• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

மனது மறக்காத பழைய/இடைக்கால பாடல்கள்

gingerbeehk

Well-known member
அன்பு தமிழ் திரை இசை சொந்தங்களே வணக்கம். இந்த இழையில் தமிழ் திரை இசையில் வந்த பழைய மற்றும் இடைக்கால படங்களின் பாடல்களை...குறிப்பாக 70களிலிருந்து 9௦கள் வரை உள்ள என் சேமிப்பில் இருக்கும் பாடல்களை ஆடியோ வடிவில் பதிவிடலாம் என்று நினைக்கிறேன். அந்த பாடல்களை பற்றிய உங்கள் கருத்துகளையும், நினைவுகளையும் பகிர்ந்துக்கொள்ளலாம். உங்கள் விருப்ப பாடல்களையும் கேட்கலாம்...அவைகள் என் சேமிப்பில் இருக்கும் பட்சத்தில், தர முயற்சிக்கிறேன். உங்கள் அன்பான ஆசிர்வாதங்களுடன் நான்....

ஜாக்
 
வணக்கம். இங்கே என் முதல் பாடல் பதிவு....

படம்: அன்பை தேடி
பாடல்: சித்திர மண்டபத்தில்
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & ஜெயலலிதா

இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1974



இசையுடன் இணைவோம்🙏

ஜாக்

:)
 
சித்திரை மண்டபத்தில்...சில முத்துகள் கொட்டி வைத்தேன்..

முதல்முறை கேட்கிறேன். அருமை 👌
மிக்க நன்றி. இன்னும் இதுபோல் நிறைய அழகான, அரிதான முத்துக்கள் இங்கே கொட்டி மின்ன காத்திருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.
 
மிக்க நன்றி. இன்னும் இதுபோல் நிறைய அழகான, அரிதான முத்துக்கள் இங்கே கொட்டி மின்ன காத்திருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.
Jayalaitha voice 😮😯 ah
 
அதிகம் கேட்டிராத இனிமையான, அரிதான பாடல்.
கூடுதல் தகவல்...விஜயகாந்த் நடித்த முதல் படம் :) .

படம்: இனிக்கும் இளமை
பாடல்: மாலை மயங்கினால் இரவாகும்..
பின்னணி: P.B.ஸ்ரீனிவாஸ் & S.P.சைலஜா

இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1979


இசையுடன் இணைவோம்.
ஜாக் 🙏
 
Last edited:
மற்றுமொரு இனிய பாடல் உங்கள் செவிகளுக்கு விருந்தாக..

படம்: கர்ஜனை
பாடல்: வருவாய் அன்பே..
பின்னணி: T.K.S.கலைவாணன் & S.ஜானகி
இசை: இளையராஜா

வருடம்: 1981


இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
அன்பின் இசை சொந்தங்களே. இங்கே என் அடுத்த பதிவு...

படம்: காலமடி காலம்
பாடல்: எனக்கொரு உதவி செய்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: விஜயபாஸ்கர்

வருடம்: 1977


இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
அடுத்து வருவது...அதிகம் கேட்டிராத அருமையான, கலகலப்பான பாடலொன்று.

படம்: இது கதை அல்ல
பாடல்: வாழ்த்துதான் பார்ப்போமே...
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம், T.L.மகராஜன் & S.N.சுரேந்தர்
இசை: ஷ்யாம்

வருடம்: 1981


இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
அன்பின் இசை சொந்தங்களே... இந்த இழையில் நான் பதிவேற்றும் பாடல்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளையும், விருப்பங்களையும் சொன்னால் கூடுதல் உற்சாகத்துடன் தொடர்ந்து இழையை எடுத்து செல்ல ஆர்வம் வரும்.

நட்பின் நண்பன்,
ஜாக்...
 
நட்புக்களே வணக்கம். அடுத்து இங்கே பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய, கிராமிய மனம் கமழும் அருமையான தெம்மாங்கு பாடல்.

படம்: ஆட்டுக்கார அலமேலு
பாடல்: ஆத்துலே மீன் பிடிச்சு ஆண்டவனே
பின்னணி: P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1977


இசையுடன் இணைவோம்
ஜாக் 🙏
 
இன்று இந்த இழையில், மெல்லிய சோகம் இழைந்தோடும் மனதை கொள்ளைக் கொள்ளும் இனிமையான மெல்லிசை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

படம்: இமைகள்
பாடல்: மாடப்புறாவோ..இல்லை மஞ்சள் நிலாவோ
பின்னணி: மலேசியா வாசுதேவன் & P.சுசீலா
இசை: கங்கை அமரன்

வருடம்: 1983


இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
இனிய மாலை வணக்கம். இன்று இங்கே தரவிருப்பது இனிமையான மற்றுமொரு அரிதான பாடல்தான். எத்தனை பேர் இந்த பாடலை கேட்டிருக்கிறீர்கள்?!!!

படம்: மாங்குடி மைனர்
பாடல்: கண்ணன் அங்கே? ராதை இங்கே?

பின்னணி: வாணி ஜெயராம்
இசை: சந்திரபோஸ்

வருடம்: 1978


இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
இனிய மாலை வணக்கம். இன்று இங்கே தரவிருப்பது இனிமையான மற்றுமொரு அரிதான பாடல்தான். எத்தனை பேர் இந்த பாடலை கேட்டிருக்கிறீர்கள்?!!!

படம்: மாங்குடி மைனர்
பாடல்: கண்ணன் அங்கே? ராதை இங்கே?

பின்னணி: வாணி ஜெயராம்
இசை: சந்திரபோஸ்

வருடம்: 1978


இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

Rare 🎵 🎶 🎵 🎶 collection.

கண்ணன் அங்கே ராதை இங்கே..

உனக்காகவே தந்த உள்ளம் எங்கே..
 
இன்னுமொரு இனிய காதல் பாடல். நான் விரும்பி கேட்கும் 80களின் ஆரம்ப கால பாடலில் இதுவும் ஒன்று. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிப்பரப்பப்பட்ட பாடலும் கூட. நீங்களும் கேளுங்களேன்.

படம்: பகடை பனிரெண்டு
பாடல்: வரவேண்டும் மகராஜன்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சக்கரவர்த்தி

வருடம்: 1982


இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Rare 🎵 🎶 🎵 🎶 collection.

கண்ணன் அங்கே ராதை இங்கே..

உனக்காகவே தந்த உள்ளம் எங்கே..
சந்தேகமின்றி Rare Collectionதான். இந்த மாதிரி இனிய மெல்லிசைகளை செவியுறுவதே தனி சுகம்...
 
Back
Top