் தேனீக்கள் உணவு மற்றும் பாதுகாப்பிற்கு வேலைக்காரதேனீக்களை நம்பி தான் வாழ்கிறது. ஏனெனில், ஆண் தேனீக்களுக்கு தங்களை காக்க, கொடுக்குகள் கிடையாது. மேலும், தேனைத் தேடி எங்கும் செல்லாது. இதனால், வேலைகாரத்தேனீக்கள், ஆண் தேனீக்களை குறைவாகத் தான் நடத்துமாம்.

எடுத்துக்காட்டாக, குளிர்காலத்தில் அதிகமாக பூக்கள் பூப்பதில்லை. இதனால் வேலைக்காரத் தேனீக்களுக்கு தேன் கிடைக்காது. எனவே, தேன் கூட்டில் உணவு தட்டுப்பாடு உண்டாகும். அப்போது, கோபமடையும் வேலைகாரத்தேனீக்கள், எதுவும் செய்யாமல் இருக்கும் ஆண்தேனீக்களை தேன்கூட்டிலிருந்து வெளியேற்றிவிடும்.

View attachment 209
அவ்வாறு, வெளியேற்றப்படும் ஆண்தேனீக்கள், பாதுகாப்பு மற்றும் உணவு இல்லாமல், பசியில் இறக்கிறது. அடுத்ததாக ராணித்தேனீ எவ்வாறு உருவாகிறது? என்று பார்ப்போம். ஒரு இராணித்தேனீ வயது முதிர்வு காரணமாக, முட்டையிடும் திறனை இழந்து, இறக்கும் தருவாயில் இருக்கும் போது, வேலைகாரத்தேனீக்கள் சேர்ந்து அடுத்த இராணித்தேனீயை உருவாக்க திட்டம் தீட்டும்.

அவ்வாறு, திட்டமிட்டு, ராணித்தேனீ இறுதியாக இட்ட சில முட்டைகளை தேர்ந்தெடுத்து, அவற்றை, தேன் கூட்டில் ஒரு பெரிய அறையை உருவாக்கி அதில் வைத்துவிடும். அந்த முட்டையிலிருந்து வரும் லார்வாக்களுக்கு, சிறப்பான உணவை வேலைக்கார தேனீக்கள் வழங்கும்.
View attachment 210
அந்த உணவில், ஒரு வகையான நொதி கலந்திருக்கும். அதை உண்ணும், லார்வா தான் இராணித் தேனீயாக உருமாற்றம் அடைகிறது. எனினும், அந்த நொதியை லார்வா உண்ணாமல், நாம் தடுத்தால், அவை ராணித்தேனீயாக வளராது. சாதாரண, வேலைகாரத்தேனீயாகத்தான் வளரும்.

அடுத்ததாக வேலைக்காரத் தேனீக்களை பற்றி பார்ப்போம். மலட்டு பெண்தேனீக்கள் தான் வேலைகாரத்தேனீக்கள். இவை தான், தன் கூட்டுக்குத் தேவையான தேனை தேடிச்சென்று சேமித்து வைக்கும். மேலும், இந்த வேலைக்காரத்தேனீ ஒரு வருடத்திற்கு மட்டும் 450 கிலோ எடையுடைய, பூக்களில் இருக்கும், குளுக்கோஸ், பிசின், மகரந்தம், நீர் போன்றவற்றை தன் கூட்டிற்கு எடுத்து வருகிறது.
View attachment 211
இந்த வேலைக்காரத் தேனீ, தன் கூட்டை பாதுகாப்பதற்கு தன் உயிரையும் தியாகம் செய்யும். அதாவது, தன் தேன்கூட்டை, தாக்க வருபவர்களை தன் கொடுக்கால் தாக்கிவிடும். அவ்வாறு, அது கொடுக்கை பயன்படுத்தி கொட்டும் போது, அங்கேயே அது உயிரிழக்கிறது. மேலும், இந்த தேனீக்கள், சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தேனை எடுத்து வருகிறது.

ஏனெனில், குளிர் காலத்தில் பூக்கள் அதிகமாக பூக்காத காரணத்தால், அவற்றிற்கு தேன் கிடைக்காது. எனவே, தான் இந்த தேனீக்கள் முன்னதாகவே தேனை சேமிக்கிறது. அடுத்ததாக தேன்கூட்டை பற்றி பார்ப்போம். வேலைகாரத்தேனீக்கள், அதன் உடலில் இருக்கும் ஒருவித மெழுகைகொண்டு தான் தேன்கூட்டை கட்டுகிறது.
View attachment 212

Argus 🥰🥰
 
Top