- Joined
- Feb 20, 2022
- Messages
- 1,250
- Points
- 133
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @Argus மச்சி..
சரியா நாலரை மாசம் ஆச்சு நம்ம சந்திச்சு.. அதுலயும் சரியா பேசுனது ஒரு ரெண்டு மாசம் தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. But you definitely have a special place in my heart.. இந்த chatosphere பத்தி எதுவும் தெரியாம முழிச்சுட்டு இருந்தப்போ வரவேற்று பேசிய வெகு சிலரில் நீயும் ஒருத்தன். நான் கேட்ட சின்ன சின்ன கேள்விக்கும் பதில் சொன்ன உன் பொறுமையை பாராட்டியே ஆகணும்.. ஒரு நாள் நடு ராத்திரி வரைக்கும் தலைல கொட்டி கொட்டி smiley codes சொல்லி கொடுத்துட்டு, இது தேறாதுன்னு தண்ணி தெளிச்சு விட்டியே, ஞாபகம் இருக்கா? ஆனாலும், colon and close bracket மட்டுமே வச்சு சமாளிச்சுட்டு இருந்த என்னை colon P, colon D வரை முன்னேற்றிய பெருமை உன்னையே சேரும் மச்சி (நல்ல வேளை, அப்புறம் UI மாத்திட்டாங்க, ஸோ நீ தப்பிச்ச)
நீ இருக்கும் இடம் எப்பவும் நிறைஞ்சு இருக்கும் மச்சி.. உனக்காகவே smiley restrictions போட்டாலும் heart unlimitedனு கண்டுபிடிச்சு அதுலயே தோரணம் கட்டுன உன் திறமையே திறமை.. நீ இல்லாத chat இப்போ களையிழந்த கல்யாண மண்டபம் மாதிரி இருக்கு. சீக்கிரம் அந்தப் பக்கமும் வா மச்சி.. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.. நீ சீக்கிரமே உடல்நலம் தேறி பழைய பன்னீர்செல்வமா திரும்பி வர கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
ஆனா, forum வந்து பார்த்ததும் தான் உன்னுடைய கவிதை திறமையை பார்க்க வாய்ப்பு கிடைச்சது. நிஜமாவே கலக்குற மச்சி. you have a very good command over the language and i am a bit jealous seeing that. Keep up the good work. என்ன நடந்தாலும் ஒரு positive approachஓட எப்பவும் கலகலன்னு பேசிட்டு எல்லோரையும் அரவணைச்சு பேசுற உன்னுடைய குணத்தையும் பாராட்டியே ஆகணும்.. நீ நினைச்சதை விட பன்மடங்கு உயர்ந்து எல்லா நலனும் பெற்று வாழ்வில் வெற்றி பெற என் வாழ்த்துகள்..
அடுத்த வருஷம் உன்னோட நல்ல மனச புரிஞ்சுகிட்ட ஒரு நல்ல துணைக்கு கேசரி கிண்டிட்டோ இல்ல உன்னோட குவா குவாக்கு டயபர் மாத்திட்டோ உன் பிறந்தநாளைக் கொண்டாட எல்லாம் வல்ல இறைவன் உன்னை ஆசிர்வதிக்கட்டும்.. Wish you again a very happy, super dooper birthday.. Stay blessed.
PS: எனக்கு உன்னை மாதிரி கவிதையா பேச வராது. ஸோ, நீயே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு manage பண்ணிக்கோ மச்சி