What's new

என்னை இடித்த குறட்பாக்கள்.

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இளம் பிராயத்தில் வீ ட்டில் மலையளவு குவிந்திருந்த செல்வங்கள் சிதறுண்டு விடலை பருவத்தில் தொழில்கள் மங்க தொடங்கியது.

கூத்தாட்டு அவை குழாத்தறே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

இந்தக் குறளை கேள்விப் பட்டதில்லை. அதாவ்து டிராமா ஷோவுக்கு கூட்டம் கூடி கலைஞ்சு போற மாதிரி செல்வம் வந்து போகுமாம். பின்பு இதற்கு விளக்கம் சொன்னவர்கள் ஒரு நுட்பத்தை சொன்னார்கள். அந்த ட்ராமா ஷோ டைம் 6 டு 8:30 ன்னா 5:15 இருந்து 6 வரைக்கும் கொஞ்ச கொஞ்சமா வந்து நெறைவாங்க. ஷோ முடியிற வரை அப்டியே தங்கி இருப்பாங்க. ஆனால் ஷோ முடிஞ்சு போறப்போ சேந்தது போல மெல்ல கொஞ்ச கொஞ்சமா கலஞ்சு போகாம பட்ட்டுன்னு காணாம போயிருவாங்க. இதை அழாகா புரிஞ்சது. ஆனால் அப்போ ஏன் பணம் வந்தது ஏன் போனதுன்னு பெரிய தெளிவில்லை.

படிப்படியாக கல்லூரி நாட்களில் அரசின் கல்வி உதவித்தொகை 304 ரூபாய்களும் 732 ரூபாய்களும் கணிசமான தொகையாக தென்பட்ட ஒரு நிதி நிலை. ஒன்னா தொழில் செய்யலாம். அதுக்கு முதல் வேணும். அது மொத்தமும் காலி. அதில்லாட்டி மேற்படிப்பு படிக்கலாம். அதுக்கும் பீஸ் கட்டணும். நிறைய கட்டணம் இருக்குற படிப்புல்லாம் நெனைக்க முடியாது. அதனால் உள்ளதுலேயே கட்டணம் குறைவான படிப்பை தேர்ந்தெடுக்கும் ஒரு கட்டாய சூழல்.. படிப்பு செலவு எவ்வளவென்றாலும் உதவி ஒரு தொலைபேசி அழைப்பு தூரத்தில் இருந்தாலும் மானமும் பெருமையும் தடுத்துவிட்டது. அதனால் உள்ளதிலேயே மிக மிக குறைந்த கட்டணம் உள்ள படிப்பை எடுத்து கிடைத்த மற்ற வாய்ப்புகளை விட்டு விடவேண்டியதாயிற்று. அடுத்தவரிடம் பணத்தை கடனாகக் கேட்க கூட எண்ணம் எழவில்லை. அப்போதும் அசர வில்லை. அறம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இட்ட படி என்றே கடக்க முடிந்தது எளிதாக.

அப்புறமா படித்து முடித்து கூலிவேலையில் சேந்தபின், ஆயுள் பரியந்தம் மாதசம்பளத்தில் கணிசமான தொகையை கட்டவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு புதிதாக ஒரு வில்லா வாங்கி அதற்கு மாதத்தவனைகளை ஓராண்டு ஈராண்டு கட்டிமுடித்த பின்பும் வாங்கிய கடன் வாங்கிய படியே இருந்தது. கூட்டுவட்டிக் கணக்குகள் இரத்தத்திலேயே ஊறியிருந்த்ததால் அதுவும் முன்னரே தெரிந்திருந்தது.

வட்டிக்கொடுமையை தவிர்க்க வேண்டுமென்றால் கடனை சடுதியில் அடைக்க வேண்டும். அப்படியே ஒரு சொத்தை விற்று நம் பங்காக ஒரு தொகையும் கிடைத்தது. இதனை கொண்டு பகுதி கடனை அடைத்துவிட்டு மேலும் தவனைத் தொகைகளை அதிகமாக்கினால் 15 வருட கடன் 4 வருடங்களில் முடிந்துவிடும். இதுவும் நான் அறிந்திருந்த கூட்டுவட்டியின் விந்தை தான். இது ஒரு வழி.

ஆனால் ஒரு சபலம். இன்னொரு வழி அந்தத் தொகையை மார்ஜின் ஆக கட்டி, ஆப்ஷன் மார்க்கெட்டில் சந்தை ஏறும் இறங்கும் என்று ஹெட்ஜ் செய்தால், கட்டியது போல் 10 மடங்கு 12 மடங்குகளாக திரும்ப கொட்டும். செல்வத்தில் புரண்டு வளர்ந்து பின் 10 வருட வறுமை பின் 20 வருட கூலிப்பிழைப்பில் ஒருவித அசதி. வித்தை புத்தியில் இருக்கிறது. ஒரே வீச்சில் முழுகடனையும் அடைத்து, மிதிக்கும் கூட்டுவட்டியின் கொடுமையிலிருந்து தப்பி விடலாம் என்ற ஒரு சபலம். அது தவிர பிள்ளைகளுக்கு கொஞ்சம் சேர்க்கணுமே. நம்ம தலையெழுத்து நம்மளோட முடியட்டும் என்றெல்லாம் எண்ணி.. பறிகொடுத்ததை தானே மீட்டெடுக்கிறோம், முறைப்படி சட்டவிதிகளால் ஏற்படுத்தப்பட்ட சந்தை. யாரையும் களவாடியோ ஏமாற்றியோ இல்லையே என்ற சமாதானம் வேறு சொல்லிக்கொண்டு துணிந்தது.
சுட்டெரிக்கும் வறுமையில் கனன்று நின்ற அறம் சிறிது பணம் வந்ததும் மங்கியது. யாரிடம் விட்டதை யாரிடம் எடுப்பது?

அப்போதிருந்த ஒரு விபரீதமான ஏற்றம் பொருளாதார வளர்ச்சிக்கு நிகரானதாக இல்லை. விழத்தான் போகிறது என்று தோன்றியது. நெடுநாளில் உயரும். குறுகிய காலத்துக்கு அவ்வுயர்வு அதீதம் என்ற மதிப்பீடு.

பேதைப்படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகழூழ் உற்றக் கடை.

இழப்பை ஏற்படுத்தும் ஊழ் தவறான ஒரு விசயத்தை சரி என்று நம்பவைக்கும். இருக்கும் அறிவை அகற்றி விடும். ஆனால் ஆகூழ் தெரியாமலேயே செல்வம் வந்து சேர்வதற்க்கான முடிவுகளை எடுக்க வைக்கும். வாடா வா வா என்று என்னை வரவேற்றது ப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் மார்க்கெட். இதன்படி யூகித்தது போல் நடந்தது. பணையத் தொகை 2 மடங்காக பெருகியது. அப்போதே விற்றுவிட்டு வெளியே வந்திருந்தால் வீட்டுக்கடன் இரண்டே வருடத்தில் முடிந்திருக்கும். ம்ம்ம்ஹூம். 2 மடங்குக்கா போனோம்? 10 மடங்குகளுக்கல்லவா போனது.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்

அடுத்தடுத்த வெளிவந்த அறிவிப்புக்களால் விழுந்த சந்தை மீண்டும் எழுந்தது. ஆப்ஷனில் கட்டிய அத்தனையும் மாயமானது. மார்ஜினா கட்டிய பணமும் போய், வீட்டுகடனும் கட்டவேண்டியதாகி விட்டது.
கவறும் - பகடை காயகள்,
கழகமும் - சூதாடும் இடம்,
கையும் - தாயம் உருட்டுபவரின் கைத்திறன்

கவறும் - டெரிவேட்டிவ்
கழகமும் - இண்டெக்ஸ் கமாடிட்டி பாரெக்ஸ் மார்கெட்
கையும் - சந்தை திரும்புவதை யூகிக்கும் திறமை
தருக்கி - தமது வித்தை திறமையில் செறுக்கடைந்து
இவறியார் - அப்போதையில் அழுந்தியவர்கள்,
இல்லாகியார் - இல்லாமல் போனவர்களானார்.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

ஆக்கம் கருதி - வருமானத்தை எதிர்பார்த்து
முதலிழக்கும் செய்வினை - சேர்த்த முதல் முழுவதும் இழந்து நிற்கும் செயலை
ஊக்கார் அறிவுடையார் - அறிவுடையவர்கள் செய்ய நினைக்க மாட்டார்கள்.

அடடா . ஜஸ்ட் மிஸ். ஒரு சின்ன கால்குலேஷன் எரர் தான். இல்லாட்டி இந்நேரம் 10 மடங்கு வந்திருக்கும் என்று தொடர்வது சூது போதையில் அழுந்துதல். அப்படியே ஜெயிச்சிருந்தாலும் தப்புடானு ஒரு அடி வச்சுட்டார். நீ பெரிய்ய்ய கில்ட்டின்னே வச்சுக்கோ. உன்னால சகுனி மாதிரி சுத்தமா கெஸ் பண்ணி ஜெயிக்க முடியும்னே வை ஒரு பேச்சுக்கு. அப்போவும் சூதாடாதடா அப்டின்னு இடிக்கிறார்.

வேண்டற்க வென்றிடினும் சூதினை மற்றது
தூண்டிற் பொன் மீன் விழுங்கி யற்று

சூதில் வெற்றி என்பது தூண்டில் கொக்கியில் மாட்டியிருக்கும் பொன்மீனை கவ்வி விழுங்கியதற்கு ஒப்பாகும்.
அப்டியே நீ ஜெயிச்ச பணத்த வாங்கி சேமிச்சு வைக்கிறது எப்படின்னா சுடப்படாத மண் பாண்டத்துல தண்ணிய புடிச்சு சேமிச்சு வைக்கிற முட்டாள்தனம் மாதிரின்னு ஓங்கி துப்பிட்டார்.

சலத்தாற் பொருள் செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று

ஏனென்றால் தீதின்றி வந்த பொருள் என்று ஒரு கண்டிஷன் போடுறார் ஐயன். இதுல என்ன தீது ? முறைப்படி பணையம் கட்டி வென்றது தானே அப்டின்னு அழுவுனி ஆட்டம்லாம் மனித புத்தியால் இட்டு கட்டப்பட்ட சட்டத்திற்கு வேண்டுமானால் உட்பட்டு இருப்பதாக கருதிக்கொள்ளலாம். பெருமானின் கணக்கிலேயே அது பற்றுவழி. அது பின்னர் நேர் செய்யப்படும். பிடிங்கி தான். வேற எப்படி? பிடுங்கிய பணம் பறிகொண்டு தான் போகுமாம்.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை

பிறர் அழ நீ கொண்ட செல்வம் எல்லாம் நீ வருந்தி அழ போம் - உன்னை விட்டு போகும். அப்டியே நீ அநியாயமா நல்லா சம்பாரிச்ச பணத்தை இழந்தாலும் பிற்பயக்கும் - உனக்கே வந்து சேந்துரும். கடனாக கூட கேட்க துணியாத மனம் மற்றவர் வருந்தி உழைத்து சேர்த்த பணத்தை ஆட்டத்தில் வென்றிட துணிந்தது மடமை. வென்றிட துணிந்தது மாத்திரம் இல்லை. அதை நினைத்தது தவறு என்று கண்டித்திருக்கிறார்.

நடுவின்றி நன்பொருள் வெஃகின்
குடிபொன்றி அங்கே தரும்

நடுவின்றி - நடு - நீதி இல்லாமல்; நன்பொருள் - நல்ல வழியில் சேர்த்த பொருளை; வெஃகின் - ஆசைப்பட்டால்; குடி பொன்றி - வம்சம் அழிந்து குற்றமும் அங்கே தரும் - தீமைகளால் சூழப்படுவார்கள்.

இப்போ புரிஞ்சுது ஏன்னா தான் தப்பும் தவறுமா எடுத்து வரவு வச்சாலும் உடனே பத்தெழுதி வச்சுருவாங்க. முதலாளி rectification என்ரியும் துல்லியமா ஈவு இரக்கம் இல்லாம போற்றுவார் அப்படிங்கிறது மெல்ல புரிஞ்சுது.
 
Last edited:

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,844
Points
153
Location
India
அடடா . ஜஸ்ட் மிஸ். ஒரு சின்ன கால்குலேஷன் எரர் தான். இல்லாட்டி இந்நேரம் 10 மடங்கு வந்திருக்கும் என்று தொடர்வது சூது போதையில் அழுந்துதல். அப்படியே ஜெயிச்சிருந்தாலும் தப்புடானு ஒரு அடி வச்சுட்டார். நீ பெரிய்ய்ய கில்ட்டின்னே வச்சுக்கோ. உன்னால சகுனி மாதிரி சுத்தமா கெஸ் பண்ணி ஜெயிக்க முடியும்னே வை ஒரு பேச்சுக்கு. அப்போவும் சூதாடாதடா அப்டின்னு இடிக்கிறார்.

.

Nalla explanation Bala sir 👍👍👏👏
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இளம் பிராயத்தில் வீ ட்டில் மலையளவு குவிந்திருந்த செல்வங்கள் சிதறுண்டு விடலை பருவத்தில் தொழில்கள் மங்க தொடங்கியது.

கூத்தாட்டு அவை குழாத்தறே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

இந்தக் குறளை கேள்விப் பட்டதில்லை. அதாவ்து டிராமா ஷோவுக்கு கூட்டம் கூடி கலைஞ்சு போற மாதிரி செல்வம் வந்து போகுமாம். பின்பு இதற்கு விளக்கம் சொன்னவர்கள் ஒரு நுட்பத்தை சொன்னார்கள். அந்த ட்ராமா ஷோ டைம் 6 டு 8:30 ன்னா 5:15 இருந்து 6 வரைக்கும் கொஞ்ச கொஞ்சமா வந்து நெறைவாங்க. ஷோ முடியிற வரை அப்டியே தங்கி இருப்பாங்க. ஆனால் ஷோ முடிஞ்சு போறப்போ சேந்தது போல மெல்ல கொஞ்ச கொஞ்சமா கலஞ்சு போகாம பட்ட்டுன்னு காணாம போயிருவாங்க. இதை அழாகா புரிஞ்சது. ஆனால் அப்போ ஏன் பணம் வந்தது ஏன் போனதுன்னு பெரிய தெளிவில்லை.

படிப்படியாக கல்லூரி நாட்களில் அரசின் கல்வி உதவித்தொகை 304 ரூபாய்களும் 732 ரூபாய்களும் கணிசமான தொகையாக தென்பட்ட ஒரு நிதி நிலை. ஒன்னா தொழில் செய்யலாம். அதுக்கு முதல் வேணும். அது மொத்தமும் காலி. அதில்லாட்டி மேற்படிப்பு படிக்கலாம். அதுக்கும் பீஸ் கட்டணும். நிறைய கட்டணம் இருக்குற படிப்புல்லாம் நெனைக்க முடியாது. அதனால் உள்ளத்துலேயே கட்டணம் குறைவான படிப்பை தேர்ந்தெடுக்கும் ஒரு கட்டாய சூழல்.. படிப்பு செலவு எவ்வளவென்றாலும் உதவி ஒரு தொலைபேசி அழைப்பு தூரத்தில் இருந்தாலும் மானமும் பெருமையும் தடுத்துவிட்டது. அதனால் உள்ளதிலேயே மிக மிக குறைந்த கட்டணம் உள்ள படிப்பை எடுத்து கிடைத்த மற்ற வாய்ப்புகளை விட்டு விடவேண்டியதாயிற்று. அடுத்தவரிடம் பணத்தை கடனாகக் கேட்க கூட எண்ணம் எழவில்லை. அப்போதும் அசர வில்லை. அறம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இட்ட படி என்றே கடக்க முடிந்தது எளிதாக.

அப்புறமா படித்து முடித்து கூலிவேலையில் சேந்தபின், ஆயுள் பரியந்தம் மாதசம்பளத்தில் கணிசமான தொகையை கட்டவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு புதிதாக ஒரு வில்லா வாங்கி அதற்கு மாதத்தவனைகளை ஓராண்டு ஈராண்டு கட்டிமுடித்த பின்பும் வாங்கிய கடன் வாங்கிய படியே இருந்தது. கூட்டுவட்டிக் கணக்குகள் இரத்தத்திலேயே ஊறியிருந்த்ததால் அதுவும் முன்னரேப்தெரிந்திருந்தது.
வட்டிக்கொடுமையை தவிர்க்க வேண்டுமென்றால் கடனை சடுதியில் அடைக்க வேண்டும். அப்படியே சொத்தை விற்று நம் பங்காக ஒரு தொகையும் கிடைத்தது. இதனை கொண்டு பகுதி கடனை அடைத்துவிட்டு மேலும் தவனைத் தொகைகளை அதிகமாக்கினால் 15 வருட கடன் 4 வருடங்களில் முடிந்துவிடும். இதுவும் நான் அறிந்திருந்த கூட்டுவட்டியின் விந்தை தான். இது ஒரு வழி.

ஆனால் ஒரு சபலம். இன்னொரு வழி அந்தத் தொகையை மார்ஜின் ஆக கட்டி, ஆப்ஷன் மார்க்கெட்டில் சந்தை ஏறும் இறங்கும் என்று ஹெட்ஜ் செய்தால், கட்டியது போல் 10 மடங்கு 12 மடங்குகளாக திரும்ப கொட்டும். செல்வத்தில் புரண்டு வளர்ந்து பின் 10 வருட வறுமை பின் 20 வருட கூலிப்பிழைப்பில் ஒருவித அசதி. வித்தை புத்தியில் இருக்கிறது. ஒரே வீச்சில் முழுகடனையும் அடைத்து, மிதிக்கும் கூட்டுவட்டியின் கொடுமையிலிருந்து தப்பி விடலாம் என்ற ஒரு சபலம். அது தவிர பிள்ளைகளுக்கு கொஞ்சம் சேர்க்கணுமே. நம்ம தலையெழுத்து நம்மளோட முடியட்டும் என்றெல்லாம் எண்ணி.. பறிகொடுத்ததை தானே மீட்டெடுக்கிறோம், முறைப்படி சட்டவிதிகளால் ஏற்படுத்தப்பட்ட சந்தை. யாரையும் களவாடியோ ஏமாற்றியோ இல்லையே என்ற சமாதானம் வேறு சொல்லிக்கொண்டு துணிந்தது.
சுட்டெரிக்கும் வறுமையில் கனன்று நின்ற அறம் சிறிது பணம் வந்ததும் மங்கியது. யாரிடம் விட்டதை யாரிடம் எடுப்பது?

அப்போதிருந்த ஒரு விபரீதமான ஏற்றம் பொருளாதார வளர்ச்சிக்கு நிகரானதாக இல்லை. விழத்தான் போகிறது என்று தோன்றியது. நெடுநாளில் உயரும். குறுகிய காலத்துக்கு அவ்வுயர்வு அதீதம் என்ற மதிப்பீடு.

பேதைப்படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகழூழ் உற்றக் கடை.

இழப்பை ஏற்படுத்தும் ஊழ் தவறான ஒரு விசயத்தை சரி என்று நம்பவைக்கும். இருக்கும் அறிவை அகற்றி விடும். ஆனால் ஆகூழ் தெரியாமலேயே செல்வம் வந்து சேர்வதற்க்கான முடிவுகளை எடுக்க வைக்கும். வாடா வா வா என்று என்னை வரவேற்றது ப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் மார்க்கெட்.
இதன்படி யூகித்தது போல் நடந்தது. பணையத் தொகை 2 மடங்காக பெருகியது. அப்போதே விற்றுவிட்டு வெளியே வந்திருந்தால் வீட்டுக்கடன் இரண்டே வருடத்தில் முடிந்திருக்கும். ம்ம்ம்ஹூம். 2 மடங்குக்கா போனோம்? 10 மடங்குகளுக்கல்லவா போனது.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்

அடுத்தடுத்த வெளிவந்த அறிவிப்புக்களால் விழுந்த சந்தை மீண்டும் எழுந்தது. ஆப்ஷனில் கட்டிய அத்தனையும் மாயமானது. மார்ஜில கட்டிய பணமும் போய், வீட்டுகடனும் கட்டவேண்டியதாகி விட்டது.
கவறும் - பகடை காயகள்,
கழகமும் - சூதாடும் இடம்,
கையும் - தாயம் உருட்டுபவரின் கைத்திறன்

கவறும் - டெரிவேட்டிவ்
கழகமும் - இண்டெக்ஸ் கமாடிட்டி பாரெக்ஸ் மார்கெட்
கையும் - சந்தை திரும்புவதை யூகிக்கும் திறமை
தருக்கி - தமது வித்தை திறமையில் செறுக்கடைந்து
இவறியார் - அப்போதையில் அழுந்தியவர்கள்,
இல்லாகியார் - இல்லாமல் போனவர்களானார்.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

ஆக்கம் கருதி - வருமானத்தை எதிர்பார்த்து
முதலிழக்கும் செய்வினை - சேர்த்த் முதல் முழுவதும் இழந்து நிற்கும் செயலை
ஊக்கார் அறிவுடையார் - அறிவுடையவர்கள் செய்ய நினைக்க மாட்டார்கள்.

அடடா . ஜஸ்ட் மிஸ். ஒரு சின்ன கால்குலேஷன் எரர் தான். இல்லாட்டி இந்நேரம் 10 மடங்கு வந்திருக்கும் என்று தொடர்வது சூது போதையில் அழுந்துதல். அப்படியே ஜெயிச்சிருந்தாலும் தப்புடானு ஒரு அடி வச்சுட்டார். நீ பெரிய்ய்ய கில்ட்டின்னே வச்சுக்கோ. உன்னால சகுனி மாதிரி சுத்தமா கெஸ் பண்ணி ஜெயிக்க முடியும்னே வை ஒரு பேச்சுக்கு. அப்போவும் சூதாடாதடா அப்டின்னு இடிக்கிறார்.

வேண்டற்க வென்றிடினும் சூதினை மற்றது
தூண்டிற் பொன் மீன் விழுங்கி யற்று

சூதில் வெற்றி என்பது தூண்டில் கொக்கியில் மாட்டியிருக்கும் பொன்மீனை கவ்வி விழுங்கியதற்கு ஒப்பாகும்.
அப்டியே நீ ஜெயிச்ச பணத்த வாங்கி சேமிச்சு வைக்கிறது எப்படின்னா சுடப்படாத மண் பாண்டத்துல தண்ணிய புடிச்சு சேமிச்சு வைக்கிற முட்டாள்தனம் மாதிரின்னு ஓங்கி துப்பிட்டார்.

சலத்தாற் பொருள் செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று

ஏனென்றால் தீதின்றி வந்த பொருள் என்று ஒரு கண்டிஷன் போடுறார் ஐயன். இதுல என்ன தீது ? முறைப்படி பணையம் கட்டி வென்றது தானே அப்டின்னு அழுவுனி ஆட்டம்லாம் மனித புத்தியால் இட்டு கட்டப்பட்ட சட்டத்திற்கு வேண்டுமானால் உட்பட்டு இருப்பதாக கருதிக்கொள்ளலாம். பெருமானின் கணக்கிலேயே அது பற்றுவழி. அது பின்னர் நேர் செய்யப்படும். புடிங்கி தான். வேற எப்படி? பிடுங்கிய பணம் பறிகொண்டு தான் போகுமாம்.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை

பிறர் அழ நீ கொண்ட செல்வம் எல்லாம் நீ வருந்தி அழ போம் - உன்னை விட்டு போகும். அப்டியே நீ அநியாயமா நல்லா சம்பாரிச்ச பணத்தை இழந்தாலும் பிற்பயக்கும் - உனக்கே வந்து செந்துரும். கடனாக கூட கேட்க துணியாத மனம் மற்றவர் வருந்தி உழைத்து சேர்த்த பணத்தை ஆட்டத்தில் வென்றிட துணிந்தது மடமை. வென்றிட துணிந்தது மாத்திரம் இல்லை. அதை நினைத்தது தவறு என்று கண்டித்திருக்கிறார்.

நடுவின்றி நன்பொருள் வெஃகின்
குடிபொன்றி அங்கே தரும்

நடுவின்றி - நடு - நீதி இல்லாமல்; நன்பொருள் - நல்ல வழியில் சேர்த்த பொருளை; வெஃகின் - ஆசைப்பட்டால்; குடி பொன்றி - வம்சம் அழிந்து குற்றமும் அங்கே தரும் - தீமைகளால் சூழப்படுவார்கள்.

இப்போ புரிஞ்சுது ஏன்னா தான் தப்பும் தவறுமா எடுத்து வரவு வச்சாலும் உடனே பத்தெழுதி வச்சுருவாங்க. முதலாளி rectification என்ரியும் துல்லியமா ஈவு இரக்கம் இல்லாம போற்றுவார் அப்படிங்கிறது மெல்ல புரிஞ்சுது.

Wonderful 👏 வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு சூழ்நிலையிலும் குறள் கூறி விளக்குதல். எத்தனை முறை படித்து படித்து கற்றுக்கொண்டாலும் தெளிந்து கொள்ள இயலாதது. எளிதாகப் பதிகிறது புரிகிறது இப்படி படிக்கையில். எழுதுங்க இன்னும் இன்னும். நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்.
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20

Vidhu ❤️
 
Top