What's new

Happiness-destination?

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
On this note there was a japanese study on how the positive or negative environment affects water . I quote 'In his studies, Emoto found that water exposed to positive words and intentions formed beautiful, symmetrical crystalline structures when the water was frozen, while water exposed to negative words and intentions formed disorganized, asymmetrical structures.,
Beautiful. I thought of quoting this. Not only living things feel, even the supposed inanimate things like water has memory.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
I have felt non living things's feelings too. You can't believe this.
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
சாப்பிடறதுல பாவம் புண்ணியத்தை விடுங்க.

கோழியும், ஆடும் மற்ற உயிரினங்களும் அடித்துக் கொல்லப்பட்டு, அதன் சதை உண்ணப்படுகிறது அப்படித்தானே.

ஆடு பலி கொடுக்கப்படுவதை பார்த்திருக்கீங்களா. ஏன் மனிதனை பலி கொடுக்க வேண்டியதுதானே.
நமக்கு கத்தியில் காயம் பட்டாலே கதறுவோம். அவை ஐந்தறிவு உயிர்கள். வலி அதிகம்.

நீரை விட்டு எடுக்கும்போது மூச்சுத் திணறி துடிதுடித்து உயிர்விடும் மீன்கள்.

கொல்லப்படுவது தெரியும்போது ஒரு உயிரின் உணர்வும் அதன் பயமும் உணவில் கலக்கும் நஞ்சாய் .

வேட்டையாடி உண்பது விலங்குகளின் வேலை. மனிதன் பக்குவப்பட்டவன். அதுவுமில்லாமல் மாமிசத்தை ஜீரணிக்க விலங்குகளுக்கு எளிது.

கணவனைக் கொன்ற பெண்ணொருத்தி அவனை சமைத்து அருகிலுள்ளோருக்கு கொடுத்து விட்டாளாம். Human flesh nu அவங்களுக்கும் தெரியலையாம். கேள்விப்பட்டீங்களா தெரியவில்லை. தடயம் கூட இல்லை.

Human flesh ஆங்காங்கே உண்ணப்பட்டுள்ளது. நல்லா இருக்கு. பசிக்கோ ருசிக்கோ மனிதனையும் உண்ணலாம் என்னும் நிலையும் வரலாம்.

சரி I stop this.
 
Last edited:

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113

சரி I stop this. No more arguments.
Mosquito ungala kadicha enna panuveenga?
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Mosquito ungala kadicha enna panuveenga?
Mosquitoes நான் சாப்பிடவில்லை. சாப்பிட கொல்லவில்லை.

என்னை கடித்து இரத்தம் உண்பதால், என்னைக் காத்துக் கொள்ள கொல்கிறேன். Self protection.

As a doctor you know well about Dengu , malaria. உயிர் போய்டும்.

பாம்பும் அப்படித்தான்.

ஆடு, கோழி, மாடு இதெல்லாம் என்னைத் தாக்காத அப்பாவி உயிரினங்கள்.
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
சாப்பிடறதுல பாவம் புண்ணியத்தை விடுங்க.

கோழியும், ஆடும் மற்ற உயிரினங்களும் அடித்துக் கொல்லப்பட்டு, அதன் சதை உண்ணப்படுகிறது அப்படித்தானே.

ஆடு பலி கொடுக்கப்படுவதை பார்த்திருக்கீங்களா. ஏன் மனிதனை பலி கொடுக்க வேண்டியதுதானே.
நமக்கு கத்தியில் காயம் பட்டாலே கதறுவோம். அவை ஐந்தறிவு உயிர்கள். வலி அதிகம்.

நீரை விட்டு எடுக்கும்போது மூச்சுத் திணறி துடிதுடித்து உயிர்விடும் மீன்கள்.

கொல்லப்படுவது தெரியும்போது ஒரு உயிரின் உணர்வும் அதன் பயமும் உணவில் கலக்கும் நஞ்சாய் .

வேட்டையாடி உண்பது விலங்குகளின் வேலை. மனிதன் பக்குவப்பட்டவன். அதுவுமில்லாமல் மாமிசத்தை ஜீரணிக்க விலங்குகளுக்கு எளிது.

கணவனைக் கொன்ற பெண்ணொருத்தி அவனை சமைத்து அருகிலுள்ளோருக்கு கொடுத்து விட்டாளாம். Human flesh nu அவங்களுக்கும் தெரியலையாம். கேள்விப்பட்டீங்களா தெரியவில்லை. தடயம் கூட இல்லை.

Human flesh ஆங்காங்கே உண்ணப்பட்டுள்ளது. நல்லா இருக்கு. பசிக்கோ ருசிக்கோ மனிதனையும் உண்ணலாம் என்னும் நிலையும் வரலாம்.

சரி I stop this. No more arguments.
இதென்ன அநியாயம். உங்க கருத்தை சொல்லிவிட்டு அதன் பின் அடுத்தவர் கருத்தை கேட்காமல் நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இதென்ன அநியாயம். உங்க கருத்தை சொல்லிவிட்டு அதன் பின் அடுத்தவர் கருத்தை கேட்காமல் நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
Arguments hurt செய்யும் தானே
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Arguments hurt செய்யும் தானே
அதை எடுத்துக் கொள்பவரின் மனநிலை பொறுத்து.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இதென்ன அநியாயம். உங்க கருத்தை சொல்லிவிட்டு அதன் பின் அடுத்தவர் கருத்தை கேட்காமல் நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
நான்தான் நிறுத்தினேன். எல்லாரையும் நிறுத்தவில்லை. உரிமையும் இல்லைங்க
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
நான்தான் நிறுத்தினேன். எல்லாரையும் நிறுத்தவில்லை. உரிமையும் இல்லைங்க
No more arguments.

அப்படின்னா இன்னாங்க…..
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
மஹாவீரர், ஒரு சத்ரியர். மாமிசம் சாப்பிட்டு வந்தார். ஒருநாள் சாப்பிடும்போது, ‘இதுவும் உயிர்தானே, நாம் ஏன் இதைக் கொன்று சாப்பிட வேண்டும்? இது சரியல்லவே’ என்று ஒரு திடீர் சிந்தனை. அப்போதிருந்து மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு முழுவதுமாக தாவர உணவுக்கு மாறினார். இது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இன்னொரு நாள் அவர் தியானம் செய்துகொண்டு இருந்தபோது, அவர் எந்த மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தாரோ, அந்த மரம் அவர் பார்த்த எந்த விலங்கையும்விட, எந்தத் தாவரத்தையும்விட மிகவும் உயிரோட்டமாக இருப்பதை உணர்ந்தார். நான் இன்னும் தவறு செய்கிறேனே. இந்த மரத்திலிருந்து பழத்தைப் பறித்துச் சாப்பிடுகிறேன். இதைச் செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று நினைத்தார். அப்புறமென்ன, காய்கறிகளையும் பழங்களையும் உண்ண மறுத்தார். பழம் தானாகக் கீழே விழும் வரை காத்திருந்து, அதன் பிறகே அந்தப் பழத்தை எடுத்துச் சாப்பிட்டார். பழம் விழவில்லையென்றால் அவர் சாப்பிட மாட்டார். காய்கறிகள் உயிர்ப்போடு இருக்கும்போது அவற்றைச் சாப்பிடமாட்டார். அவை அழுக ஆரம்பித்த பிறகே சாப்பிடுவார்.

இப்படியே சில காலம் கடந்தது. ஒரு நாள் அழுகிய காய் ஒன்றை விழிப்புணர்வுடன் சுவைத்துக் கொண்டு இருந்தார் மகாவீரர். அப்போது அந்த அழுகிய காய்கறி மிகவும் உயிர்ப்புடன் இருப்பதைச் சட்டென உணர்ந்தார். அவ்வளவுதான்... இதுவும் இனி வேண்டாம் என எல்லாம் துறந்து பட்டினியாய் இருக்க ஆரம்பித்தார்.

12 வருடங்களில் 11 வருடங்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தார். அதாவது 11 நாட்கள் சாப்பிடமாட்டார். 12வது நாள் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிடுவார். மீண்டும் 11 நாட்கள் சாப்பிடமாட்டார். 12வது நாள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டுமே அந்த ஒருவேளை உணவையும் சாப்பிடுவார். இப்படி 12 வருடங்களில் 11 வருட காலம் அவர் சாப்பிடவே இல்லை.

மகாவீரரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. பிறகு ஒருநாள், ‘தனக்குள்ளும் உயிர் இருக்கிறதே, மற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இந்த உயிரை மிகவும் துன்பப்படுத்துகிறோமே! என்று உணர்ந்தார். அதன் பிறகே வழக்கம்போல உணவருந்த ஆரம்பித்தார்.

இப்போது கேள்வி வருகிறது... எதை நாம் உண்ணலாம். எதைத் தவிர்க்க வேண்டும் என்று. நாம் உயிர் வாழ, எதையாவது கொன்றுதான் சாப்பிட்டாக வேண்டும். வாழ்க்கையின் தன்மை அப்படித்தான் இருக்கிறது.

தாவரங்களின் தன்மையைவிட விலங்கின் தன்மை மனிதனுக்கு நெருக்கமாய் இருப்பதால்தான், விலங்குகளைத் துன்புறுத்துவதை ‘அஹிம்சை’ என்றும் கருதுகிறோம். ஏனெனில் விலங்குகள் நம்மைப் போல் வாழ்கின்றன. நீங்கள் என் கையை அறுத்தால் ரத்தம் வருகிறது. ஒரு கோழிக்குஞ்சை அறுத்தாலும் ரத்தம் வருகிறது. அதனால்தான் நாம் விலங்கின் தன்மைக்கு நெருக்கமாய் இருப்பதாகக் கருதிக்கொள்கிறோம். உணர்ச்சியின் அடிப்படையில் நாம் அப்படி நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் விலங்கு, தாவரம் இரண்டுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நீங்கள் ஒரு விலங்கைத் துன்புறுத்தினாலும் தாவரத்தைத் துன்புறுத்தினாலும் அந்த இரண்டு உயிர்களுக்கும் வலியும் பாதிப்பும் ஒரே விதமாகத்தான் இருக்கும்.

இந்த உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் எதையாவது கொன்றே ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும், நீங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கோடிக்கணக்கான உயிரினங்கள் இறக்கின்றன. பல தாவரங்கள், கண்களால் பார்க்க முடியாத மிகச் சிறிய உயிரினங்கள் உங்களுக்காகவே இறக்கின்றன.

இப்போது செய்ய முடிவது ஒன்றுதான். சாப்பிடுவதையாவது நன்றியுணர்வுடன் சாப்பிடலாம்.

உணவின் ஒவ்வொரு கவளத்தையும் நன்றியுணர்வுடன் சாப்பிட வேண்டும். ஆம், நன்றியுணர்வுடன் சாப்பிட்டு பாருங்கள். என்ன சாப்பிட்டாலும் அது உடலுக்கு ஆனந்தமாக இருக்கும்.

உடலுக்குத் தேவையான அளவு மட்டும் சாப்பிடுங்கள். சிறப்பான உடல் நலத்துடன் இருப்பீர்கள். இந்த அணுகுமுறை ஒரு சிறந்த மாற்றத்தைக் கொண்டுவரும். பல உயிர்கள் நமக்காக இறக்கின்றன. சிறிதாவது நாம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டாமா? நமக்காக உயிர்விடும் உயிரினங்களுக்காக சிறிதாவது உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்தானே, நன்றியுணர்வுடன் சாப்பிடுங்கள், நம்மால் செய்ய முடிந்தது அதுதான்.

பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி!!
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
ஆடு பலி கொடுக்கப்படுவதை பார்த்திருக்கீங்களா. ஐந்தறிவு உயிர்கள். வலி அதிகம்.

நீரை விட்டு எடுக்கும்போது மூச்சுத் திணறி துடிதுடித்து உயிர்விடும் மீன்கள்.
அந்தணர் என்போர் அறவோர்..
ஏன்?
மற்றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுக லான்.

முந்திய முதல்நடு இறுதியுமானாய்
மூவரு மறிகிலர் யாவர்மற் ற்றிவார்?
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதுங் காட்டி....
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
No more arguments.

அப்படின்னா இன்னாங்க…..
திருத்திக்கொள்கிறேன்
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இதுவும் உயிர்தானே, நாம் ஏன் இதைக் கொன்று சாப்பிட வேண்டும்? இது சரியல்லவே’ என்று ஒரு திடீர் சிந்தனை.
அதற்கு பெயர் உயிர் இரக்கம். சிந்தனை இல்லை.
நாம் உயிர் வாழ, எதையாவது கொன்றுதான் சாப்பிட்டாக வேண்டும்.
விளைச்சலை எடுப்பது வலியை தராது என்பதை சொல்லவும் வேண்டுமா? பல செடிகளில் தானே இழிந்து விடும். மற்றவைகளில் கதிருக்கு சத்து கொண்டு சேர்க்கும் இழை இற்றுவிடும்.
நீங்கள் ஒரு விலங்கைத் துன்புறுத்தினாலும் தாவரத்தைத் துன்புறுத்தினாலும் அந்த இரண்டு உயிர்களுக்கும் வலியும் பாதிப்பும் ஒரே விதமாகத்தான் இருக்கும்
குகை காலத்தைய குறையறிவு சோதனைக்குழாய் அறிவுயல் அறிவுக்கு மெய்த்தவத்தால் சான்றோர் உணர்ந்து உரைத்த பிரமாணங்கள் கடினம் தான்.

உயிரென்றால் இன்னதென்று இன்னும் வரையரை செய்யாத அறிவியலாளர்களிடம் உயிர் வாதையை கற்றறிய முற்படுவதா? உயிருக்கான ஆங்கில மருத்துவ அறிவியலின் வரையரை என்ன கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன். நாங்களும் தெரிந்து கொளிறோம். கண்டுவிட்டார்களா?
 
Top